Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 03 : Elements of Negligence  – கவனயீனம்
by Azaam Ameer (Last Updated : 5 Jan 2023)


    1. Neethling & Potgieter இன் வகுதிப்படி Aquilian Action    இன் 3வது மூலகம் Fault – தவறுக்கான எண்ணமாகும். இதை குறித்த செயல் Dolus (Intentional act) கருத்துடன் செய்யப்பட்டது அல்லது Culpa (Unintentional act – Negligence ) கருத்தின்றி கவனயீனமாக செய்யப்பட்டது என்று நிறுவுவதன் மூலம் எண்பிக்கலாம்.
      .
    2. Negligence என்ற விடயம் Kruger v. Coetzee வழக்கில் வரையறை செய்யப்பட்டது..
      இவ் வழக்கில், வழக்காளியின் மகளான சிறுமி, பல்பொருள் அங்காடி ஒன்றின் கழிப்பறையில் காணப்பட்ட சில துளி நீரில் வழுக்கி விழுந்து காயமுற்றார். இவ்வழக்கில் காணப்பட்ட நீரின் அளவு மிக சொற்பமானது என்பதால் நியாயமாக அவ்வாறான ஆபத்தை எதிரளிகள் ஊகித்திருக்க முடியாது என்பதால், கவனயீனம் காணப்படவில்லை என தீர்ப்பளித்து அதற்கான நியமம் பின்வருமாறு வரையறை செய்யப்பட்டது.
      1. குறித்த சூழ்நிலையில் எதிரி நியாயமான மனிதனாக (Reasonable man) இருந்தால் வழக்காளிக்கு நிகழ்ந்த குறித்த ஆபத்தை அனுமானித்து இருப்பாரா?
      2. அவ் ஆபத்தில் இருந்து பாதுகாப்பு பெற நியாயமான மனிதன் எவ்வகையான நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பான் (இரு தரப்பினரும்) ?
      3. இரு தரப்பினரினதும் நடத்தை எவ்வாறு அமைந்தது ?
        என்ற மூன்று விடயங்களையும் வைத்து அங்கு செயல் கருத்தின்றி செய்யப்பட்டதா என்ற விடயங்களைக் கருத்தில் கொள்வதன் மூலம் தீர்மானிக்கப்படும்.
        .
    3. நியாயமான மனிதனுக்கான சோதனை(Reasonable man Test ) என்ற விடயத்தை தென் ஆபிரிக்க நீதிமன்றங்கள் diligens paterfamilias என்ற பொதுச் சட்டக் கோட்பாட்டை பின்பற்றி வரையறை செய்கிறது. அதில் பின்வரும் விடயங்கள் ஆராயப்படும்.
      1. Reasonable Behavious – நியாயமான நடத்தை : நியாயமான நடத்தை எது என்பது முதலாவதாக நியமமான சட்ட நடத்தை (Legal Standard of Behaviour) எது என்பதை வைத்து தீர்மானிக்கப்படும். (சமூக ஒழுக்க விடயங்களை வைத்து அல்ல). இவ்வாறான நியமம் எல்லா சந்தர்பத்திற்க்கும் எல்லா காலத்திற்க்கும் பொருந்தாது என்பதால், இரண்டாவதாக விடயம் நடைபெற்ற இடம், சூழ்நிலை, காலம் என்பன கருத்தில் கொள்ளப்படும். எனவே 50 வருடங்களுக்கு முன்னர் நீதமன்றம் பிழை அல்ல என்று தீர்த்த விடயத்தை தற்போது பிழை என தீர்ப்பிடலாம். (சுருக்கமாக கூறின், சூழ்நிலைக்கு பெருந்தும் நியமமான சட்ட நடத்தை எது எனப் பார்க்கப்படும்)
      2. Foreseeability – முன் அனுமானம் : இங்கு அகவயப் பரீட்சையே (ழடிதநஉவiஎந வநளவ) செய்யப்படுவதால் நபரின் அறிவு அறிமுகம் என்ன என்பது பொதுவாக கருத்தில் கொள்ளப்படாது. சாதாரன மனிதன் குறித்த விடயத்தை முன் அனுமானிக்கக் கூடியதாக இருந்திருக்குமா என்பதே பார்க்கப்படும். இருப்பினும் சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த விடயத்தில் அனுபவமிக்க அதிக சிரத்தையுடன் கருமமாற்றிருக்க வேண்டும் என எதிர்பாக்கப்படும்.
      3. சிறுவர்கள், அங்கவீனர்கள், வயோதிபர்கள் : இவர்களின் வயது, இயலாமையை கருத்தில் கொண்டு இவக்களுக்கான நடத்தை நியமம் தீர்மானிக்கப்படும். இருப்பினும், இவர்களால் நிச்சயமாக முடியாத ஒன்றை செய்ய எத்தனிக்கையில் ஏற்பட்ட சேதத்திற்க்கு இவ்வாறான சலுகைகள் கிடைக்காது. உதாரணமாக அங்கவீனர்கள் வாகனமோட்டுதல்.
      4. Degree of Risk – ஆபத்தின் வீச்சு : ஆபத்தான செயலில் ஈடுபடுபவர்கள் அதிக சிரத்டையுடன் செயலாற்றியிருக்க வேண்டும் என்று எதிர்பாக்கபடுவர். உதாரணமாக Hilder v. Associated Portland Cement Manufactures Ltd வழக்கில் வளவில் உதைபந்து விளையாடிய சிறுவர்களின் பந்து பட்டு வீதியில் சென்ற மேட்டார் சைகில் வண்டி ஓட்டுனர் காயமுற்றார். வளவின் உரிமையாளர், வீதியின் அருகில் உள்ள வளவு என்பதால், இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்திருக்க வேண்டும் என்று கவனயீனத்துக்கு பொறுப்புடமையாக்கப்பட்டது.
      5. சேதத்தின் பாரதூரம் : சேதம் பாரதூரமானதாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அதிக சிரத்தையுடன் செயலாற்றியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும். உதாரணமாக Paris v. Stepney Borough Council வழக்கில், ஒரு கண்ணை இழந்திருந்த நபர் வேலையின் போது மற்றக் கண்ணையும் இழந்தார். இவர் விடயத்தில் தொழில் தருணர் அதிக சிரத்தையுடன் செய்யலாற்றியிருக்க வேண்டும் என்று, கவனயீனத்துக்கு பொறுப்புடமையாக்கப்பட்டது.
      6. எதிராளியின் நடத்தை : ஆபத்து எதுவுமின்றியே செயலாற்ற வேண்டும் என்றால் அது நடைமுறைச் சாத்தியமற்றது. உதாரணமக எல்லா வாகனங்களும் 5km/h இல் பயனித்தால் விபத்து பெருமளவில் குறைந்துவிடும் என வாதிட முடியாது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே வழக்காளியும் நிலைமையைப் புரிந்து கவனமாக நடத்தல் வேண்டும். இது எதிராளியின் பொறுப்புடமையை குறைக்கும். Latimer v A.E.C என்ற வழக்கில், வெள்ளப்பெருக்கின் பின்னர் தொழிற்சாலையை முடியுமானவரை சுத்த.ம் செய்து மீள் ஆரம்பித்த போது வழக்காளி அங்கு சென்று வழுக்கி விழுந்தார். எதிராளி தொழிற்சாலையை மூடியிருக்க வேண்டும் என்ற வழக்காளியின் வாதத்தை நீதமன்றம் நிராகரித்தது.
        இதே வேளை, ஒரு ஆபத்தை நீக்க செய்யவேண்டிய விடயம் இன்னொரு பெரிய ஆபத்தை உண்டுபண்ணும் என்றால், அவ்வறு நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று Marcer v. Commissioner for Road Transport என்ற வழக்கில் தீர்க்கப்பட்டது.
        .
        .
    4. ஆங்கிலச் சட்டத்தில் கவனயீனத்தை நிறுவ அங்கு கவனக் கடப்பாடு (Duty of Care) காணப்பட்டதா என பார்க்கபடும். இதற்கான கோட்பாடு Donoghue v. Stevenson  என்ற வழக்கில் (மிக முக்கியமான வழக்கு, எல்லா வினாக்களிலும் குறிப்பிடுவது புள்ளிகள் பெற உதவலாம்), உணவகத்தில் பெற்ற குளிர்பானத்தில் குடிதுவிட்டு மீதியை ஊற்றியபோது அதில் அழுகிய நத்தை காணப்பட்டது. குடல் அழர்ச்சிக்காகவும், நரம்பு மண்டல அதிர்ச்சிக்காகவும், இழப்பீடு கோரி வழக்கிடப்பட்டது. இங்கு குளிர்பான உற்பத்தி நிறுவனத்திற்;கும் வழக்காளிக்கும் ஒப்பந்தம் காணப்படாத போதும், உற்பத்தி நிறுவனத்திற்;கு கவனக் கடப்பாட்டைச் சுமத்த முடியும் என தீர்க்கப்பட்டது.
