About Lesson
Lesson 8: Pure Economic Loss
by Azaam Ameer (Last Updated : 05 Jan 2023)
- அறிமுகம்
.
- ஒரு நபரின் கவனயீனமான செயல் காரணமாக ஏற்படும் பொருளதார இழப்பு, அந் நபருக்கோ அல்லது அந் நபரின் ஆதனத்திற்கோ செய்யப்படும் ஊறின் காரணமாக ஏற்பட்டிருக்காமல் அப் பொருளதார இழப்பு வேறுவிதமாக ஏற்பட்டால் அவ்வாறான இழப்பு தூய பொருளாதார இழப்பு என அழைக்கப்படும். உதாரணமாக கவனயீனமாக தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அந் நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைதல் தூய பொருளாதார இழப்பாக கொள்ளலாம்.
. - ஆரம்பத்தில், பௌதீக ஊறினால் ஏற்படும் இழப்பு தொடர்பான சட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தபட்டதாலும், தூய பொருளாதார இழப்பைக் கருத்திக் கொண்டால் அதிகமான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதாலும், தூய பொருளாதார இழப்புக்கு என வழக்கிட முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அது கருத்தில் கொள்ளப்படுகிறது.
.
.
- ஒரு நபரின் கவனயீனமான செயல் காரணமாக ஏற்படும் பொருளதார இழப்பு, அந் நபருக்கோ அல்லது அந் நபரின் ஆதனத்திற்கோ செய்யப்படும் ஊறின் காரணமாக ஏற்பட்டிருக்காமல் அப் பொருளதார இழப்பு வேறுவிதமாக ஏற்பட்டால் அவ்வாறான இழப்பு தூய பொருளாதார இழப்பு என அழைக்கப்படும். உதாரணமாக கவனயீனமாக தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அந் நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைதல் தூய பொருளாதார இழப்பாக கொள்ளலாம்.
- ஆங்கில நியாயாதிக்கத்தில் தூய பொருளாதார இழப்பு வழக்குகளின் வளர்சிப் போக்கு
.
- ஆரம்பத்தில் ஆங்கில நீதமன்றங்கள் தூ.பொ.இ அங்கீகரிக்கவில்லை. எனினும், 19ம் நூற்றாண்டின் பின்னர், வேண்டும் என்று கருத்துடன் (Intentionally) செய்யப்பட்டிருக்கும் போதும் (மோசடி), அல்லது, ஒப்பந்த ரீதியான உறவு (Contractual Relationship) காணப்படும் போதும் ஏற்பட்ட தூ.பொ.இழப்பிற்க்கு இழப்பீடு பெறுவதை அங்கீகரித்தது. ஆனால் கவனயீனத்தால் ஏற்பட்ட தூ.பொ.இழப்பிற்க்கு இழப்பீடு பெறுவதை அங்கீகரிக்கவில்லை.
. - இதன் அடிப்படையில், Derry vs. Peek வழக்கிலே, குதிரை வலுவினால் இயங்கும் கோச்சு வண்டிகளை இயக்கும் ஒரு நிறுவனம் நீராவியில் இயங்கும் கோச்சு வண்டிகளை பயன்படுத்த அனுமதி கோரி விண்ணபித்து இருந்தது. அந் நிறுவனத்தின் விவரண கையேட்டில் நீராவியில் இயங்கும் கோச்சு வண்டிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளதாக கவனயீனமாக தெரிவித்து இருந்தனர். இந்த தகவலில் அடிப்படையில் வழக்காளி குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தார். நிறுவனத்திற்கு நீராவியால் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறித்த தகவலில் கவனயீனம் மட்டுமே (மோசடி அல்ல) காணப்பட்டதால், இழப்பீடு மறுக்கப்பட்டது.
