Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 05 : Defenses to Negligence
by Azaam Ameer (Last Updated : 14 Sep 2022)


  1. Introduction  
    1. தீங்கியல் வழக்கில் எதிராளி கவனயீனத்திற்கான மூலகத்தில் ஒன்றை மறுதலிக்கும் போது, தீங்கியல் பொறுப்புடமையில் இருந்து விடுபடலாம்.
      .
    2. அல்லது Contributory negligence or voluntary assumption of risk  இருந்தது என்று நிறுவும் போது பொறுப்புடமையைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
        
  2. Contributory negligence
    1.  வழக்காளி எடுக்க வேண்டிய போதுமான பாதுகாப்பை அல்லது கவனத்தை எடுக்க தவறுகையில், குறித்த ஊறில் வழக்காளிக்கும் பங்குள்ளது என நிறுவுவதன் மூலம் எதிராளி தனது பொறுப்புடமையைக் குறைத்தல்.
      .
    2. ஆரம்பத்தில் நீதிமன்றங்களில் All or Nothing rule எனும் அடிப்டையிலேயே விடயங்கள் தீர்க்கபட்டன.
      .
      Butterfield v. Foresters எனும் வழக்கில் வீதியை மறிக்கும் வகையில் நடப்பட்ட கம்பத்தை வழக்காளி தூரத்தில் இருந்து அவதானிக்கக் கூடியதாக இருந்தும் வேகமாக வந்து மோதியதில் வழக்காளிக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் இழப்பீடு முற்றாக நிராகரிக்கப்பட்டது.
      .
    3.  இவ்வாறு All or Nothing rule எனும் அடிப்படையில் விடயங்கள் தீர்க்கபட்டால், வழக்காளியின் சிறிய தவறின் காரண்மாக கூட, அவருக்கான மொத்த இழப்பீடும் நிராகாரிக்கப்படும் நிலை காணபட்டதால் இதன் அசாதாரன தன்மையை உணர்ந்த நீதிமன்றங்கள், Last Opportunity Rule எனும் புதிய கொள்கையினைப் பின்பற்றத் தொடங்கியது.
      .
    4. Last Opportunity Rule  இல் வழக்காளி பக்கம் தவறு இருந்திருந்தாலும் எதிராளிக்கு ஊறைத் தவிர்ப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் இருந்திருக்குமானால், வழக்காளிக்கு இழப்பீட்டை முழுமையாக பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
      .
      Davies v. Mann எனும் வழக்கில் வழக்களியின் கவனயீனத்தால் அவர் கட்டி வைதிருந்த கழுதை வீதியின் குறுக்கே ஓடிச் சென்று, வீதியில் சென்ற இன்னொரு வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதால் கழுதை இறந்தது. வாகனமோட்டி போதிய கவனம் எடுத்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பதனால், ஊறைத் தவிர்ப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் அவருக்கு இருந்தது எனும் அடிப்ப்படையில் வழக்காளி இழப்பீடு முழவதையும் பெற்றுக்கொண்டார்,
      (இலங்கை வழக்கு Daniel v. Cooray   – நொத்தரிசு பிழையாக Mortgaged Bond யை எழுதியதால் வழக்காளிக்கு கடனை மீளப் பெற முடியாமல் போனமை)
      .
    5. Last Opportunity Rule   மேலும் – விருத்தியடையச் செய்து Constructive Last Opportunity Rule யையும் நீதிமன்றங்கள் பயன்படுத்த தொடங்கியது.
      .
    6. Constructive Last Opportunity Rule, ஒரு நபர் புரிந்த (எதிராளி அல்ல) ஊறைத் தடுக்க இருந்த இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியாமல் போனதற்கு
      3ம் நபரின் (எதிராளி) செயல் காரணமாக இருந்தால், அவ்வாறு இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறிய செயலிற்கான பெறுப்புடமை 3ம் நபாரிற்க்கு (எதிராளி) சாட்டப்படும்.
      .
      British Columbia Electric Railway v. Loach  வழக்கில் மின்சார காரை ஓட்டிச் சென்ற ஒரு நபர் ரயில் கடவையைக் கடந்த மனிதன் மீது கவனயீனமாக மோதி இறப்பை ஏற்படுத்தி இருந்தார். காரில் தரம் குறைந்த Break System காணபட்டதால் கார் ஓட்டிக்கு விபத்தைத் தடுக்கும் இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியாமல் போனது. அதனால் அப் பொறுப்புடமை கார் கம்பனிக்குச் சாட்டபட்டது (Constructive).
      .
    7. இதன் பின்னர், வழக்காளியின் பக்கமும் தவறு இருக்கும் போது முழுமையான இழப்பீட்டிற்க்கு எதிராளியை பொறுப்பாக்குவது நியாயமற்றது என உணர்ந்த நீதிமன்றங்கள்Apportionment of damages எனும் விதியியைப் பின்பற்றத் தொடங்கியது.
      .
    8. Apportionment of damages  விதி இங்கிலாந்தில் Maritime Convention Act of 1911 எனும் சட்டத்தின் மூலம் முதலாவதாக அறிமுகம் செய்யபட்டது.
      .
    9. இரண்டு அல்லது இரண்டிற்க்கு மேற்பட்ட கப்பல்கள் விபத்துக்குள்ளாகும் போது, தரப்பினர்களின் தவறுகளின் வீச்சின் (அளவின்) அடிப்படையில் பொறுப்புடமை சாட்டபடும். அவ்வாறு தவறுகளின் வீச்சினை வேறுபடுத்தி அறியமுடியாவிடின், பொறுப்புடமை சமமாகப் பகிரப்படும். எனவே Apportionment of damages விதி இல் பின்வரும் மாற்றத்தை உண்டுபண்ணியது
      1. Last Opportunity Rule> Constructive Last Opportunity Rule  விதிகளை இல்லாமல் செய்தது
      2. பொறுபுடமையில் இருத்து கவனயீன்மாக ஊறில் பங்கெடுத்த எந்தத் தரப்பும் பொறுப்புடமையில் இருந்து முற்றாக விலக முடியாமல் செய்தது
      3. தவறின் அளவிற்க்கேற்ப்ப பெறுப்புடமையை ஏற்கச் செய்தது.
        .
    10. இலங்கையில் Contributory Negligence, Law Reform (Contributory Negligence and Joint Wrongdoers) Act No 12 of 1968  சட்டத்தால் ஆளப்படுகிறது.
      1. Sec 3 (1) (a) – வழக்காளியின் பக்கமும் கவனயீனம் இருந்தது என்று ஊறிற்கான பொறுப்புடமையில் இருந்து விலக முடியாது. நீதிமன்றங்கள் ஏற்பட்ட ஊறில் தரப்பினரின் தவறின் வீச்சின் அடிப்படியில் ஒப்புரவான முறையில் ஒவ்வொரு தரப்பினருக்குமான பொறுப்புடமையைத் தீர்மானிக்கும்.
      2. Sec 3 (1) (b) – Last Opportunity Rule   பயன்படுத்த முடியாது.
        .
    11. இங்கிலாந்தில் Contributory Negligence, Law Reform (Contributory Negligence) Act  of 1945  1945 சட்டத்தால் ஆளப்படுகிறது. (Sec 1)
      .
    12. Contributory Negligence  இல் வழக்காளிக்கு பொறுப்புடமையைச் சாட்ட அவருக்கு குறித்த கவனயீனத்தில் Duty of Care இருந்தது என்று கூறத் தேவையில்லை, Reasonable Care  இருந்தது என்று நிறுவினாலே போதுமானது.
      1. Arnolis Hamy v. Alagan  வழக்கில் சக ஊழியரது கவனயீனத்தல் வழக்காளி காயமுற்றார். எதிராளியான தொழில் தருனரில் பிழை இருந்தாலும், உரிய பாதுகாப்புடன் வேலை செய்ய அறிவுறுத்தபட்ட போதிலும் அவற்றைக் கருத்தில் எடுக்காமல் வழக்காளி செயற்பட்டது அவர் போதுமான கவனத்தை எடுக்க தவறியுள்ளர் என நீதிமன்றம் தெரிவித்தது.
        .
      2. Reasonable Care  என்றால் குறித்த ஊறினை அனுமானிக்கும் தேவைப்பாடு இருக்கும் போது, அதை தடுபதற்கான நியாயமான செயற்பாட்டில் அவர் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதாகும் என Jones V. Livox Quarries Ltd என்ற வழக்கில் கூறப்பட்டது.
        .
      3. ஆபத்து அற்றது என ஊகிக்கும் உரிமை வழக்காளிக்கு இருக்கும் போதும் அவர் கவனமெடுக்கத் தவறிவிட்டார் என கொள்ள முடியது.
        1. Gee v. Metropolitan Railway   என்ற வழக்கில் ரயில் கதவு சரியாக மூடப்பட்டதனால் அதில் சாய்ந்து பயணித்த வழக்காளி வெளியில் விழுந்து காயமுற்றார். கதவு சரியாக மூடபட்டிருகும் என்று ஊகிக்கும் உரிமை வழக்காளிக்கு உள்ளதால் இல்லை என தீர்க்கபட்டது.
        2. W H Bus Company V. Samaranayake   வழக்கில் வழக்காளியின் கார் எதிராளியின் விதிகளை மீறி பயணித்த பஸ்சில் மோதிய விபத்து ஏற்பட்டது. Contributory Negligence உண்டு என வாதிட்ட போது, எதிரளி விதிகளைப் பின்பற்றி நடப்பார் என ஊகிக்கும் உரிமை வழக்காளிகு உண்டு என்னும் அடிப்பையில் அவ்வாதம் நிராகரிக்கப்பட்டது.
          .
      4. Dilemma Principle  (இரு பிசாசுகளில் ஒன்றைத் தேர்ந்தடுக்கும் உரிமை)
        Jones V. Boyce வழக்கில் கோக்சு வண்டி கட்டுபாட்டை இழந்து சென்றுகொண்டிருந்தபோது வழக்காளி பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போது காயமுற்றார். கோச்சு வண்டி ஆபத்துகள் இன்றி நிறுத்தபட்டது. வழக்காளி குதிக்காமல் இருந்திருந்தால் ஊறைத் தவிர்திருக்கலாம் என்ற வாதத்தை Dilemma Principle  கோட்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் நிராகரித்தது.
        .
      5. சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனகள் போதிய கவனம் எடுக்க தவறினார்கள் என கூறமுடியது. நிலைமைக்கு ஏற்றவாறு பொறுப்புடமையில் இருந்து முழுமையாக அல்லது பகுதியளவில் விடுவிக்கபடுவார்கள்.
        Morales v. Ecclestone வழக்கில் 11 வயது சிறுவன் வீதி விபத்தில் காயமுற்ற போது குறித்த வழக்கின் நிகழ்விற்கேற்ப்ப அச் சிறுவன் இழப்பின் 75 வீததிற்க்கு பொறுப்புடமை சாட்டப்பட்டான்.
        .
    13. Contributory Negligence இல் வழக்காளிக்கு பொறுப்புடமையைச் சாட்ட வழக்களியின் கவனயீனம் குறித்த ஊறில் பங்களிப்பு செலுத்தியது என நிறுவ வேண்டும். உதாரணம், மோட்டார் சைக்கில் ஓட்டும் நபர், எதிராளியின் முழுமையான தவறால் விபத்தில் சிக்கி காயமுற்றாலும், தலைக் கவசம் அணியாமல் இருந்ததால் ஏற்பட்ட ஊறில் வழக்காளியின் கவனயீனம் பங்களிப்புச் செய்தது என கொள்ளப்படும்.
      .
      Froom v. Butcher  வழக்கில் எதிராளியின் முழுமையான கவனயீனத்தால் வகன விபத்து நடைபெற்றது. இருப்பினும் வழக்காளி இருக்கைப் பட்டி அணிந்திருக்கவில்லை என்பதனால் இழப்பீட்டுத் தொகை குறைக்கபட்டது.

      .

    14. Contributory Negligence யை நிறுவும் பொறுப்பு எதிராளிக்கு உள்ளதாக Perara Vs. Charles வழக்கில் கூறப்பட்டது.
      .
    15. Apportionment –  Sec 3 (1) (a) Contributory Negligence, Law Reform (Contributory Negligence and Joint Wrongdoers) Act No 12 of 1968   அமைவாக ஒப்புரவின் அடிபடையில் தரபினரின் பொறுப்புகளை ஆராய்ந்து பார்த்து பொறுப்புடமை விகிதங்கள் தீர்மானிக்கபடும்
        
           .
  3. Consent or Voluntary Assumption of Risk
    .
    1. ஆபத்தை எதிகொள்ள சம்மதித்துவிட்டு பின்னர் அது தொடர்பில் குற்றம் சாட்ட முடியாது எனபது volenty non fit injuria எனும் மூதுரையில் இருந்து பெறப்பட்டது.
      .
    2. Voluntary Assumption of Risk யை நிறுவ வழக்காளிக்கு
      1. ஆபத்து பற்றி தெரிந்து இருந்து
      2. ஆபத்து ஏற்பட்டல் உண்டாகும் விளைவு பற்றி (இழப்பீடு கோர முடியாது என்பது உட்பட) அறிந்திருந்தார்
      3. ஆபத்தை தனிச்சையாக ஏற்று நடந்திருந்தார் (செயலாற்றியிருந்தார்)
        என எண்பிக்க வேண்டும்.
        .
    3. எதிராளி வேண்டுமென்று அல்லது கருத்துடன் (Intentional) செய்யும் தவறிற்க்கு வழக்காளியின் சம்மதம் இருந்தது என கூற முடியாது.
      1. விளையாட்டு போட்டியில் எதிர்த் தரப்பு விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் காயங்களுக்கும் சேர்த்து அதில் பங்குபற்றியவர் சம்மதம் தெரிவித்தார் என கொள்ள முடியாது. (குத்துச் சணடையில் போட்டியாளரின் காதைக் கடித்தல்)
      2. சத்திர சிகிச்சைகாக சம்மதம் தெரிவிக்கும் நபர், வைத்திய கவனயீனத்திற்க்கும் சேர்த்து சம்மதம் தெரிவித்தார் என கொள்ள முடியாது.
        .
    4. எதிராளியின் கவனயீத்திற்க்கு வழக்காளியின் சம்மதம் இருந்தது என கூற, 1) வழக்காளிக்கு அவ்வாறான கவனயீனதால் வரும் ஊறு பற்றிய அறிவு காணப்பட்டது என்றும், 2) அவ்வறாக ஊறிற்க்கான Risk யை எடுப்பதா இல்லையா என தேர்வுசெய்யும் சுதந்திரம் அவருக்கு காணப்பட்டதா என்றும் ஆராயப்படும்.
      1. Dann V. Hamilton எனும் வழக்கிலே எதிராளி குடித்துவிட்டு வண்டியோட்டுகிறார் என்ற அறிவுடன் பயணித்தது அதில் இருந்து உண்டாகும் ஆபத்திற்க்கான சம்மதாமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஆரம்ப வழக்குகளில் தீர்க்கபட்டாலும்
      2. Morris V. Murray and others   எனும் வழக்கில் நண்பர்கள் ஒன்றாக மது அருந்திவிட்டு, ஒரு எதிராளி விமானம் செலுத்த மற்றய நண்பரான வழக்காளி கூடப் பயணித்த போது விபத்து ஏற்பட்டது. எதிராளி மிக போதையுடன் இருப்பது தெரிந்தும் பயணித்தது சம்மதாமாக கொள்ளப்பட்டது.
        குறிப்பு : தற்போது நீதிமன்றங்கள் இவ் வழக்கின் போக்கையே கடைப்பிடிகின்றன. அதாவது வழக்காளி தனது பாதுகாப்பு தொடர்பில் போதிய கவனம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
  4. Other defenses (Not in book)
    • Unavoidable
    • Act of God
    • Incident occurs during illegal activity

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.