Lesson 7 : Liability for Dangerous Premises – Occupier Liability
by Azaam Ameer (Last Updated : 5 Jan 2023)
- அறிமுகம்
.
- மெக்கரன் இன் கருத்துப்படி, ஆபாத்தான இடம் ஒன்றின் கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பவர், அவ் இடத்தினுள் நுழைபவர்களின் பாதுக்காப்பு தொடர்பில் நியாயமான கவனத்தை எடுக்கும் கவனக் கடப்பாடினைக் கொண்டிருப்பர்.
. - இப் பொறுப்புடமை வளவு, கட்டிடம் போன்ற அசையா ஆதனங்களுக்கும், கப்பல், வாகனம், ஏணி போன்ற அசையும் அமைப்புகளுக்கும் பொருத்தமானதாகும்.
இடங்கொள்வோர் (Occupier) என்பது ஆதனத்தின் உண்மையான கட்டுப்பாடு யார் வசம் இருந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படும். (உதாரணமாக – வாடகைக்கு இருப்பவர், தரிசு நிலத்தின் உரிமையாளர், பாராமரிக்க ஒப்ந்தம் செய்யப்பட்டால் அப் பராமரிப்பாளர்) மேலும் உரிமையாளர் பொறுப்புடமையில் இருந்து நீங்கி வேறோருவரை நியமிக்கலாம்.
Fishers v. C.H.T Ltd வழக்கில் உரிமையாளரும், அங்கு குடியிருப்பவரும் இடங்கொள்வோராக கொள்ளப்பட்டு இருவரும் பொறுப்புடமையாக்கப்பட்டனர். இவ்விடயம் ரோம டச்சுச் சட்டத்தில் அக்குளியன் நடவடிக்கையினாலும், ஆங்கிலச் சட்டத்தில் வேறுவிதமாகவும் கையாளப்படும்.
.
.
- மெக்கரன் இன் கருத்துப்படி, ஆபாத்தான இடம் ஒன்றின் கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பவர், அவ் இடத்தினுள் நுழைபவர்களின் பாதுக்காப்பு தொடர்பில் நியாயமான கவனத்தை எடுக்கும் கவனக் கடப்பாடினைக் கொண்டிருப்பர்.
- ஆங்கிலச் சட்டத்தில் 1957 ஆண்டிற்க்கு முன்னரான நிலமை
.
- உள்நுழையும் நபர்கள் 1.ஒப்பந்த உரிமையுடன் நுழைபவர்கள், 2.விருந்தாளிகள், 3.உள் நுழைய உரிமம் பெற்றவர்கள் 4. சட்டவிரோதமாக நுழைபவர்கள் – அத்துமீறி நுழைபவர்கள் என நான்கு ரிவுகளாக வகுத்து ஆராயப்பட்டது.
. - ஒப்பந்த உரிமையுடன் நுழைபவர்கள் (Entering by Contractual Rights) தொடர்பில் மிக உச்ச கவனம் செலுத்தபட வேண்டும். சாதாரன (usual), அசாதாரன (unusual) ஆபத்துகள் தொடர்பில் கவனமெடுக்கப்பட வேண்டும். இடங்கொள்பவர், அவரின் ஊழியர்களால், அங்கு பணி புரியும் சுதந்திர ஒப்பந்தக்கார்களால் ஏற்படும் ஆபத்துகளுக்கும் பொறுப்பெடுக்கப்படல் வேண்டும். (உதாரணம் ஹோட்டல் விருந்தாளிகள்)
. - விருந்தாளிகள் (Invitees) தொடர்பில் நியாயமான அளவு கவனம் எடுக்கப்படல் வேண்டும். அசாதார ஆபத்துகளில் இருந்து தடுக்க நியாயமான கவனம் (reasonable care) எடுக்கபட்டிருத்தல் வேண்டும். எவை நியாயமான கவனம் என்பதையும், எவை அசாதாரன (unusual) ஆபத்துகள் என்பதையும் நீதிமன்றம் சூழ்நிலையை வைத்து தீர்மானிக்கும். விருந்தாளியை ஒரு ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை செய்வது பொறுப்புடமையில் இருந்து நீங்கப் போதுமானதாக இருக்கும். இதன்படி London Graving Dock v. Horton எனும் வழக்கிலே ஆபத்து தொடர்பில் விருந்தாளி பூரண அறிவு பெற்றிருப்பது இடங்கொள்வோரைப் பொறுப்புடமையில் இருந்து நீக்கிவிடும் என தீர்பளிக்கப்பட்டது. இது விமர்சிக்கபட்டு பின்னர் சட்டத்தின் மூலம் இல்லாமலாக்கப்பட்டது. (உதாரணம் கடையின் வாடிக்கையாளர்கள்)
. - உரிமம் பெற்று நுழைபவர் (Licensees) என்பவர்கள், ஆதனத்துள் பொது அக்கறையுடன் அன்றி, உட்கிடையான அல்லது வெளிப்படையான அனுமதியுடன் உள் நுழைபவராகும். இவர்கள் விடயத்தில்; ஆபத்து தொடர்பில் எச்சரித்தாலேயே போதுமானதாகும். உரிமம் பெற்று நுழைபவர் குறித்த ஆபத்தை ஏற்று உள்நுழைவாராயின் அதற்கு அவரே பொறுப்பெடுக்க வேண்டும். (உதாரணம் PHI, வருமானவரிதுறை அதிகாரி)
. - அத்துமீறி நுழைபவர் (Trespassers) என்பது உட்கிடையான வெளிப்படையான அனுமதி இன்றி நுழைபவர்களைக் குறிக்கும். இவர்களுக்கு குறைந்தளவான நிவாரணமே கிடைக்குமாக இருப்பினும், ஒப்புரவின் அடிப்படையிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் உரிமம் பெற்று நுழைபவர் என்ற தரம் அளவிற்கு நிவாரணம் பெற வழிவகைகள் காணப்படும். இருப்பினும் யுனனநை Addie V. Dubreck எனும் வழக்கில், இடம் கொள்பவர் வேண்டுமென்று அத்துமீறி நுழைபவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் ஏதாவது செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டி வரும். (உதாரணம் : திருடன், சிறுவர்கள், வழி தவறி உள்நுழைபவர்கள்).
.
மேலும் British Railway Board v. Herrington எனும் வழக்கில், அத்துமீறி நுழைபவர் மீது பொது மனிதாபிமானத்திற்கான கடப்பாடு (Duty of Common Humanity) காணப்படுகிறது என தீர்க்கப்பட்டது. ஆகவே மனிதாபிமானமற்ற முறையில் நடந்தால் பொறுப்புடமை சுமத்தப்படும்.
.
.
- உள்நுழையும் நபர்கள் 1.ஒப்பந்த உரிமையுடன் நுழைபவர்கள், 2.விருந்தாளிகள், 3.உள் நுழைய உரிமம் பெற்றவர்கள் 4. சட்டவிரோதமாக நுழைபவர்கள் – அத்துமீறி நுழைபவர்கள் என நான்கு ரிவுகளாக வகுத்து ஆராயப்பட்டது.
- ஆங்கிலச் சட்டத்தில் 1957 ஆண்டிற்க்கு பின்னரான நிலமை
.
- இவ்வாறு உள்நுழைபவர்கள் வெவ்வேறான தராதரத்தில் பார்க்கபடுவது விமசனத்திற்குள்ளானது, இதன் அடிப்படியில் இங்கிலாந்தில் The Occupiers Liability Act 1957 அறிமுகப்படுத்தப்பட்டது.
. - இச் சட்டத்தின் மூலம் சட்டரீதியாக உள்நுழைபவர்கள் (visitors) என்றும், இவர்கள் இடங்கொள்வோரிடம் உட்கிடையாக அல்லது வெளிப்படையாக அனுமதி பெற்றவர்கள் அல்லது ஆதனத்துள் உள்நுழைய சட்டரீதியாக அனுமதி பெற்றவர்கள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டனர்.
. - இடங்கொள்வோர், சட்டரீதியாக உள்நுழைபவர்கள் மீது பொதுவான கவனக் கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்(Common Duty of care) . OLA பிரிவு 2(2) இன் அடிப்படையில், அனைத்து சூழ் நிலைகளிலும், உள் நுழைபவர், என்ன நோக்கத்திற்க்காக அழைக்கபட்டாரோ அல்லது அனுமதிக்கப்பட்டாரோ, அந் நோக்கதிற்குட்பட்டு செயற்படும் போது (ஆபத்துகள் எதுவும் இன்றி இருப்பததை உறுதிசெய்யும்) நியாயமான கவனக் கடப்பட்டை இடங்கொள்வோர் கொண்டுள்ளார். (Ferguson v Welsh)
. - எனவே உள் நுழைபவர், என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டாரோ அதை மீறி செயற்பட்டாலோ அல்லது, குறித்த ஆபத்து தொடர்பில் எச்சரிக்கப்பட்டு, அவ்வறான ஆபத்தில் அவர் மாட்டிக்கொள்ளமாட்டார் என நியாயமாக ஊகிக்க கூடிய சந்தர்ப்பங்களில் இடங்கொள்வோர் பொறுப்புடமையாக்கப்படமாட்டார்.
. - Titchener v. British Railway Board (1983) என்ற வழக்கில், 15 வயது காதலியும் 16 வயது காதலனும், ரயில் கடவையின் வேலிக்கு இடையில் காணப்பட்ட இடைவெளிக்குள்ளால் சென்று விபத்தில் சிக்கி காதலன் உயிரிழந்தான். குறித்த இடைவெளி ஆட்கள் செல்ல கூடியதாக இருந்தது என்று ஊகிக்கும் அறிவு ரயில் கம்பனிக்கு காணப்பட்டிருந்தாலும், விபத்தில் சிக்கியவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனால் இழப்பீடு நிராகரிக்கப்பட்டது.
. - அதே போல் OLA பிரிவு 2(4) (a) இன் படி, சட்டரீதியாக இடங்கொள்வோhர்; ஆபத்தில் இருந்து தவிர்க்க கூடிய அளவிற்க்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தலே கவனக் கடப்பாட்டை நிறைவேற்றியதாக கொள்ளப்படும். இது சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கப்படும். எச்சரிக்கை பதாகையாக அல்லது வாய்மொழி மூலமாகவும் இருக்கலாம். பொது அறிவினால் (Common Sense) ஆபத்து உள்ளது என அறியக்கூடியதாக இருப்பின் எச்சரிக்கச் செய்யும் அவசியமில்லை. Staples v. West Dorset District Council என்ற வழக்கில், பாசி நிறைந்த சுவரில் புகைப்படம் எடுக்க ஏறி வழிக்கி விழந்த நபர், இடங்கொண்டோர் எச்சரிகை செய்யவில்லை என்று செய்த வாதம் நிராகரிக்கபட்டது.
. - அத்துமீறி நுழைபவர் (Trespassers) தொடர்பில் OLA (Amended 1984) பிரிவு 1(3) இல்
- இடங்கொள்வோர் ஆபத்து ஒன்று தொடர்பில் நியாயமான அறிவை அல்லது ஊகத்தைக் கொண்டிருந்து, மேலும்
- அவ் ஆபத்தை Trespassers எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற நியாயமான அறிவை அல்லது ஊகத்தைக் கொண்டிருந்து, மேலும்
- சூழ் நிலையக் கருத்தில் கொள்ளும் போது, அவ் ஆபத்தில் இருந்து Trespassers யை பாதுகாக்கும் நியாயமான எதிர்பார்ப்பு காணப்படும் என்றிந்தால்,
அவ்வாறான ஆபத்தில் இருந்து வுசநளியளளநசள யை பாதுகாக்கும் கவனமெடுக்கும் கடப்பாடு இடங்கொள்வேருக்கு காணப்படும்.
இங்கு ஆபத்து தொடர்பில் உண்மை அறிவு மட்டுமின்றி, ஆபத்து இருக்கக் கூடும் என்ற ஊகம் காணப்பட்டாலும் பொறுப்புடமையாக்கப்படும். மேலும், இது சூழ் நிலையை வைத்து தீர்மானிக்கப்படும். எனவே கொள்ளையடிக்க வருபவரும், வழிதவறி உள் நுழைந்த சிறுவனும் சம அளவான பாதுகாப்பை பெற மாட்டார்கள்.
.
- அதே போல் OLA பிரிவு 1(5) அத்துமீறி நுழைபவர் (Trespassers) ஆபத்தில் இருந்து தவிக்கக் கூடிய அளவிற்க்கு எச்சரிக்கை செய்யபட்டிருந்தால், அல்லது அதிலிருந்து விலகிப் போகும் வகையில் எச்சரிக்கை செய்தால் பெறுப்புடமையில் இருந்து நீங்கலாம்.
. - அத்துமீறி நுழையும் சிறுவர்கள் (Trespassers Children) தொடர்பில், சமூகத்தில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வகையான அக்கறை காணப்படுகிறது என்பதையும், இடங்கொள்வோர் மற்றும் சிறுவர்களின் நடத்தைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தேவைப்படும் கவனக் கடப்பாடு தீர்மனிக்கப்படும்.
அத்துமீறி நுழையும் சிறுவர்கள் மீது முழுக் கவனத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மீது பழிசுமத்தி இடங்கொள்வோர் தப்பிக்க முடியாத அதே வேளை, பெற்றோரும் போதிய கவனம் எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பாக்கபடும். Keown v. Coventry Healthcare NHS Trust (2006) என்ற வழக்கில் தீ அபாயத்தின் போதும் அவசரமாக வெளியேறும் ஏணியின் மீது சிறுவன் ஏறி விழுந்து காயமுற்ற போது, பெற்றோரின் கவனமின்மை மற்றும் சிறுவனின் ஏற்றுகொள்ள முடியாத நடத்தை காரணமாக இழப்பீடு மறுக்கப்பட்டது.
. - சட்டரீதியாக நுழையும் சிறுவர்கள் (Children visitors) இவர்கள் தொடர்பில் OLA பிரிவு 2(3) இல் சிறுவர்கள் வயதுவந்தவர்கள் போலன்றி, குறைந்த கவனத்துடனேயே இயங்குவார்கள் என்ற எதிர்பார்புடனேயே இடங்கோள்வோர் அவர்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டும் என குறிப்பிடுகிறது. இங்கும் மாறுபடும் அக்கறைகளுக்கிடையில் நீதிமன்றம் சமநிலையை பேண எத்தனிக்கும். இடங்கோள்வோர் சிறுவர்கள் தொடர்பில், அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்ற போதும் அவர்கள் பாலர் பாடசாலை போல் கவனம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றதாகும். அதே வேளை, பெற்றோரின் நடவடிகையும் கவனத்தில் கொள்ளப்படும். .
Phipps v. Rochester Corporation எனும் வழக்கில், கட்டுமானமம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் தோண்டப்பட்ட மடுவினுள் 7 வயது சகோதரியுடன் சென்ற 5 வயது சிறுமி விழுந்து காயமுற்றார். இவ்வாறான ஆபத்து நிறைந்த இடத்துள் கவனிப்பாரற்று சிறுவர்களை பெற்றோர் செல்ல அனுமதித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என் தீர்ப்பளிக்கபட்டது.
. - வசீகரக் கோட்பாடு (Doctrine of allurement) – இடம்கொள்வோர் வசிகரிக்கக்கூடியதும் மற்றும் ஆபத்தானதுமான (இரண்டும் அவசியம்) விடயத்துள் சிறுவர்கள் அகப்படாமல் பாதுகாக்கவேண்டிய கவனக்கடப்பாட்டைத் கொண்டுள்ளனர். புடயளபழற ஊழசிழசயவழைn எ. வுயலடழச வழக்கில் கவரக்கூடியதும் நஞ்சுமிக்கதுமான பெரி பழம் தரும் மரத்தினை, தோட்டத்தில் வைத்திருக்கும் நபர் அதை சிறுவர்கள் அணுகுவதில் இருந்தும் பாதுகாக்கும், கவனக் கடப்பாடைக் கொண்டிருக்கின்றார் என தீர்க்கப்பட்டது. இதே வேளை கவரக்கூடிய பெருட்களை கொண்டிருப்பது, அதைக் கண்டு உள்நுழைந்த சிறுவர்களுக்கு அது உட்கிடையான அனுமதியைக் கொடுத்ததாகவும் நோக்க முடியும்.
. - விற்ப்பனர்கள் (Experts) : சிறுவர்கள் மீது எப்படி இடங்கொள்பவர் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கபடுமோ அதே போல், விற்பனர்களாக (Experts) உள்ள நபர்கள் உள் நுழைவார்களாயின், அவ்வாறு உள் நுழைபவர்கள், அவர்கள் பாதுகப்பு தொடர்பில் போதிய அக்கறை எடுக்க வேண்டும் எதிர்பக்கப்படும். General Cleaning Contractors Ltd v. Christmas (1953) எனும் வழக்கில், வீடு துப்பரவு செய்யும் தொழிலாளி, எதிராளியின் வீட்டில் மேற் சுவரில் ஏறி துப்பரவு செய்கையில், ஜன்னல் மூடப்பட்டதால் விரகள் நசுங்கி அதனால், கீழே விழுந்தார். துப்பரவு தொழிலில் செய்யும் நபர் ஆபத்து தொடர்பில் அதிக கவனம் எடுத்திருக்க வேண்டும் என தீர்க்கபட்டது.
. - இருப்பினும், Salmon v Seafarer Restaurants (1983) என்ற வழக்கில், தீயணைப்பு படையினர் தீ அனைக்கப் பாவிக்கும் திரவம், குறித்த கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்ட திரவத்துடன் கலந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை அறிவிக்கத் தவறியதால் கட்டிட உரிமையாளர் தீயணைப்புபடையினருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பொறுப்புடமையாக்கபட வேண்டும் என தீர்க்கபட்டது. இங்கு தீயணைப்புப் படையினர் விற்ப்பனர்கள், அவர்கள் இவ்வாறான ஆபத்து தொடர்பிலும் எதிர்பாத்து பணியாற்ற வேண்டும் என்ற வாதாம் நிராகரிக்கபட்டது.
. - மேலும் சுதந்திர ஒப்பந்தக்காரரால் ஏற்படும் இழப்பிற்ற்கு இடங்கொள்வோர் பொதுவாக பொறுப்பக்கப்பட மாடார். ஆனால் OLA 2 (4) (டி) இடங்கொள்வோர், சரியான தகுதியான நபரிடம் ஒப்பந்ததை கொடுக்க வில்லை எனில், அல்லது வேலை எவ்வாறு நடைபெறுகிறது என முகாமை செய்யத் தவறினால் பொறுப்புடமையாக்கப்படும்.
. - பொறுப்புத் துறப்பு (Exclusion clause) : OLA 2 (1) இன் படி பொதுவான கவனக் கடப்பாடு தொடர்பில் பொறுப்புத் துறப்பு (Exclusion clause) செய்ய முடியாது. Ashdown v. Samuel Willams & Sons என்ற வழக்கில் இரயில் பாதைக்கருகில் இருக்கும் ஆதனத்தில் கவனயீனமான செலுத்தப்பட்ட வாகனத்தால் உரிமம் பெற்று நுழைந்தவர் (Licensees) காயமுற்றார். இவ்வாறு ஏற்படும் காயங்களுக்கு இடங்கொள்வோர் பொறுப்புடமையாக்கபடமாட்டர் என்ற பொறுப்புத் துறப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.
. - மேலும் Unfair Contract Terms Act 1977 Sec 2 (1) இன் படி, காயம் அல்லது இறப்பும் ஏற்படும் போது பொறுப்புத் துறப்பு செய்ய முடியாது என்றும், Sec 2 (2) – வேறு இழப்பு ஏற்படுகையில் நியாயமான முறையில் அன்றி வேறுவகையில் பொறுப்புத் துறப்பு செய்யலாகாது என்றும் குறிப்பிடபட்டுள்ளது, பொறுப்புத் துறப்பை மட்டுப்படுத்துகிறது.
. - வியாபாரரீதியாக அன்றி, கல்வி நடவடிக்கைக்காக, பொழுதுபோக்குக்காக ஆதனத்தைப் பயன்படுத்துகையில் ஏற்படும் இழப்பிற்கு இடங்கொள்வோர் பொறுப்புடமையாகமாட்டார்.
. - இவற்றை எல்லாம் நோக்கும் போது உள்நுழைபவர்களை 4 வகுதிகளாக பிரித்து கையாண்ட ஆங்கிலப் பொதுச் சட்டம், ரோம டச்சுச் சட்டத்திற்க்கு ஏற்றால் போல், தரப்பினர்களின் நியாயமான நடவடிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும், சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தேவைப்படும் கவனக் கடப்பாட்டைத் தீர்மானிப்பதைக் காணலாம்.
.
.
- இவ்வாறு உள்நுழைபவர்கள் வெவ்வேறான தராதரத்தில் பார்க்கபடுவது விமசனத்திற்குள்ளானது, இதன் அடிப்படியில் இங்கிலாந்தில் The Occupiers Liability Act 1957 அறிமுகப்படுத்தப்பட்டது.
- ரோம டச்சுச் சட்டத்தில் (தென் ஆபிரிக்கவில்) நிலமை
.
- ரோம டச்சு சட்டத்தின் படி இடங்கொள்வோர் பொறுப்புடமை, அக்குளியன் வழக்கின் மூலம் தீர்மானிக்கப்படும். அதனால் இங்கு 1. எதிரளியின் பிழையான செயல், 2. பணரீதியான இழப்பு, 3. குற்றத்திற்கான எண்ணம் என்பன தேவைப்படுத்தப்படும்.
. - இங்கு உள்நுழைபவரின் தராதரம் ஆராயப்படாது. சட்டரீதியாக நுழையும் நபர்கள் தொடர்பில் கவனக் கடப்பாடு வேண்டும். மேலும் வேறு உள் நுழைவார்கள் (Trespassers) என அனுமானிக்கக் கூடியாதாக இருந்தால், அவர்கள் தொடர்பிலும் இடங்கொள்வோர் கவனக்கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
. - ஆங்கிலச் சட்டம் போலவே, ஒப்பந்த உறவு காணப்பட்டாலும் காணப்படாவிடினும், குறித்த நியமமான கவனம் (Standard Care) எடுக்கப்படல் வேண்டும். ஒப்பந்தம் ஒன்று காணப்பட்டால், ஒப்பந்த வாசகத்திற்கு அமைவாக, நியமமான கவனக்கடப்பாட்டிற்கு மேலதிகமாக கவனமெடுக்கும் கடப்பாட்டைத் தோற்றுவிக்கலாம்.
Francis v. Cockrell வழக்கில், ஒப்பந்தக்காரர் கட்டிய குதிரையை பந்தயத் திடலில் பார்வையாளர் பகுதி இடிந்து விழுந்தது. உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, உரிமையாளருக்கு (ஒப்பந்தகாரர் அல்ல) (கவனயீன காணப்படாத போதும்) ஆபத்திலிருந்து பாதுக்காக்கும் கடப்பாடு காணப்பட்டது என தீர்க்கபட்டது.
. - ஒப்பந்தக் கடப்பபாடு காணப்படாத போது, உள்நுழைபவரின் வகுதி பாராது, என்ன நோக்கத்திற்காக அவர் நுழைகின்றாரோ, அவ்வாறானவர்களை ஒரு நியாயமான இடங்கொள்வோர் எவ்வாறு கவனிப்பார் என்பதைப் பொறுத்து கவனக் கடப்பாடு தீர்மானிக்கப்படும்.
. - London Graving Dock Co V. Horton என்ற வழக்கை அவதானிக்கும் போது, தென் ஆபிரிக்க நீதிமன்றங்கள் ஐnஎவைநைள தொடர்பில், நியாயமான கவனத்தை எடுக்க வேண்டும் என்றும், உள் நுழைபவர் நியாயமான வகையில் பாதுகாப்பாக இருக்கத் தக்கன கவனமெடுத்திருக்க வேண்டும் என்றும் தீர்க்கபட்டது. மேலும், ஆபத்தைப் பற்றி வெறுமனே அறிவிப்பது மட்டும், பொறுப்புடமையில் இருந்து விலக்களிக்காது. (இது ஆங்கில சட்டத்திற்க்கு மாற்றமானது)
. - ஆனால், Licensee தொடர்பில், ஆபத்தைப் பற்றி அறிவிப்பது போதுமனதாக இருக்கும். வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரியும் ஆபத்து தொடர்பில் இடங்கொள்வோர் கவனக் கடப்பட்டைக் கொண்டிருக்க மாட்டார். (இது ஆங்கில சட்டத்தை ஒத்தது). (Skinner v. Johannesburg Turf Club)
- ரோம டச்சு சட்டத்தின் படி இடங்கொள்வோர் பொறுப்புடமை, அக்குளியன் வழக்கின் மூலம் தீர்மானிக்கப்படும். அதனால் இங்கு 1. எதிரளியின் பிழையான செயல், 2. பணரீதியான இழப்பு, 3. குற்றத்திற்கான எண்ணம் என்பன தேவைப்படுத்தப்படும்.
Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.