Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Unit 2 : Foundation of the Law of Delict in Sri Lanka (General Principle of Delict)

by Azaam Ameer (Last Updated : 05  Jan 2022)


  1.  
    1. தீங்கியல் என்னும் விடயப்பரப்பு ஆங்கிலச்சட்டத்தில் ஒருவாறாகவும் (Law of Tort),  ரோம டச்சுச் சட்டத்தில் ஒருவாறாகவும் கையாளப்படும்.
    2. ஆங்கிலச்சட்டத்தில் தீங்கியல் என்பதை, சட்டத்தால் பதுகாக்கப்பட்ட அக்கறைகளில் (legally protected interests) இடையூறு செய்வதை தீங்கியல் தவறாக கொள்ளும். ஒவ்வொரு தீங்கியல் விடயமும், உதாரணமாக அத்துமீறி நுழைதல், கவனயீனம், தொல்லை, தூய பொருளாதார இழப்பு என்பன தனித் தனியாக பார்க்கப்பட்டு அவற்றின் மூலகங்கள் அல்லது தேவைப்பாடுகள் வேறுபடும்.
    3. ஆங்கிலச்சட்டத்தில் தீங்கியல் மூலகங்கள் விடயத்திற்கு ஏற்றால் போல் தனித்தனியாக தேவைப்படுத்தப்பட்டாலும் அவற்றின் பொதுவான மூலகங்களாக பின்வருவனவற்றைப் பார்க்கலாம்:
      1. Duty of care  – கவனக்கடப்பாடு
      2. Breach of Duty– கவனக்கடப்பாட்டை மீறல்
      3. Causation – காரணத் தொடர்பு
      4. Injury – ஊறு.
        .
    4. மாறாக ரோம டச்சுச் சட்டத்தில் தீங்கியல் என்பது ஒருவரது, ஆளுமையில், குடும்பத்தில், அல்லது ஆதனத்தில் சேதத்தை ஏற்படுத்தும் தவறான செயல் என விளம்பப்படும். வியங்களைப் பொறுத்து இரு பொதுவான வகுதிகளாக பிரித்து அவற்றை நிறுவத் தேவையான மூலகங்கள் வரையறுக்கப்படும். உதாரணமாக தூய பொருளாதார இழப்பு எனில் அக்குளியன் நடவடிக்கை மூலமும் (Aquilian Actions) , மானநஷ்டம் எனில் அக்சியோ இஞ்சுரியாரம் (actio injuriarum) நடவடிக்கை மூலமும் என்னென்ன விடயங்கள் நிறுவ வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளன.
    5. ரோம டச்சுச் சட்டத்தில் நிறுவத் தேவையான மூலகங்களை வெவ்வேறான அறிஞ்ஞர்கள் சற்றே வித்தியாசமாக பிரித்து ஆராய்கின்றனர் (எவ்வாறு பிரிக்கப்பட்டாலும் அவற்றுள் எல்லா விடயங்களும் ஆராயப்படும்) எனவே:
      .
      1. McKerron இன் கருத்துப்படி Aquilian Action இன் மூலகங்களாக  பின்வருவன காணப்படும் :
        1. Wrongful Conduct – தவறான செயல்
        2. Pecuniary or Petrimonial Loss  – தற்கால, எதிர்கால பெருளாதார நட்டம்
        3. Fault – தவறிற்கான எண்ணம்
          (இம் முறையிலேயே புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது)
          .
      2. Neethling & Potgieter  இன் கருத்துப்படி Aquilian Action இன் மூலகங்களாக  பின்வருவன காணப்படும் : 
        1. Act – செயல்
        2. Wrongfulness – செயலின் தவறான தன்மை
        3. Fault – தவறுக்கான எண்ணம்
        4. Causation  – காரணத்துவம்
        5. Harm– ஊறு
          (இலகு கருதி, இம் முறையிலேயே இந்த குறிப்பில் விடயங்கள் ஆராயப்படுகிறது )
          .
      3. Actio injuriarum இன் மூலகங்களாக  பின்வருவன காணப்படும் :
        1. Wrongful Act  – செயல்
        2. Invasion – செயலின் தவறான தன்மை
        3. Animus Injuriandi – தவறுக்கான எண்ணம்
          .
          .
    6. (1) Act  : செயல்
      1. மனித செயலாக இருக்க வேண்டும் – குறித்த செயலில் மனிதத்தலையீடு இருந்தல் அவசியம். உதாரணமாக, மனிதன் மேய்த்துவந்த மாடு, ஓரு கம்பனியின் செயல் என்பன மனித செயலாக கருதப்படும்.
      2. தன்னிச்சையாக செய்த செயலாக இருத்தல் வேண்டும். (voluntarily)
      3. Positive act (commission)– செய்த செயல் Eg.  ஒலி எழுப்பி தனித் தொல்லை ஏற்படுத்தல் Negative act (omission)–  செய்யாமல் விட்டது Eg. ஆபத்தான மின்சார வேலி தொடர்பாக அறிவிக்க அல்லது எச்சரிக்கத் தவறியது 

        .

    7. (2)  Wrongfulness – செயலின் தவறான தன்மை
      1. Reason for the harm – செயலானது ஊறிற்கான காரணமாக இருத்தல்
      2. குறித்த செயல் –
        1. சட்டவிரோத செயலால் ஏற்பட்டு இருக்க வேண்டும் (அல்லது)
        2. Unreasonableness – நியாயமற்றதாக இருத்தல் வேண்டும்.  இது Bone Mores test மூலம் (Legal Conviction of Community Principle) மூலம் தீர்மானிக்கப்படும். அங்கு பின்வரும் விடயங்கள் ஆராயப்படும். 
          1. Infringement of a subjective right  – பாதிப்புற்ற நபரின் சட்ட உரிமையில் தலையீடு காணப்பட்டதா (உதாரணம் – உழைக்கும் ஆற்றலில் குறைபாட்டை ஏற்படுத்தல்) அல்லது
          2. சட்டக் கடப்பாடு : எதிராளிக்கு இழப்பை தடுக்கும் சட்டக் கடப்பாடு காணப்பட்டு அது மீறப்பட்டதா?(உதாரணமாக – Mtati v Minister of Justice  என்ற வழக்கில், சிறைக் காவலருக்கு சிறைக்கைதி முறையற்ற விதத்தில் தாக்கபடுவதைத் தடுக்கும் சட்டக் கடப்பாடு காணப்படுகிறது) அல்லது
          3. முன்னய செயற்பாடு : சேதத்தை ஏற்படுத்தியவரின் முன்னய செயற்பாடு ஒரு விடயத்தை செய்யும் கடப்பாட்டைத் தோற்றுவித்து, அது செய்யாமல் விடப்பட்டதா (உதாரணமாக – பிரதேச சபை வடிகானை வெட்டி அது தொடர்பில் எச்சரிக்கத் தவறுவவது) அல்லது,
          4. தரப்பினர்களுகிடையிலான விஷேட உறவு : ஏலவே காணப்பட்ட உறவு ஒரு விடயத்தை செய்யும் கடப்பட்டைத் தேற்றுவித்து அது செய்யாமல் விடப்பட்டதா(உதாரணமாக – Silva’s Fishing Corporation Pty Ltd v. Mawaza என்ற வழக்கில், மீன் பிடிக்கச் செல்லும் உழியர்களுக்கு வள்ளங்களுக்கு பாதுக்கப்பு தற்காப்பு உபகரணங்களை வழங்கும் கடப்பாடு உரிமையாளருக்கு காணப்படும்)
            என்பவற்றை ஆராய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும்.
            .
            .
    8. (3) Fault – தவறுக்கான எண்ணம் : Dolus அல்லது Culpa காணப்பட்டதா என்பதைக் கொண்டு தீர்மானிக்கபாடும். 
      .
      1. Dolus (Intentional act) கருத்துடன் செய்யப்பட்டது
        1. Intentional –   நேரடி நோக்கம் காணப்படல் : விளைவு எதிர்பாக்கப்பட்டு விரும்பப்பட்டதாக இருத்தல், தவறுக்கான எண்ணம் (Fault) காணப்பட்டதாக கொள்ளப்படும். (அல்லது)
        2. Knowledge – அறிவு : செயலுக்கான விளைவு இவ்வாறு தான் இருக்கும் என்ற அறிவு அல்லது விளைவு புரிந்தவரால் முன் அனுமானிக்கக் கூடியதாக (Foreceeable) இருந்திருக்குமாக இருத்தல் தவறுக்கான எண்ணம் (Fault) காணப்பட்டதாக கொள்ளப்படும். (அல்லது)
        3. Duty to Refrain – செய்யாமைக்கான கடப்பாடு காணப்படும் போது, அதனைச் செய்தல் தவறுக்கான எண்ணம் (Fault) காணப்பட்டதாக கொள்ளப்படும்.
          .
          .
      2. Culpa (Unintentional act – Negligence ) கருத்தின்றி செய்யப்பட்டது
        1. குறித்த சூழ்நிலையில் எதிரி நியாயமான மனிதனாக (Reasonable man) இருந்திருந்தால் , வழக்காளிக்கு நிகழ்ந்த குறித்த ஆபத்தை அனுமானித்து இருப்பாரா?
        2. அவ் ஆபத்தில் இருந்து பாதுகாப்பு பெற நியாயாமான மனிதன் ஒருவன்  எவ்வகையான நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பான் ? (இரு தரப்பினரும்)
        3. இரு தரப்பினரினதும் நடத்தை எவ்வாறு அமைந்தது ?

          என்ற மூன்று விடயங்களையும் வைத்து அங்கு செயல் கருத்தின்றி செய்யப்பட்டதா என தீர்மானிக்கப்படும் (kruger v. Coetzee)
          (இவ் விடயம் 3வது அலகில் விரிவாக ஆராயப்படும்)
          .
          Pelis and Another v. Arnashaal என்ற இலங்கை வழக்கில், Dolus – கருத்துடன் அல்லது Culpa – கருத்தின்றி செய்யப்படும் செயல்களுக்கான வரைவிக்கணம் கொடுக்கப்பட்டது. இவ் வழக்கில் வழக்காளியின் வயலில் இருந்து நீர் வழிந்தோடுவதை எதிராளிகளான அயல் விவசாயிகள் தடுத்ததனால் இழப்பு ஏற்பட்டது என வழக்கிடப்பட்டது. இதன் போது, சட்ட உரிமையைப் பாதித்த ஒரு செயலை அல்லது செய்யாமையை நிறுவ அது (எதிராளிக்கு நன்மை தரும் விடயமாக அல்லாமல்) வழக்காயை சேதப்படுத்த வேண்டும் என்ற முழு நோக்கத்தில் செய்யபட்டிருக்க வேண்டும் என தீர்பிடப்பட்டு இழப்பீடு நிராகரிக்கப்பட்டது. (முக்கிய வழக்கு பரீட்சை வினாவில் குறிப்பிடுவது பயன்தரும்)
          .
          .
          ((3) Fault– தவறுக்கான எண்ணம் ஆங்கிலச் சட்டத்தில் கவனக் கடப்பாடு னுரவல ழக ஊயசந காணப்பட்டு அது மீறப்பட்டதா என ஆராய்வதன் மூலம் நிறுவப்படும். இவ் விடயம் 3வது அலகில் விரிவாக ஆராயப்படும்)
          .
          .

    9. (4)  Causation – காரணத்துவம் : எதிராளியின் செயலே விளைவுக்கான காரணமாக இருத்தல் வேண்டும். இது இரு விடயங்களை ஆராய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும்.
      1. Factual Causation : உண்மைக் காரணத்துவம் : எதிராளியின் எச் செயல் விளைவுக்கு காரணமாக அமைந்த என்பதை காண்பதாகும். இது பரந்துபட்ட வீச்சைக் கொண்டது. இதை மட்டுப்படுத்த சட்டக் காரணத்துவம் பிரயோகிக்கப்படும்.
      2. Legal Causation : சட்டக் காரணத்துவம் : எதிராளி செய்த செயல் ஏற்படுத்திய எவ் விளைவிற்கு அவர் பொறுப்புடமையாக்கபடலாம். இது வீச்சைக் மட்டுப்படுத்த பயன்படும்.

        S v Mokgethi என்ற வழக்கில், வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், அதன் ஊழியர் தோள்பட்டையில் சுடுபட்டு காயமுற்றார். அவர் அதற்கான சிகிச்கையின் பின்னர் குணமடைந்து சக்கர நாற்காலியில் இருந்து வேலைசெய்து வந்தார். அடிக்கடி அமர்ந்து இருக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றாததால் அவருக்கு படுக்கைப் புண் ஏற்பட்டு அதன் காரணமாக இறந்தார்.
        இங்கு சுடப்படாவிட்டால் அவர் இறந்திருக்கமாட்டார் என்பதால் Factual Causation – உண்மைக் காரணத்துவம் இருக்கின்றது எனலாம். ஆனால் சம்பவம் நடைபெற்று, பாதிபுற்றவர் குணமடைந்து 6 மாதங்களின் பின்னர், மருத்து ஆலோசனை பின்பற்றாததால் ஏற்பட்ட இன்னொரு பாதிப்பில் இறப்பு ஏற்பட்டிருப்பதால் இங்கு Legal Causation சட்டக் காரணத்துவம் இல்லை என தீர்க்கப்பட்டது.
        (இவ் விடயம் 4 வது அலகிலே விரிவாக ஆராயப்படும்)
        .

    10. (5) Harm – ஊறு அல்லது சேதம் : எதிராளியின் செயலே விளைவிற்கான காரணமாக இருந்த வேண்டும். இது இரு விடயங்களை ஆராய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும்.
      1. Patrimonial Loss : ஏலவே ஏற்பட்ட பொருளதார இழப்பு : உதாரணமாக வாகனத்திற்க்கு ஏற்பட்ட சேதம்
      2. Pecuniary Loss  : எதிர்காலத்தில் ஏற்படும் பொருளதார இழப்பு : உதாரணமாக கணவன் இறப்பதனால் மனைவிக்கு ஏற்படும் வருமான இழப்பு
        (Non Patrimonial Loss – பொருளாதாரமற்ற இழப்பு : புகழ், மன உளைச்சல், என்பவற்றிற்கான பெறப்படும் இழ்ப்பீடு. இது யஉவழை iதெரசயைசரஅ இல் கையாளப்படும்)
        .

    11. The Actio injuriarum   – நபரின் புகழுக்கு, அல்லது கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது இன்னொரு நபர் தவறாக பாதிப்பை ஏற்படுத்தும் போது இந் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதற்கான மூலகங்களாக பின்வரும் விடயங்கள் காணப்படும்.
      1. எதிராளியின் தவறான செயல்
      2. செயல் வழக்காளியின் புகழில், ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தல்
      3. Animus injuriandi அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவற்கான எண்ணம்.
        (இவ் விடயம் 10வது அலகிலே விரிவாக ஆராயப்படும்)
        .


Disclaimer

This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz