Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 06 : Proof of  Negligence
by Azaam Ameer (Last Updated : 14 Sep 2022)


  1. கவனயீனதை நிறுவுதல்
    1. தீங்கியலில் மூன்றாவது மூலகம் Fault  தவறுக்கான எண்ணமாகும்
      .
    2. இதனை, எண்ணம் (Intend– Dolus) காணப்பட்டது என்று நிறுவுவதன் மூலமும்; அல்லது கவனயீனம் (Culpa) காணப்பட்டது என்று நிறுவுவதன் மூலமும் எண்பிக்கலாம்.
      .
    3. கவனயீனம் RDL ஒரு விதமாகவும் EL வேறுவிதமாகவும் நிறுவப்படும்.
      .
      1. RDL பின்வரும் விடயங்களை வைத்து தீர்மானிக்கப்படும் :
        1. குறித்த சூழ்நிலையில் எதிரி நியாயமான மனிதனாக (Reasonable man) இருந்திருந்தால் , வழக்காளிக்கு நிகழ்ந்த குறித்த ஆபத்தை அனுமானித்து இருப்பாரா?
        2. அவ் ஆபத்தில் இருந்து பாதுகாப்பு பெற நியாயாமான மனிதன் ஒருவன்  எவ்வகையான நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பான் ? (இரு தரப்பினரும்)
        3. இரு தரப்பினரினதும் நடத்தை எவ்வாறு அமைந்தது ?
          .
      2. EL பின்வரும் விடயங்களை வைத்து தீர்மானிக்கப்படும் :
        1. சேதம் தொடர்பில் நியாயமான முன் அனுமானம் காணப்பட்டதா?
        2. வழக்காளிக்கும் எதிராளிக்கும் இடையில் போதிய அண்மைத் தொடர்பு காணப்படல் காணப்பட்டதா?
        3. விடயம் நிகழ்ந்த சூழ் நிலைகளைக் கருதும் போது, சட்டமானது கவனக் கடப்பாட்டைச் சுமத்துவது நியாயமானது என கருதுமா?
          .
    4. கவனயீனத்தை நிறுவும் பொறுப்பு வழக்காளியையே சாரும். மேற்ச் சொன்ன விடயங்களை வழக்காளி முகத்தோற்ற அளவில் நிறுவும் போது அதை மறுதலிக்கும் பொறுப்பு எதிராளியை வந்தடையும்.
    5. மேற்சொன்ன மூலகத்தில் ஒன்றை மறுதலிக்கும் போது, எதிராளி தீங்கியல் பொறுப்புடமையில் இருந்து விடுபடலாம்.
    6. அல்லது Contributory negligence or voluntary assumption of risk இருந்தது என்று நிறுவும் போது பொறுப்புடமையைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
    7. தீங்கியல் வழக்கு ஒரு குடியியல் நடவடிக்கை என்பதால், இங்கு நிகழ்வுகளின் சமனிலையில் (balance of probabilities) நிறுவப்படுதல் போதுமானதாகும்.  (van Wyk v. Lewis)
    8. இவ்வாறு கவனயீனத்தை வழக்காளியே எண்பிக்க வேண்டும் என்ற கடப்பாடு சில சந்தர்ப்பத்தில், அதாவது குறித்த விடயம் எவ்வாறு நடந்தது என்று தெளிவாக விளக்க முடியாத போது, எதிராளியின் செயற்பாடு இன்றி அது நடைபெற்றிருக்க முடியாது என்ற நிலையில், கவனயீனத்தை மறுதலிக்கும் பொறுப்பு எதிராளிக்குச் சாட்டப்படும்.

             .

  2. செயலே தானே செப்பும் விதி – res ipsa loquitur
    1. இவ்வறு பொறுப்பு எதிராளிக்கு மாற்றப்படுவது res ipsa loquitur எனும் மூதுரையின் அடிப்படையிலாகும்.
    2. Byrne v. Boadle என்ற வழக்கில் அடுக்கி வைக்கப்பட்ட கோதுமை மா பெரல்கள் விழுந்தன, இந்தச் செயல், அடுக்கி வைத்தவர், கீழே முறையாக அடுக்கி வைக்கும் கடப்பாட்டை மீறாமல் நடைபெற்றிருக்காது என முகத்தோற்ற அளவில் தெளிவாவதால் கவனயீனத்தை மறுதலிக்கும் பொறுப்பு எதிராளிக்கு மாற்றப்பட்டது.
    3. Subawickrema v. Samaranayake and others  வழக்கில், விபத்து ஒன்றில் எதிராளியின் செயற்பாட்டிற்கான நேரடி ஆதாரம் காணப்படாத போதும், எதிராளியின் கவனயீனம் இன்றி குறித்த விபத்து நடைபெற்றிருக்கமாட்டாது என்று முகத்தோற்ற அளவில் காணப்பட்டதால்res ipsa loquitur எனும் மூதுரை பிரயோகப்படுத்தப்பட்டது.
    4. இவ்வாறு பொறுப்புடமை எதிராளிக்குச் சாட்டப்பட மூன்று விடயங்கள் (Prima Facia, Control, Lack of explanations) நிறுவப்பட வேண்டும்
    5. முகத்தோற்ற அளவில் கவனயீனத்திற்கான ஆதாரம் காணப்பட வேண்டும்.
      1. Sochacki V. Sas   வழக்கில் புகை போக்கியினூடாக பக்கத்து வீட்டிற்க்கு நெருப்பு பரவயிருந்தது, நெருப்பு கவனமீனமான செயற்பாடு இன்றி பரவக்கூடியதாக இருப்பதால், அங்கே முகத்தோற்ற அளவில் கவனயீனம் இருந்தது என கூற முடியாது என தீர்க்கபட்டது.
      2. Cassidy v. Ministry of Health   இரண்டு மடக்க முடியாத விரல்களுக்கு சிகிச்சை பெறச் சென்ற பின், நான்கு விரல்களை மடக்க முடியாமல் போனது, அது நீதிமன்றில் முகத்தோற்ற அளவில் கவனயீனத்திற்கான ஆதாரமாக கொள்ளப்பட்டது.
    6. குறித்த விடயத்தில் எதிராளியின் கட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும்.
      – >Gee vs. Metropolitan Railway   ரயில் கதவில் சாய்ந்து பயணித்த பயணி, அது திடீரென திறந்ததால் விழுந்தார். கட்டுப்பாடு இரயில் கம்பனிக்கு காணப்பட்டது என தீர்க்கபட்டது.
    7. போதுமான விளக்கம் காணப்படாமை
      1. குறித்த விடயம் எவ்வாறு நடைபெற்றது என்ற போதுமான விவரம் வழக்காளிக்கு தெரியாமல் இருக்க வேண்டும்.
      2. Roe v. Minister of Health  வழக்கில் விடயப் பொருளான பேரிடர் தொடர்பான விடயங்கள் வழக்களிக்கு தெரியும் என்பதால் res ipsa loquitur எனும் மூதுரையைப் பிரயோகப்படுத்த முடியாது என தீர்க்கப்பட்டது.
    8. res ipsa loquitur எனும் மூதுரையைப் பிரயோகப்படுத்தபட்டால் அதை மறுதலிக்கும் பொறுப்பு எதிராளியை வந்து சேரும். இரு வகையில் அதைச் செயற்படுத்தலாம்
    9.  ஒன்றில், கவனயீனம் இருந்திருக்கவில்லை என நிறுவுவதன் மூலம்
      -> Wije Bus Co. V. Soysa  வழக்கில் பிழையான பக்கத்தால் வாகனத்தைச் செலுத்தியதால் எற்பட்ட காயத்திற்கான வழக்கில் மூதுரை பிரயோகிக்கபட்ட போது, அதனை எதிராளி கவனயீம் காணப்படவில்லை என வெற்றிகரமாக மறுதலித்திருந்தார்.
    10.  அல்லது நீதிமன்றம் திருப்தியுறும் வகைகையில் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கம் தெரிந்தால், கவனயீனத்தை எண்பிக்கும் பொறுப்பு மீள வழக்காளிக்கு வழங்கப்படும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.