      இவ் வழக்கில் சட்டதின் படி, அயலவர்கள் மீது எல்லோரும் கவனக் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஒருவரது செயலால் நேரடியாக பாதிக்கபடும் எவரும் அயலவர்களே என்றும் விளம்பப்பட்டது.
      .
    5. Anns v. Merton London Borouh Council எனும் வழக்கில், கட்டிட நிறுமானத்தை உள்ளுராட்சி அதிகார சபை முறையாக பாரீட்சிக்கத் தவறியதால், கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதில் குடியிருந்தவருக்கு ஏற்பட்ட இழப்பிற்க்கு உள்ளுராட்சி அதிகார சபை பொறுப்பாக்கப்பட வேண்டும் கோரப்பட்டது. இதன் தீர்ப்பில் முதலாவதாக, வழக்காளிக்கும் எதிராளிக்கும் அண்மையத் தொடர்பு காணப்படுகிறதா என்றும் அவ்வாறு என்றால் எதிராளியின் கவயீனமான செயல் வழக்காளிக்கு சேதத்தை உண்டுபண்ணுமாக இருந்தால், அங்கு முகத் தோற்ற அளவில் கவனக் கடப்பாடு காணப்படுகிறது என கொள்ளப்படும். இரண்டாவதாக, அவ்வாறான கடப்பாட்டை குறைக்கும் அல்லது இல்லாமல் செய்யும் ஏதும் காரணிகள் காணப்படுகிறதா என பார்கப்படும். இவை இரண்டையும் வைத்து கவனக் கடப்பாடு தீர்மானிக்கப்படும். அக் கடப்பாட்டை மீறினால் அது கவனயீனமாக கொள்ளப்படும்.
      .
    6. Caparo Industries Plc v. Dicman and other வழக்கில் வழக்காளி குறித்த வியாபார நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். எதிராளியான கணக்காய்வு நிறுவனம், கவனயீனமாக பிழையான கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையில் தங்கியிருந்து வழக்காளி வியாபார நிறுவனத்தின் பெருமளவான பங்குகளை வாங்கி நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் பெருமளவு நட்டத்தைச் சந்தித்தார். மேன்முறையீட்டின் போது கணக்காய்வு நிறுவனத்திற்கு பொறுப்புடமை சுமத்த அவர்களுக்கு 1.அண்மையத் தொடர்பு மற்றும் தயாரித்த அறிக்கை 2.யார் யாரால் பயன்படுத்தப்படும் 3.எதற்காக பயன்படுத்தப்படும் என்ற அறிவு அல்லது முன் அனுமானம் (Foreseeable)   காணப்படுமானால் பொறுப்புடமை சுமத்தலாம். இவ் வழக்கின் நிகழ்வில் வழங்கப்பட்ட அறிக்கை வியாபார நிறுவனத்தின் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் பயன்படுத்தபடும் என்ற முன் அறிவு கணக்காய்வு நிறுவனத்திற்க்கு காணப்படவில்லை என்பதால் பொறுப்புடமையாகாது என தீர்க்கபட்டது.
      .
      .
    7. ஆகவே இவ் வழக்குகளின் அடிப்படையில், கவனயீனத்திற்கான எண்பிப்பதற்கு தேவைப்படும் கவனக் கடப்பாடு பின்வரும் விடயங்களை வைத்து தீர்மானிக்கப்படும் :
      1. சேதம் தொடர்பில் நியாயமான முன் அனுமானம் காணப்பட்டதா?
      2. வழக்காளிக்கும் எதிராளிக்கும் இடையில் போதிய அண்மைத் தொடர்பு காணப்படல் காணப்பட்டதா?
      3. விடயம் நிகழ்ந்த சூழ் நிலைகளைக் கருதும் போது, சட்டமானது கவனக் கடப்பாட்டைச் சுமத்துவது நியாயமானது என கருதுமா?
        .
    8. முடிவாக கவனயீனத்தைத் தீர்மானிக்கையில், உரோம டச்சுச் சட்டம், வழக்காளியின் சட்ட உரிமையை கவனிக்கின்றது. மாறாக ஆங்கிலச் சட்டம், எதிராளியின் கவனக் கடப்பாட்டைக் கவனிக்கின்றது. இலங்கையில் கவனயீனத்தைத் தீர்மானிக்கையில், உரோம டச்சுச் சட்டமே பயன்படுத்தபடும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz