Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 4 : Causation and Remoteness of Damages   
by Azaam Ameer (Last Updated : 5 Jan 2023)


    1. Neethling & Potgieter இன் வகுதிப்படி Aquilian Action    இன் 4வது மூலகம் Causation – காரணத்துவம் அல்லது காரணகாரியத் தொடர்பு காணப்படுகிறது. . எதிராளியின் செயலே விளைவிற்கான காரணமாக இருத்தல் வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது இரு விடயங்களை ஆராய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும். .
      1. Factual Causation – உண்மைக் காரணத்துவம் : எதிராளியின் எச் செயல் விளைவுக்கு காரணமாக அமைந்த என்பதை காண்பது. இது பரந்துபட்ட வீச்சைக் கொண்டது. இதை மட்டுப்படுத்த சட்டக் காரணத்துவம் பிரயோகிக்கப்படும்.
      2. Legal Casuation –  சட்டக் காரணத்துவம் : எதிராளி செய்த செயல் ஏற்படுத்திய எவ் விளைவிற்கு அவர் பொறுப்புடமையாக்கபடலாம். இது வீச்சைக் மட்டுப்படுத்த பயன்படும்.
        S v Mokgethi என்ற வழக்கில், வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், அதன் ஊழியர் தோள்பட்டையில் சுடுபட்டு காயமுற்றார். அவர் அதற்கான சிகிச்கையின் பின்னர் குணமடைந்து சக்கர நாற்காலியில் இருந்து வேலைசெய்து வந்தார். அடிக்கடி அமர்ந்து இருக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றாததால் அவருக்கு படுக்கைப் புண் ஏற்பட்டு அதன் காரணமாக இறந்தார்.
        இங்கு சுடப்படாவிட்டால் அவர் இறந்திருக்கமாடார் என்பதால் Factual Causation – உண்மைக் காரணத்துவம் இருக்கின்றது எனலாம். ஆனால் சமவம் நடைபெற்று, பாதிபுற்றவர் குணமடைந்து 6 மாதங்களின் பின்னர், மருத்து ஆலொசனை பின்பற்றததால் எற்பட்ட இன்னொரு பாதிப்பில் இறப்பு ஏற்பட்டிருப்பதால் இங்கு Legal Causation  – சட்டக் காரணத்துவம் இல்லை என தீர்க்கப்பட்டது.
        .
        .
    2. Factual Causation : உண்மைக் காரணத்துவத்தை நிறுவ பின்வரும் உபாயங்கள் கையாளப்படும்
      1. The “But-for” Test : ஒரு விடயம் நிகழ பல விடயங்கள் காரணமாக அமையும். அனேக சந்தர்பங்களில் நேரடி காரணங்களை அறிதல் கடினமாதாக இருக்கும். இச் சந்தர்ப்பத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் சோதனை “But-for” Test ஆகும். இச் சோதனை எதிராளியி செயல் அன்றி குறித்த விடயம் நடந்திருக்காது என்று தீர்மானிக்க உதவும். அவ்வறெனில் எதிராளியின் செயலே விளைவிற்கான காரணமாக இருத்து என கொள்ளப்பட்டு காரணத்துவம் நிறுவப்படும்.மாறாக, எதிரியின் செயற்பாடு நடந்திருக்காவிட்டாலும் குறித்த ஊறு நிகழ்ந்திருக்குமாயின் காரணத்துவம் இல்லை எனக் கொள்ளப்படும்.
        Barnett v. Chelsea and Kensington Hospital Management Committee என்ற வழக்கில் வழக்காளியின் கணவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் இறந்தார் என்று வழக்கிடப்பட்ட போது, சிகிச்சை அளிக்கபட்டு இருந்தாலும் அவர் இறந்திருப்பார் என்ற காரணத்தால் காரணத்துவம் இல்லை என தீர்க்கப்பட்டது. எனவே இங்கு உண்மைக் காரணத்துவம் இல்லை என நிறுவப்பட்டது. இதே நிலைமையை Priyani Soysa v. Rienzie Arsecularatne  வழக்கில் காணலாம்.
      2. Several Concurrent or Successive Causes – ஒரே நேரத்தில் அல்லது ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் ஒன்றிக்கு மேற்பட்ட காரணிகள் : ஒரு நபரை இரண்டு பேர் ஒரே தரத்தில் சுடும் போது அங்கு “But-for”  யை பயன்பத்தினால் இருவருக்கும் காரணத் தொடர்பு காணப்படாது. மேலும் ஒருவர் சுட்ட பின்னர் இன்னொருவர் சுட்டார் விடயத்தை தீர்மானிப்பதில் இன்னும் குழப்பகரமான நிலை தோன்றும்.
        உதாரணமாக A முதலில் சுட்ட போது 50% உழைக்கும் திறன் அற்றுப் போனது, பின்னர் B சுட்ட போது எஞ்சிய உழைக்கும் திறனும் அற்றுப் போனது. இந் நிலமைகளில், பிளமிங்கின் கருத்துப்படி சூழ்நிலைக்கு ஏற்றால் போல் பின்வரும் தேர்வுகளில் ஒன்றைத் நீதிமன்றம் பயன்படுத்தலாம்.
        .
        1. இரண்டாவது விடயம் நடைபெறும் வரை ஏற்பட்ட இழப்பிற்கு A யைப் பொறுப்பாக்குதல்; பின்னரான காலத்துக்கு ஏற்பட்ட இழப்பிற்க்கு B யைப் பொறுப்பாக்குதல்
        2.  A – 50% , B- 50%
        3. இருவரையும் கூட்டாகவும் தனியாகவும் பொறுப்பெடுக்க வைத்தல். (join and several)
          Baker V. Wiloughby  என்ற வழக்கில் காலில் ஏற்பட்ட காயத்திற்காக வழக்கிட்டு அது நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வேரொரு கொள்ளைச் சம்பவத்தில், அதே காலில் சுடுபட்டு காலை முற்றாக இழக்க வேண்டி ஏற்பட்டது. நீதிமன்றம் இரண்டாவது முறையைத் தேர்ந்தெடுத்தது.
          .
      3. Intervening Causes or nova causa interveniens  – புதிய இடையீட்டுக் காரணி, ஏலவே காணப்பட்ட காரணத்துவத்தை முற்றாக இல்லாமல் செய்து அதனை தூரமாக்குமானால் முதலாவது ஊறை ஏற்படுத்திய இடையூறு வரும் வரைக்குமான இழப்பீட்டிற்கே பெறுப்பேற்பார்.
        எடுத்துக் காட்டாக ஒருவரின் வீடு A என்பவரால் சேதமாக்கப்பட்டு உரிமையாளர் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பூகம்பம் ஏற்பட்டு வீடு முற்றாக இடிந்து விழுந்தது. யு பூகம்பம் வரும் வரை ஏற்பட்ட இழப்பிற்க்கே பொறுப்புடமையாக்கபடுவார்.
        Collettes v. Bank of Ceylon என்ற வழக்கின் தீர்ப்பில், சில வேளை, இடையீட்டுக் காரணி அல்லது இயற்கையாய்த் தோன்றும் காரணி முன்னைய விளைவை மேலோங்கி அதை இல்லாமல் செய்துவிடும். இது முன்னர் தவறிழைத்தவரை (அதன் பின்னரான காலத்திற்கு) பெறுப்புடமையில் இருந்து விலக்கிவிடும் என கூறப்பட்டது.
        .
        .
    3. Legal Causation: சட்டக் காரணத்துவத்தை எண்பிக்க இரு வகையான சோதனைகள் செய்யப்படும்.
      1. Direct Consequence Test – எதிராளியின் செயற்பாடே விளைவிற்க்கு காரணமாக இருக்கும் என்றால் வேறு விடயங்கள் கருதாது சட்டக் காரணத்துவம் நிறுவப்படும். சுந Re Polemis  வழக்கிலே, தீப்பிடிக்ககூடிய பொருட்களைக் ஏற்றிவந்த கப்பலில், எதிராளியின் ஊழியர்கள் கவனயீனமாக பலகை ஒன்றை கீழே வீழ்த்தியதால், தீப் பொறி ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பல் அழிந்து போனது. பலகை கீழே விழுவது வேறு உடைவுகளை ஏற்படுதும் என்ற அனுமானம் இன்றி அது கப்பல் அழிந்து போகும் என்ற முன் அனுமானத்தை எதிராளி கொண்டிராத போதும், Direct Consequence Test   படி சட்டக் காரணத்துவம் நிறுவப்பட்டது.
      2. Foresight Test – எதிராளியால் குறித்த ஆபத்தை அனுமானிக்க முடியாததாக இருந்தால், சட்டக் காரணத்துவம் இல்லை எனக் கொள்ளப்படும். The Wagon Mound வழக்கிலே எதிராளியின் கப்பலில் எரிபொருள் கசிவு காணப்பட்டது. வழக்களியின் திருத்துமிடத்தில் குறித்த கசிவினால் ஆபத்து எதுவும் இல்லை என எதிராளியால் கூறப்பட்டது. எனினும் தீப் பரவல் நடைபெற்று, கப்பலும் கப்பல் திருத்துமிடமும் சேததிற்குட்பட்டது. இங்கு Re Polemis வழக்கின் தீர்ப்பிற்கு மாற்றமாக நியாயமாக அனுமானிக்க முடியாததாக இருக்கும் எனில் அங்கு சட்டக் காரணத்துவம் இல்லை என தீர்க்கபட்டது.
        .
        நீதிமன்றங்கள் Foresight Test முறைமையினைப் பின்பற்றினாலும், அதன் தீர்ப்புக்களில் Direct Consequence Test பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன.
        .
      3. எவ்வளவு தூரம் ஆபத்தை அனுமானிதத்திருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஏற்பட்ட ஆபத்தை அதே போல் அனுமானித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
        Hughes v. Lord Advocate வழக்கில், எதிராளி வடிகான் மூடியை திறந்து வைத்து அதன் அருகில் சில லாம்புகளையும் வைத்துவிட்டுச் சென்றார். அங்கு சென்று விளையாடிய சிறுவன் லாம்புகளில் ஒன்றை வடிகானினுள் போட்டதால் அது வெடித்து காயத்திற்க்கு உள்ளானான். இங்கு லாம்புகளால் ஆபத்து வரும் என்று அனுமானிக்க முடியுமாகினும், அது வெடிக்கும் என்று அனுமானிக்கக் கூடியாதாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் பொறுப்புடமையாக்கபட்டது.
        .
        Tremain v. Pike வழக்கில் விவசாயி ஒருவர் விவசாய நிலத்தில் காணப்பட்ட மிகவும்; அரிதான எலிகளால் பரவக்கூடிய நோய் ஏற்பட்டதற்க்கு உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு கோரினார். இவ் ஆபத்து அனுமானிக்க முடியாதது என்பதால் இழப்பீடு நிராகரிக்கப்பட்டது.
        .
      4. Egg shell skull principle – எதிராளியின் அசாதரன நிலை தொடர்பாக தோன்றிய ஆபாயத்தை வழக்காளி அனுமனித்திருக்க முடியாதிருந்தது எனக் கூறி தப்பிக்க முடியாது.
        Smith v Leech Brain வழக்கிலே, எதிராளியினால் ஏற்பட்ட எரி காயமானது, அதை அடைந்த நபர், அவருக்கு ஏலவே காணப்பட்ட அசாதரன மருத்துவ நிலை காரணமாக புற்றுநோயாக மாறி அவர் இறக்க நேரிட்டது. இவ் விதிபடி பொறுப்புடமை சாட்டப்பட்டது.
      5. Shabby millionaire principle – ஒரு வசதி படைத்த நபரைக் காயப்படுத்தும் எதிராளி, அவர் வசதியானவர் என்ற அனுமானம் எனக்கு இல்லை என்று தப்பிக்க முடியாது. முழுமையான இழப்பைப் பொறுப்பேற்க்க வேண்டும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz