Commercial Law
About Lesson

Lesson XVII : Hire Purchase Agreement | வாடகைக் கொள்வனவு ஒப்பந்தம்
by Azaam Ameer (Last Updated : 15 Sep 2022)

.

  1. அறிமுகம்
    1. இலங்கையில் வாடகைக் கொள்வனவு ஒப்பந்தங்கள் Consumer Credit Act No. 29 of 1982 Amended by Act No 7 of 1990  ஆல் ஆளப்படுகிறது. இச்சட்டம் வருவதற்க்கு முன்னால் கூட வாடகை கொள்வனவு ஒப்பந்தங்களை எமது நீதிமன்றங்கள் அங்கிகரித்து வந்தன.
    2. இச் சட்டதிதில் வாடகைக் கொள்வனவு ஒப்பந்ததின் உருவாக்கம், உள்ளடக்கம், வாடகை பெறுனருக்கான பாதுகாப்பு, மற்றும் வாடகைபெறுனர், உரிமையாளர்களுக்கான உரிமைகளும் கடப்பாடுகளுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கம் பெருமளவில் இங்கிலாந்தின்Consumer Credit Act of 1974  ஒத்ததாக உள்ளது.
    3. பிரிவு 31 – உரிமையாளருக்கான வரைவிக்கணம். தவணைக் கட்டணதில் பொருளினை வாடகைக்கு விடுபவரும், அதை விற்பதற்க்கு உடன்படுபவரும், ஒப்பந்த வாசகத்தின் செயற்பாட்டினால் பொருளின் சொத்துவதை வாடகைக்காரருக்கு கைமாற்ற இணங்குபவரும் ஆவார் . 
    4. பிரிவு 3 – ஒப்பந்தம் பின்வரும் வியடங்களைக் கொண்டிருக்க வேண்டும். வாடகைக் கொள்வனவு விலை, பொருளின் பணப் பெறுமதி (Cash Price),  பாதுகாப்பு வைப்பு, என்பன குறிபிடப்படல் வேண்டும். (3 – 2 – அ ) எழுத்துமூலம் செய்யப்பட்டு இரு தரப்பும் ஒப்பமிட வேண்டும், அதன் பிரதி 14 நாட்களுக்கு வாடகைக்காரருக்கு அனுப்பப்படல் வேண்டும்.

         .

  2. வாடகை பெறுனருக்கான உரிமைகளும் கடப்பாடுகளும்.
    1. பிரிவு 4 – வாடகை பெறுனருக்கான பாதுகாப்பு (உட்கிடையான கட்டுறுத்தும் நிபந்தனைகளும்)
      1. 4 (1) (அ) தலையீடற்ற உடமை கொள்ளும் உரிமை, பொருள் கோளாறு அற்றதாக இருத்தல் வேண்டும்.
      2.  4 (1) (ஆ)   சொத்துவம் மாறும் போது உரிமையாளர் பொருளின் உரித்தைக் கொண்டிருக்க வேண்டும்.
      3. 4 (2) பொருள் வணிகம் செய்யத்தகு தகுதியில் இருத்தல் வேண்டும்.
      4. 4 (3) பொருளை என்ன நோக்கத்திற்க்காக வாடகைக் காரர் பெற்றாரோ அதன் நோக்கத்தை அடையக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
      5. 4 (4) பொருள் மாதிரி ஒன்றுடன் தொடர்புறுத்தி பெறப்பட்ட போது, அதேபோல் பொருள் இருக்க வேண்டும்
      6. 4 (5)பொருள் விவரணம் கூறி பெறப்பட்ட போது, அதேபோல் பொருள் இருக்க வேண்டும்
    2. பிரிவு 7 – எந்த நேரத்திலும் தள்ளுபடியுடன் வாகனத்தை வாங்கும் உரிமை. (சட்டதிலும் ஒப்பந்திலும் கூறப்படுள்ள தள்ளுபடியில் எது அதிகமாக உள்ளதோ அதை பெறலாம்)
    3. பிரிவு 8 – எந்த நேரத்திலும் நெரத்திலும் ஒப்பந்ததைத் 14 நாட்கள் எழுத்துமூல அறிவித்தல் மூலம் முடிவுறுத்தலாம்.
    4. பிரிவு 9 – ஒரே உரிமையாளருடன் ஒன்றிற்க்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் காணப்படும் போது அவற்றின் கொடுப்பனவு தொடர்பில் சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ளல்
    5. பிரிவு 10 – வாடகை பெறுனறின் உரிமைகளையும் கடமைகளையும் இன்னொரு நபரிற்க்கு பராதீனப் படுத்தல்.
    6. பிரிவு 11 – சொந்தக்காரார் அவரது உரிமைகளையும் கடமைகளையும் இன்னொரு நபரிற்க்கு பராதீனப் படுத்தல்.
    7. பிரிவு 12 – வாடகை பெறுனர் ஒப்பந்த வாசகங்களுகு இணங்கி ஒழுகுதல் வேண்டும்.
    8. பிரிவு 13 – வாடகை பெறுனறின் பொருளை பராமரிக்க வேண்டிய கடப்பாடு
    9. பிரிவு 14 – வாடகை பெறுனர் பொருளை வாங்கிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கடப்பாடு
    10. பிரிவு 15 – பொருள் எங்கே இருக்கின்றது என்று சொந்தக்காரருக்கு அறிவிக்கும் உரிமை
    11. பிரிவு 16 – சொந்தகாரர் உடமையை மீண்டும் பெறுகையில், கொடுப்பனவு, வாகன பெறுமதி கணக்கிடப்பட்டு மேலதிக தொகை செலுத்தபட்டிருப்பின் அதைப் பெறும் உரிமை.

