Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 07 : Nervous Shock
by Azaam Ameer (Last Updated : 14 Sep 2022)


  • Nervous Shock என்றால் உளரீதியான காயம் அல்லது நோய், மன அதிர்ச்சி என்று கூறலாம்.
  • பயம், மன வருத்தம், கோபம், ஏக்கம் என்பவற்றை Nervous Shock  ஆக கொள்ள முடியாது.
  • Post Traumatic Stress Disorder  யை இதற்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். இது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்படும் உளவியல் நோயாகும்.
  • எனவே சட்டம் எதிர்பார்க்கும் விடயத்தைக் குறிக்க Nervous Shock   எனும் பதம் பயன்படுத்துவது சரியானது அல்ல, உண்மையில் சட்டம் தேவைபடுத்தும் விடயம், Nervous Shock ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றின் பின்னர் எற்படும் (Secondary) நீண்ட கால உள நோயாகும்.
  • Dulieu v. White  எனும் வழக்கில் கணவனுடைய வீட்டினுள் எதிராளியின் கார் கவனயீனமாக இடித்துக்கொண்டு சென்ற போது வழக்காளிக்கு கருக்கலைவு ஏற்பட்டது. இங்கே வழக்களிக்கு குறித்த செயலால் வழக்காளிக்கு உடனடியாக உடல் ஊறு ஏற்படும் என அனுமானிக்கக் கூடியதாக இருந்தது என்பதாலும் (foreseeable of harm) சம்பவ இடத்தில் வழக்காளி இருந்ததால் அவர் முதன்மையாக பாதிக்கபட்டவர் என்பதினாலும் நரம்பு மண்டல அதிர்ச்சி ஏற்பட்டது என தீர்க்கபட்டது.
  • உடல் காயத்தின் போது அல்லது அவ்வாறு காயம் ஏற்படும் என்ற பயத்தினால் Nervous Shock ஏற்படும் போது அதற்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படாது.
  • ஆனால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்பதானால் அல்லது அறிவதனால் Nervous Shock ஏற்படும் போது நீதிமன்றங்கள் மேலதிகமான விடயங்களைத் தேவைப்படுத்தும்.
  • ஆரம்பத்தில் இது தொடர்பில் மாறுபட்ட தீர்ப்புகள் வெளிவந்தாலும் தற்போது இதற்க்காக யார் எச்சந்தர்ப்பத்தில் இழப்பீடு கோரலாம் என கோட்பாடுகளை விதித்து வழக்குகளைத் தீர்மானிக்கின்றன.
  • McLoughlin v. O’Brien  வழக்கில், வாகன விபத்து ஒன்றில் வழக்காளியின் பிள்ளையும் கணவனும் கடும் காயங்களுக்கு ஆளான அதே வேளை இன்னொரு பிள்ளை இறந்து போனது. உறவினர் மூலம் சம்பவத்தை அறிந்த வழக்காளி, பின்னர் வைத்தியசாலை சென்று பாதிக்கப்பட்டவர்களின் கோரக் காட்சியைக் கண்ணுற்றார்.
    மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்காளி சம்பவம் நடைபெற்ற இடத்திற்க்கு அருகில் இல்லை என்பதால் Nervous Shock இல்லை என தீர்ப்பளித்தது.
    இருப்பினும் பிரபுக்கள் சபையில், Nervous Shock உள்ளது என தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நீதியரசர்களும் வெவ்வேறான காரணங்களைத் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற உடனே அதிர்ச்சி ஏற்பட்டதால் Nervous Shock உள்ளது என ஒரு நீதியரசரும், எதிராளி ஊறினை அனுமனிக்கக் கூடியாத இருந்திருப்பின் அது மட்டும் போதுமானது என்று இன்னொரு நீதியரசரும், அது மட்டும் போதாது எச் சூழ்நிலையில் Nervous Shock ஏற்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று மற்றொரு நீதியரசரும் வெவ்வேறான காரணங்களைத் தீர்ப்புக்கான காரணங்களாக தெரிவித்தனர்.
  • Alcock v. Chief Contable of South Yorkshir Police  வழக்கில் உதைப்பந்தாட்ட போட்டியில் அனுமதிக்கபட்ட பார்வையாளர்களை விடவும் அதிகமாக அனுமதிக்கபட்டதன் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் 95 பார்வையாளர்கள் கொல்லப்பட்டும் 400 இற்க்கும் அதிகமானோர் காயமுற்றும் இருந்தனர். Nervous Shock    இற்கான வாதம் நிராகரிக்கபட்ட இவ்வழக்கில் இரண்டாம் நிலையில் பாதிபுற்றோர் Nervous Shock    யை நிறுவுவதற்க்கான விடயங்கள் கூறப்பட்டது.
    • வழக்காளிக்கு நரம்பு மண்டல அதிர்ச்சி ஏற்படும் என எதிராளியால் அனுமானிக்கக் கூடியதாக இருத்தல். பிரதான விடயமாகும்.
    • ஊறை உண்மையில் எதிர்கொண்டவருக்கும் வழக்காளிக்கும் இடையில் அண்மித்த தொடர்பு காணப்பட வேண்டும்.
    • எவ்வகையான உறவுகள் என்ற வகைபடுத்தல் இல்லை, அதிர்சியுறத்தக்கவாறான காதலும் பற்றும் இருத்தல் வேண்டும்.
  • வழக்காளிக்கும் சம்பவத்திற்க்குமான அண்மித்த தொடர்பு
    • நேரடிச் தெடர்பு (சம்பவ இடத்தில் இருத்தல்) அல்லது McLoughlin v. O’Brien வழக்கில் இடம்பெற்றது போன்று சம்பவம் நடைபெற்ற பின்னர் உடனடியாக நடைபெற்ற விடயமாக இருத்தல் வேண்டும்.
  •  ஊறின் தன்மை
    • உளரீதியான காயமாக இருத்தல் வேண்டும்.
    • உடனடியாக ஏற்பாடிருக்க வேண்டும்
    • நீண்டகாலத்திற்கு படிப்படியா ஏற்படும் இருத்தலாகாது
  • இலங்கை வழக்கான Priyani Soysa V. Rienzie Arsecularatne இல் Nervous Shock   ஆராயப்பட்டடு அதற்கான தேவைப்படுகளாக,
    • வழக்காளிக்கு நரம்பு மண்டல அதிர்ச்சி ஏற்படும் என எதிராளியால் அனுமானிக்கக் கூடியதாக இருத்தல்.
    • உளரீதியான காயமாக இருத்தல் வேண்டும். (கவலை மன அழுத்தம், ஏக்கம் என்பவற்றிற்க்காக வழக்கிட முடியாது)
  • வேண்டுமென்று அதிர்ச்சி ஏற்பட வேண்டும் என்று செய்யப்பட்ட செயலால் Nervous Shock    ஏற்பட்டால் கழசநளநநலயடிடைவைல பார்க்கபடாது. ஏன் எனில் அது எதிர்பாக்கப்பட்டு செய்யப்பட்ட செயல் என்பதால்.
    • Wilkinson v. Downton வழக்கில், வழக்காளியின் கணவன் கடுமையாக காயமுற்றுள்ளார் என வேடிக்கைக்காக சொன்ன போது அவர் Nervous Shock ற்க்கு உட்பட்டார். எனவே அங்கு foreseeability யை பார்க்கத் தேவை இல்லை என தீர்க்கபட்டது.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.