             .

  3. சொந்தக்காறருக்கான உரிமைகளும் கடப்பாடுகளும்.
    பிரிவு 18 – இரண்டு அதற்க்கு மேற்பட்ட தவiணைக் கொடுப்பனவுகள் மீறப்படுகையில் அல்லது ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்படுகையில், முன்றிவித்தல் கடிதத்தின் மூலம் ஒப்பந்ததை முடிவுறுத்தும் உரிமை சொந்தகாறருக்கு உண்டு.
    1. பிரிவு 19 – அவ்வாறான சந்தர்ப்பத்தில் (பிரிவு 16 இற்க்கு உட்பட்டு) வைப்புத் தொகையையும் கொடுப்பனவத் தொகையையும் வைத்துக் கொள்ளும் உரிமை
    2. பிரிவு 20 – உடமை மீளப் பெறுவதில் உள்ள மட்டுபாடு – 75 செலுத்தப்பட்டால் நீதிமன்ற உத்தரவின்றி மீள உடமைகொள்ள முடியாது.
    3. பிரிவு 21 – பிரிவு 20 இன் படி உரிமையாளர் நீதிமன்றத்தை நாடும் போது நீதிமன்றத்திற்குள்ள தத்துவங்கள்
    4. பிரிவு 22 – தவனைக் கொள்வனவு ஒப்பந்ததை புதிய நபருக்கு மாற்றும் போது பிரிவு 20,21 எவ்வாறு தொழிற்படும் என்ற விடயம்.
    5. பிரிவு 23 – பிரிவு 20 படி நீதிமன்றம் உத்தரவொன்றை இடும் போது (பொருளை ஒப்படைப்பதற்கான கட்டளை) அதை இடைநிறுத்துவதற்கான உரிமை
    6. பிரிவு 24 -தகவல்களை வழங்குவதற்கான கடமை

      .

  4. வாடகைக் கொள்வனவு வரைவிலக்கணத்தில் இலங்கை இங்கிலாந்து வேறுபாடு.
    1. வாடகைக் கொள்வனவு ஒப்பந்தங்கள் என்பதற்க்கான வரைவிக்கணத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்துச் சட்டங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
    2. பொதுவாக வாடகை ஒப்பந்தம் என்பது, எதிர்காலத்தில் வாங்குவதற்கான விருப்பத் தேர்வுடன், தவணைக் கட்டணதிற்க்கு பொருளின் உடமையைக் கையளித்தலாகும். வாங்குவதற்கான ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் அப் பொருள் வாடகை பெறுணரால் வாங்கப்படலாம்.
    3. இங்கு வாடகை பெறுனருக்கு வாங்குவதற்கான விருப்பத் தேர்வு காணப்படுவதால் ஒன்றில் அவர் வாங்கலாம் அல்லது வாங்காமல் விடலாம்.
    4. எனவே வாடகை ஒப்பந்தம் மூலம் பெறபட்ட பொருளை வடகைக்குப் பெற்றவர் வேறு நபருக்கு விற்பனை செய்ய முடியாது.
    5. மாறாக விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றில் (Agreement to sell or conditional sales) பொருளை எதிர்காலத்தில் வாங்கப்படும் என்ற நிபந்தனையில் பொருளின் உடமை வாங்குபவருக்கு மாற்றப்படுகிறது. அங்கு விருப்பத் தேர்வு காணப்படாது.
    6. இலங்கையின் பாவனையாளர் கடன் சட்டம் பிரிவு 31 வாடகைக் கொள்வனவை பின்வருமாறு வரையறை செய்கிறது.
      1. (அ). உரிமையாளரால் தவணை முறையில் கட்டணம் செலுத்தப்படும் என்ற நிபந்தனையில் பொருளின் உடமை மாற்றப்படும் மேலும்
      2. ஆ.  i. வாடகை பெறுனர், ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் அப் பொருளை வாங்குவதற்கான வாய்ப்பு காணப்படும். அல்லது
        ஆ.  ii இறுதித் தவணைக் கட்டணம் செலுத்தப்படும் போது, பொருளின் உரித்து வாடகை ஒப்பந்தக்காரருக்கு சென்றடையும்.
    7. இங்கிலாந்தின் பாவனையாளர் கடன் சட்டம் வாடகைக் கொள்வனவை பின்வருமாறு வரையறை செய்கிறது,
      1. அ. உரிமையாளரால் தவணை முறையில் கட்டணம் செலுத்தப்படும் என்ற நிபந்தனையில் பொருளின் உடமை மாற்றப்படும் மேலும்
      2. ஆ. பெருளின் உரித்து பின்வரும் ஒரு நிகழ்வினால் வாடகை பெறுனருக்கு மாற்றப்படும்.
        1. வாங்க மூடியும் என்ற விருப்பத் தேர்வினைப் பயன்படுத்துவதால்
        2. வாங்குவதற்க்கு ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ள வேறு ஏதும் நிபந்தனைகளைச் செய்வதால்
        3. (பிரிவு 189) உள்ளவாறான வேறு குறித்துரைக்கப்பட்ட நிகழ்வுகளால்.
    8. வாடகைக் கொள்வனவிற்க்கும், விற்பனைக்கான ஒப்பந்ததிற்கும் இடையே காணப்படும் பிரதானமான வேறுபாடு, வாடகைக் கொள்வனவில் பெருளை வாங்குவதற்கான விருப்பத் தேர்வு வாடகை பொறுனருக்கு காணப்படும் விற்பனைக்கான ஒப்பந்ததில் வாங்கப்படும் என்ற உடன்பாடின் பெயரில் பொருளின் உடமை மாற்றபடும்.
    9. இதனால் விற்பனைக்கான ஒப்பந்தத்தில் பெறப்படட பொருளின் உரித்தினை (According to Section 25 (1) of the Sales og Goods Act 1978 and Section 9 of the Factors Act 1889) அவர் அப் பொருளின் உரிமையாளராக இல்லாத போதும் நல்லெண்ண வாங்குனருக்கு (bona fide purchaser) பொருளின் தற்கிழமையை (tile) மாற்றலாம்.
      – மாறாக வாடகைக் கொள்வனவு போது According to Section 25 (1) of the Sales og Goods Act 1978 and Section 9 of the Factors Act 1889  அடிப்படையில் பொருளின் தற்கிழமையை (tile) வாடகைக் கொள்வனவாளர் பெறவில்லை என்பதால் அவரால் அதனை நல்லெண்ண வாங்குனருக்கு (bona fide purchaser) கடத்த முடியாது.
    10. இந் நிலையை மேலும் வலியுறுத்தும் வகையில் இங்கிலாந்தில் Sales of Goods Act 1978 25 (2) புகுத்தப்பட்டு அதில் 25(1) குறிபிடபட்டுள்ள வாங்குனர், பொருளை வாங்க்குவதற்க்கு இணங்கியுள்ளதாக கொள்ள முடியாது என குறிப்பிடுகிறது.
    11. பொதுச்சட்டத்திலும் வடகைக் கொள்வனவாளர் வாங்குவதற்கு இணக்கம் தெரிவிப்பதில்லை என்பதால் பொருளின் தற்கிழமையை (tile) வாடகைக் கொள்வனவாளர் பெறுவதில்லை.
      1. Helby V. Matthews வழக்கில் பியானோவை தவணைக் கட்டணத்தில் பெற்ற நபர் பியானோவை ஈடாக வைத்து பணம் பெற்றிருந்தார்.
        அவ் ஒப்பந்தத்ல் குறித்த தவணைக் காலதிற்க்கு பணத்தை செலுத்திய பின் பியானோவின் உரிமை வாடகைக் கொள்வனவாளரைச் சென்றடையும் என்றும், அவர் விரும்பினால் ஒப்பந்ததை முடிவுறுத்தி பியானோவை மீள் கையாளிக்கலாம் என்றும் குறிபிடபட்டிருந்தது. பியானோவை மீட்க்க வழகிடப்பட்ட போது, வாங்குவதற்கான கடப்பாடு காணப்படாத போது அதை விற்பனைக்கான ஒப்பந்தமாக கருத முடியாது என்று பிரபுக்கள் சபை தீர்ப்பளித்தது.
    12. ஆனால் இலங்கையின் பாவனையாளர் கடன் சட்டம்  பிரிவு 31 ஆ விற்க்கு அமைவாக, இறுதித் தவணைக் கட்டணம் செலுத்தப்படும் போது, பொருளின் உரித்து வாடகை ஒப்பந்தக்காரருக்கு சென்றடையும் என்ற ஏற்பாடு இவ்விடயத்தை விற்பனைக்கான ஒப்பந்தம் என்ற வகுதிக்குள் கொண்டு வருகிறது. (அதாவது இறுதித் தவணைக் கட்டணம் செலுத்தபடும் போது பொருளின் சொந்ததை அதை வாங்குவதற்கான விருப்பம் தெரிவிக்கபடாமலேயே பெற்றுக் கொள்ளலாம்).
    13. எனவே இந் நிலை இலங்கையில் வாடகைக் கொள்வனவில் பெறப்பட்ட பொருட்களை, விற்பனைக்கான ஒப்பந்ததின் மூலம் பெறப்பட்ட பொருள் போன்று கையாளும் சந்தர்ப்பதை உண்டுபண்ணியுள்ளது.

           .

  5. பொருளை மீளுடமை கொள்ளல் – பாவனையாளர் கடன் சட்டம்  வருவதற்க்கு முன்னால்
    1. De silva v. Kuruppu எனும் வழக்கில் வாடகை ஒப்பந்ததில் உரிமையாளர், பாக்கி செலுத்தபடவில்லை என்ற அடிபடையில் பலாத்காரமாக வழக்களியிடம் இருந்து லொரியின் உடமையினை மீளப் பெற்றிருந்தார். நீதிமன்றத் தலையீடு இன்றி வழக்காளி அவ்வறு கையகபடுத்த முடியாது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆராய்ந்த உயர் நீதிமன்றம்; அசையும் ஆதானங்களை நீதிமன்றத் தலையீடு இன்றியும், தேவைக்கு அதிகமான பலப்பிரயோகம் இன்றியும், பொருளை மீளப் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது
    2. Karunapala V The State – > Lorry case – same stance
    3. Fernando v. Jaward  எனும் வழக்கில் உடமையினை மீளப் பெறுதல் தொடர்பான விடயம் விரிவாக ஆராயப்பட்டது. இதில் ஒப்பந்த மீறலில், வாகனத்தின் உடமையை உரிமையாளர் மீளப் பெறலாமா?, அச்சுறுத்தி (பலப் பிரயோகம்) வாகனத்தைப் பெறலாமா?, ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்பந்த வாசகங்கள் காணப்பட்டால் ஒப்பந்தம் செயலிளக்குமா?, ரோம டச்சுச் சட்டதின் படி உடமையை மீள எடுக்க முடியுமா? மீளப் பெறுவது பொதுக் கொள்கைக்கு முறனானதா? என்ற விடயங்கள் அனைதிலும் உரிமையாளருக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வாடகைக் கொள்வனவு ஒப்பந்ததில் ஈடுபடும் போதே வாடகைக் கொள்வனவாளர் இவை அனைத்துக்கும் உடன் படுவதால் அது தொடபில் பின்னர் புகாரளிக்க முடியாது என்று கூறப்பட்டது.

             .

  6. பொருளை மீளுடமை கொள்ளல் – பாவனையாளர் கடன் சட்டம்  இன் பின்னரான நிலைமை
    1. பாவனையாளர் கடன் சட்டம் பிரிவு 18 (1)  ஒன்றிற்கு மேற்பட்ட தவணைக் கட்டணங்கள் செலுத்தத் தவறும் போது, (வாரந்த தவணைக் கட்டணமானல் ஒரு வாரமும், மாதாந்த தவணைக்கட்டணமாக இருந்தால் இரு வாரங்கள் அறிவுறுதல் கொடுக்கபடுவதன் மூலம் ஒப்பந்தத்தை முடிவுறுத்தி, வாகனத்தைப் மீள் உடமை கொள்ளலாம்.
      -> Thus, in Raymond Fernando v. Bank of Ceylon (2000) – Act says 2 weeks notice, agreement says 1 week, held seizure is unlawful.
    2. பாவனையாளர் கடன் சட்டம் பிரிவு 19 இன் படி வாடகை ஒப்பந்தம் ஒன்று முடிவுறுத்தப்படும் போது உரிமையாளர் பிரிவு 16, 21 இற்கு உட்பட்டே அதை பிரயோகிக்க முடியும்.
    3. பிரிவு 16 – பொருளின் உடமை மீளப்பெறப்படும் போது, வாகனதின் ஒப்பந்த பெறுமதி, தற்போதய பெறுமதி, செலுத்தபட்ட தவணைக்கட்டணம், திருத்தச் செலவுகள், உடமை மீளப் பெற ஏற்பட்ட செலவுகள் போன்றன கணகிடப்பட்டு; வாகனத்தின் நிகர பெறுமதி செலுத்தபட்ட தவணைக்கட்டனத்தை விட அதிகம் எனில் மேலதிக தொகையின் வாடகைக்காரரும்;
      அல்லதுவருகையில் குறையும் தொகையினை உரிமையாளரும் பெற்றுக் கொள்ளும் உரிமை காணப்படுகிறது.
    4. பிரிவு 21 – பண்டங்களை மீளப் பெறுவதற்கான வழக்குகளில் நீதிமன்றங்களின் தத்துவங்களை குறித்துரைகின்றன.
    5. பிரிவு 20 – உடமை மீளப் பெறுவதில் உள்ள மட்டுபாடு – பெறுமதியில் 75 % செலுத்தப்பட்டால் நீதிமன்ற உத்தரவின்றி மீள உடமைகொள்ள முடியாது.

           .

  7. பொருளை மீளுடமை கொள்ளல் – இங்கிலாந்து.
    1. இங்கிலாந்தின் பாவனையாளர் கடன் சட்டம் பிரிவு 87, உடமையை மீளக் பெறும் போது பின்பற்ற வேண்டிய மேலதிக நடவடி முறைகளைக் குறிதுரைக்கிறது. ஒப்பந்தம் தொடர்பில் உடமையை மீளப் பெறுதல் உட்பட வேறு ஏதும் நடவடிக்கைகளை எடுப்பதற்க்கு முன்னர் அறிவுறுத்தல் கடிதம் ஒன்று வாடகைக்காரருக்கு வழங்கப்பட வேண்டும். அதில் ஒப்பந்த மீறலின் தன்மை, அம் மீறலுக்கு காணப்படும் நிவாரணங்கள், நிவாரணம் காணப்படாவிட்டால் செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு, என்பவையும் அறிவுறுத்தல் பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் குறிப்பிடப்படல் வேண்டும்.
    2. இங்கிலாந்தின் பாவனையாளர் கடன் சட்டம் பிரிவு 90, வாடகைகாரர் ஒப்பந்ததை மீறுய சந்தர்ப்பத்தில், அவர் பொருளின் விலையில் 2/3 யை செலுத்தியிருக்குமிடத்தில், பொருளின் உரித்து உரிமையாளரிடம் காணப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பொருள் பிரிவு 90 (1) இற்க்கு அமைவாக பாதுகாக்கபட்ட பெருள் – Protected Goods என அழைக்கப்படும். இதனை நீதிமன்ற உத்தரவின்றி மீள உடமைகொள்ள முடியாது.
    3. பிரிவு 91 –  உரிமையாளர் பிரிவு 90 இற்க்கு மாற்றமாக செய்யற்பட்டால் ஒப்பந்தம் முடிவுறுத்தப்படும். வாடகைக்காரர் செலுத்திய முழத் தொகையையும் மீளப் பெறக்கூடியதாக இருக்கும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.