. - பின்னர் Candler v. Crane, Christmas & Co வழக்கில், ஒரு நிறுவனத்திற்கு மேலதிக மூலதனம் தேவைப்படுவதாக பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்திற்கு வழக்காளி நிறுவனத்தின் கணக்கறிக்கையினை ஆராய்ந்த பின்னர், மூதலீடு செய்ய உடன்பட்டார். நிறுவனத்தின் கணக்காய்வாளரின் பிரதிநிதி முன்னிலையில் கணக்கறிக்கை காண்பிக்கப்பட்டு அதில் திருப்தியுற்று வழக்காளி முதலீடு செய்தார். இருப்பினும் அக் கணக்கறிக்கை கவனயீனமாக தயாரிக்கப்பட்டது என பின்னர் கண்டுபிடிக்கபட்டது. வழக்காளி தனது முதலீடு அனைத்தையும் இழந்தார். இங்கு கணக்கறிகை முதலீட்டுக்காக பயன்படுத்தபடும் என்ற விடயம் கணக்கீட்டு நிறுவனத்திற்கு தெரிந்திருந்தது. இருப்பினும் இங்கு மோசடியோ அல்லது ஒப்பந்த ரீதியான உறவு காணப்படவில்லை என கொள்ளப்பட்டு Derry vs. Peek தீர்ப்பின் அடிப்படையில் எதிராளிக்கு சார்பாக தீர்ப்பிடப்பட்டது. (டெனிங் பிரபு இதற்கு எதிரான தீர்பினை வழங்கி இருந்தார் – dissenting judgement).
Derry vs. Peek தீர்ப்பு மோசடி அல்லது துர் எண்ணம் காணப்பட்டாலே இழபீடு கோரலாம் என்ற நிலையைத் தோற்றுவித்தது.
. - அதன் பின்னர் முதன் முதலில், Nocton v. Lord Ashburton வழக்கின் தீர்ப்பில் மேற்சொன்ன தவறான அனுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. ஈடு வைக்கபட்டிருந்த ஆதனத்தின் ஒரு பகுதியை விற்க அஷ்படன் பிரபுவிற்க்கு அவரது வழக்கறிஞ்சர் நொக்டொன் ஆலோசனை செய்தார். அவ்வாறு செய்வது அவரின் ஈட்டுத் தொகையை ஈடுசெய்ய இயலாததாக இருக்கும் என்பதை நொக்டொன் அறிந்திருந்தும் சுயனலத்திற்காக அவ்வாறு அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Relationship) காணப்படும் போது கவனமெடுக்கும் கடப்பாடு தோன்றும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
நம்பிக்கை பொறுப்பு (Fiduciary Relationship) என்பது, ஒரு நபர் மீது காணப்படும் பூரண நம்பிக்கை காரணமாக, (அவர் கூறியதற்கு இணங்க) ஒரு விடயத்தைக் கையாளும் போது அவருக்கு எழும் கடப்பாடு ஆகும். இவ் உறவுமுறை முறையாக (formally), சட்டரீதியாக (legally) மாத்திரமன்றி, ஒழுக்க நெறி (morally), மற்றைய நபர் மீது காணப்படும் தனிபட்ட கடப்பாட்டில் (Personal Responsibility) இருந்தும் எழும்.
. - இவ்வழக்கின் பின் பின்வரும் 3 விடங்களில் தூ.பொ.இ இற்காக இழப்பீடு கோரலாம் என்ற நிலை தோன்றியது.
- தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்த உறவு காணப்படும் போது
- வேண்டுமென்று விடயத்தை திரித்து (deceit) கூறும் போது
- எதிராளிக்கு வழக்காளிக்கும் இடையில் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Relationship) காணப்படும் போது.
.
- மேல் வந்த தீர்ப்பை மேலும் வலுவூட்டும் விதமாக, மோசடியான எண்ணமின்றி வெறுமனே கவனயீனத்தால் விடயம் நடைபெற்றிருக்கமானால் எவ்வாறு விடயம் கையாளப்படும் என்பது Hedly Bryne and Co Ltd v. Heller and Partners Ltd எனும் வழக்கில் தீர்ப்பில் நியமப்படுத்தபட்டது. இது ஹேட்லி பேர்ன் விதி என அழைக்கப்படும்.
. - இவ்வழக்கில் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பொருளாதார நிலைமை (Credit Worthiness) தொடர்பில் பின்னைய நிறுவனத்தின் வங்கியிடம் அறிக்கை கோரியிருந்தது. அவ் வங்கி அந் நிறுவனம் தொடர்பில், சாதகமாக அறிக்கையளித்து இருந்தது. வங்கிக்கு என்ன நோக்கத்திற்;காக அறிக்கை கோரப்படுகிறது என தெரியாவிட்டாலும் ஒரு வியாபார ஒப்பந்தத்திற்காக இது கோரப்படுகிறது என்பதை அறிந்திருந்தனர். அறிக்கைனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பேற்க்க மாட்டோம் என வங்கி பொறுப்புத்துறப்பும் செய்து இருந்தது. அறிக்கையில் காணப்பட்ட கவனயீனம குறைபாடு காரணமாக நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்ததில் ஈடுபட்டவழக்காளிக்கு, பலமான நட்டம் ஏற்பட்டது.
. - இவ் வழக்கின் தீர்ப்பில் மோசடி, ஒப்பந்த உறவு என்பவற்றிற்கு மேலதிகமாக வழக்காளிக்கும் எதிராளிக்கும் இடையில் Special Relationship – விஷேட உறவுமுறை காணப்பட்டு, குறித்த கூற்றை வெளிபடுத்துகையில் எதிராளி அதில் கொண்டுள்ள ஆற்றல், கரிசனை என்பவற்றில் நியாயமான அளவு தங்கி செயற்பட்டு இருப்பாரானால், எதிராளியின் கவனயீனமான வெளிப்படுத்துகைக்காக இழப்பீடு பெறலாம் என கூறப்பட்டது. எனவே விஷேட உறவுமுறை தூ.பொ.இ இற்காக இழப்பீடு பெறும் 4வது சந்தர்ப்பமா உருவானது. (இருந்த போதும் இவ் வழக்கின் தீர்ப்பில் பொறுப்பு துறப்பு காணப்பட்டதால் இழப்பீடு பெற முடியாது என தீர்க்கபட்டது)
. - இவ் விஷேட உறவு முறை ஒப்பந்தத்திற்கு இணையானதாக (equivalent to contract) இருத்தல் வேண்டும். இவ்வாறான உறவுமுறை உட்கிடையான அல்லது வெளிப்படையா செயலின் மூலம் அல்லது வார்த்தை மூலம் உத்தரவாதம் அளிப்பதன் மூலம் உருவாகும். (குறிப்பு : சேவைக்குப் பணம் பெற்றால் அது ஒப்பந்த கடப்பாட்டைத் தோற்றுவிக்கும்)
. - இவ் விஷேட உறவு முறை –
- தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்த உறவின் மூலம் எழலாம்
- எதிராளிக்கு வழக்காளிக்கும் இடையில் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Relationship) மூலம் எழலாம்
- ஒப்பந்ததிற்க்கு இணையான உறவுமுறை (Relationship equivalent to Contract) மூலம் எழலாம்
- (உட்கிடையாக அல்லது வெளிப்படையாக) வார்த்தைகளால், செயலினால் (உத்தரவாதம் அளிப்பதன்) மூலம் எழலாம்.
.
- இதே வேளை, பின்னர் தீர்க்கப்பட்ட Mutual Life and Citizens Assurance Co v. Evatt என்ற வழக்கிலே, வழக்காளி ஏலவே முதலீடு செய்த நிறுவனம் தொடர்பில் எதிராளி கவனயீனமான நிதி அறிக்கையினைக் கொடுத்திருந்தார். இதன் போது பொறுப்புத் துறப்பு எதுவும் செய்யப்படவில்லையாகினும், எதிராளி குறிப்பிட்ட தகவலினை அளிப்பதற்கான தகைமையினேயோ அல்லது அவ்வாறான தொழிலினையோ புரிந்திருக்கவில்லை. இதன் காரணமாக இங்கு கவனமெடுக்கும கடப்பாடு காணப்படவில்லை என தீர்க்கப்பட்டது. இருப்பினும் இத் தீர்ப்பு இது தொடர்பான சட்ட விருத்தியை மட்டுப்படுத்துகிறது என விமர்சிக்கப்பட்டு, முற்றீர்ப்பாக பின்பற்ற மறுக்கப்பட்டு வந்தது.
. - Esso Petroleum Co Ltd v. Mardon என்ற வழக்கிலே, (கவனயீனமாக பிழையாக தயாரிக்கப்பட்ட) பெறுமதி அறிக்கையில் (Valuation Report) தங்கியிருந்து ஒப்பந்தம் செய்த போது பொருளாதார நட்டம் ஏற்பட்டது. ஒரு ஒப்பந்தத உருவாக்கத்தின் போது, (விஷேட ஆற்றல் அல்லது விஷேட அறிவு அல்லது உறவுமுறை காரணமாக) தரப்பினரைப் பிதிநிதிப் படுத்தும் நபர் அவர் தெரிவிக்கும் விடயங்களுக்கன கவனக் கடப்பாட்டை கொண்டுள்ளார். அவரால் வழங்கப்படும் தகவல் சரியானதா என்பதை உறுதிசெய்யும் கடப்பாடு அவருக்கு காணப்படும். இதன்; போது அந் நபர் குறித்த தகவலை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. (Mutual Life and Citizens Assurance Co v. Evatt இற்கு மாற்றமான தீர்ப்பாகும்) (Influencer or Middleman should take responsibility)
. - Lawton v. BOC Transhield Ltd என்ற வழக்கிலே விலகிச் சென்ற முன்னைய வேலையாள் தொடர்பில் புதிய வேலை தருனருக்கு வழங்கிய சாதகமற்ற அறிக்கை தொடர்பில் வழக்கிடப்பட்ட போது, முன்னைய வேலையாளுக்கும் எமக்கும் அண்மைய தொடர்பு (proximity) இல்லை என்ற எதிராளியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து அண்மைய தொடர்பு உள்ளது என்றும் கொடுக்கப்பட்ட அறிக்கை எதற்காக கோரப்படுகிறது என்பது தெரியும் என்பதால் அங்கே கவனமெடுக்கும் கடப்பாடு காணப்படுகிறது என்றும் தீர்த்தது. (இருப்பினும் கொடுக்கப்பட்ட அறிக்கயில் கவனயீனம் காணப்படவில்லை என்பதால் வழக்கு எதிராளி சார்பில் தீர்ந்தது)
(Liability towards 3rd Party)
. - சமூக உறவின் (நண்பன், சகோதரன்) காரணமாக வழங்கப்படும் அறிவுறுத்தல் தொடர்பில் வழக்கிட முடியாது. இருப்பினும் சில விதிவிலக்கான சந்தர்பங்களில் வழக்கிடலாம். Chaudhry v. Prabhakar என்ற வழக்கிலே, விபத்தில் மோசமாக சேதமடைந்து மீள் திருத்தம் செய்யப்பட்ட காரினை வாங்க ஆலோசனை வழங்கிய நண்பனுக்கு, அவன் அவ் விடயத்தில் நிபுணர் அல்ல என்ற போதிலும் பொறுப்புடமை சுமத்தப்பட்டது.
. - Caparo Industries Plc v. Dickman என்ற வழக்கிலே வழக்காளி குறித்த வியாபார நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். எதிராளியான கணக்காய்வு நிறுவனம், கவனயீனமாக பிழையான கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையில் தங்கியிருந்து வழக்காளி வியாபார நிறுவனத்தின் பெருமளவான பங்குகளை வாங்கி நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் பெருமளவு நட்டத்தைச் சந்தித்தார். மேன்முறையீட்டின் போது கணக்காய்வு நிறுவனத்திற்கு பொறுப்புடமை சுமத்த அவர்களுக்கு 1.அண்மையத் தொடர்பு மற்றும் தயாரித்த அறிக்கை 2.யார் யாரால் பயன்படுத்தப்படும் 3.எதற்காக பயன்படுத்தப்படும் என்ற அறிவு காணப்படுமானால் பொறுப்புடமை சுமத்தலாம். இவ் வழக்கின் நிகழ்வில் வழங்கபட்ட அறிக்கை வியாபார நிறுவனத்தின் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதால் பயன்படுத்தபடும் என்ற முன் அறிவு கணக்காய்வு நிறுவனத்திற்க்கு காணப்படவில்லை என்பதால் பொறுப்புடமையாகாது என தீர்க்கபட்டது. (இவ் வழக்கிலும் Alcock வழக்கிலும் நீதிமன்றம் பெரிய மக்கள் கூட்டத்திற்கு பொறுப்புடமையைச் சுமத்துவதில் தயக்கம் காட்டியதை அவதானிக்கலாம்)
. - தற்போது,Hedley Byrne விதியில் கூறப்பட்ட விஷேட உறவு முறையானது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது ““Assumption of responsibility” ” கடப்பாட்டிற்கான ஊகம் சாட்டப்படும். எவ்வாறு எனில், வழக்காளி, குறித்த விடயத்தில் தங்கியிருந்தால் (Dependency – வேறு வழிகள் காணப்படாது) அல்லது அதை நம்பி செயற்பட்டால் (Reliance– வேறு வழிகள் காணப்படலாம்) Assumption of responsibility காணப்பட்டதாக ஊகிக்கப்படும். மேலும், இவ் ஊகம் கவனயீனமான வெளிப்படுத்துகைகளுக்கும் (Statements) கவனயீனமான சேவைகளுக்கும் (Act or Services) பொருந்தும்.
- Ross v Caunters எனும் வழக்கிலே முறையாக அறிவுறுத்தல்கலைப் பயன்படுத்தாமல் சட்டத்தரனி இறுதி விருப்பாவணத்தை செய்தமையானது, வழக்காளியினால் அதில் இருந்து நலனை பெறமுடியாத நிலைமையைத் தோற்றுவித்தது. வழக்காளிக்கும் எதிராளிக்கும் ஒப்பந்த ரீதியான கடப்பாடு காணப்படாவிடினும், வழக்காளி எதிராளியின் நடவடிக்கையில் தங்கியிருந்தார் (Reliance) என்பதால் அவருக்கு அண்மையத் தொடர்பு காணப்பட்டது என தீர்க்கப்பட்டது.
- White v. Jones எனும் வழக்கில், சட்டத்தரணி ஒரு நபரின் இறுதி விருப்பாவணத்திற்கான அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தத் தவறியமையால், வழக்காளி பாதிக்கப்பட்டார். இவ் வழக்கின் முடிவு அயலவர் கோட்பாடில் (Neighbourhood Principle) தங்கியிருக்கவில்லை. எதிராளிக்கு குறித்த விடயத்தில் பிழை ஏற்படின் 3ம் நபர் பாதிக்கப்படுவார் என்ற முன்னனுமானம் (foreseeability) காணப்படுமானால், அவரிற்கு அந் நபர் தொடர்பில் கடப்பாடு காணப்படும் என ஊகிக்கப்படும் (“Assumption of responsibility” கடப்பாட்டிற்கான ஊகம் சாட்டப்படும்) என்ற அடிப்படையில் வழக்காளிக்கு சார்பாக வழக்கு தீர்க்கபட்டது.
.
.
- ஆரம்பத்தில் ஆங்கில நீதமன்றங்கள் தூ.பொ.இ அங்கீகரிக்கவில்லை. எனினும், 19ம் நூற்றாண்டின் பின்னர், வேண்டும் என்று கருத்துடன் (Intentionally) செய்யப்பட்டிருக்கும் போதும் (மோசடி), அல்லது, ஒப்பந்த ரீதியான உறவு (Contractual Relationship) காணப்படும் போதும் ஏற்பட்ட தூ.பொ.இழப்பிற்க்கு இழப்பீடு பெறுவதை அங்கீகரித்தது. ஆனால் கவனயீனத்தால் ஏற்பட்ட தூ.பொ.இழப்பிற்க்கு இழப்பீடு பெறுவதை அங்கீகரிக்கவில்லை.
- தென் ஆபிரிக்காவில் நியாயாதிக்கத்தில் தூய பொருளாதார இழப்பு
.
- ஆரம்பத்தில், தென் ஆபிரிக்காவில், ஆங்கிலச் சட்டம் போலவே ஒப்பந்த உறவு, அல்லது நம்பிக்கை உறவு காணப்படாதவிடத்து இழப்பீடு பெற முடியாத நிலமை காணப்பட்டது.
. - இருப்பினும் Perlman v. Zoutendyk (1934) எனும் வழக்கில், பெறுமதி அறிக்கையை (valuation report) சமர்ப்பித்த நபருக்கு அதைப் பயன்படுத்தி கடன் பெற அது பயன்படுத்தப்படும் என்ற அறிவு காணப்படும் என்பதால் அதில் தங்கி (rely) கடன் கொடுத்தவர் மீது கவனக் கடப்பாட்டைக் (duty of care) கொண்டுள்ளார் என தீர்கப்பட்டது. இருப்பினும் இத் தீர்ப்பு இது எல்லையற்ற (limitless) கவனக் கடப்பாட்டைத் தோற்றுவிக்கும் விமர்சிக்கப்பட்டு பின்பற்றப்படவில்லை.
. - ஆதலால் இச் சந்தர்ப்பங்களில் பொறுப்புடமை எவ்வாறு சுமத்தப்படலாம் என்பது Administrateur, Natal v. Trust Bank van Afrika BPK (1979) வரையறுக்கப்பட்டது..
- இங்கு வழக்கின் 1. அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளும் போது, அங்கு சட்டக் கடப்பாடு (legal duty) காணப்படுகிறதா என்பதனையும் 2.அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளும் போது, எதிராளி போதிய கவனம் (reasonable care) எடுத்திருந்தாரா என்பதினையும் கருத்தில் கொள்வதன் மூலம் பொறுப்புடமை சுமத்தப்படும்.
- தென் ஆபிரிக்காவில்,தூ.பொ.இ நிறுவ Aquilian action இல் எண்பிக்க வேண்டிய இரண்டாவது விடயமான wrongfulness நிறுவ, ஆங்கிலச் சட்டதைப் போல சட்டக் கடப்பாடு (legal duty) தேவைப்படுத்தப்பவது கவனிக்கத் தக்கதாகும். (ஆனால் ரோம டச்சுச் சட்டத்தில் தீங்கியல் என்பது ஒருவரது, ஆளுமையில், குடும்பத்தில், அல்லது ஆதனத்தில் சேதத்தை ஏற்படுத்தும் தவறான செயல் என்றே விளம்பப்படும்)
.
- BoE Bank Ltd v Sanja Mathilda Ries என்ற வழக்கில் வழக்காளியின் கணவர் அவரது ஆயுள் காப்புறுதியின் பயனாளியாக மனைவியை(வழக்காளி) இணைக்க எண்ணினார். அதற்கான படிவத்திக் கையொப்பம் பெற வேண்டிய படிவத்தை எதிராளி, வழக்காளியின் கணவரின் மேசையில் வைத்திருந்தும் முறையாக அறிவிக்கத் தவறியிருந்தார். வழக்காளியின் கணவர் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். வழக்காளியின் கணவருக்கும் எதிராளிக்கும் தொழில் ரீதியான உறவு இருந்திருக்கவில்லை (தனிப்பட்ட உறவு). இவ்வழக்கில் முன் அனுமானம் (foreseeability) மட்டும் போதாது, எதிராளி சட்டக் கடப்பாட்டை மீறியதாகவும் (அறநெறி தார்மீக கடப்பாட்டை அல்ல) இருக்க வேண்டும் என்பதால் (இச் சட்டக் கடப்பாட்டை Legal Conviction of Community மூலமும் எண்பிக்கலாம்), அவை நிறுவப்படவில்லை என தீர்க்கப்பட்டது.
. - Bayer South Africa (Pty) v. Frost என்ற வழக்கில் ஒப்பந்தக் கடப்பாடு காணப்படும் போது பொறுப்புடமை 3ம் நபடுக்கும் சாட்டப்படும் என தீர்க்கபட்டது. குறித்த களைநாசினி தொடர்பில் வெளிபடுத்தப்பட்ட பிழையான தகவல் காரணமாக ஏற்பட்ட இழப்பிற்கு அதனை விற்ற கடைகாரருக்கு வழங்கிய நிறுவனம் மீது பொறுப்புச் சுமத்த்தபட்டது.
. - Cape Empowerment Trust Limited v. Fisher Hoffman Sithole வழக்கில் எதிராளியின் பிழையான தகவலால் உந்தப்பட்டு வாங்கப்பட்ட தொழிலினால் நட்டம் ஏற்பட்டது என்ற வழக்கில், தூ பொ இ யை நிறுவ அவசியமான மூலகங்கள் கூறப்பட்டன
- வழக்காளி தொடர்பில் எதிராளிக்கு கடும் பொறுப்பு காணப்பட வேண்டும்
- தகவலை வெளிப்படுத்துகையில்
- கவனயீனமாக செயற்பட்டிருக்க வேண்டும்
- சட்டவிரோதமாக செயற்பட்டிருக்க வேண்டும்.
- அத் தகவல் எதிராளிக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். (தூய பொருளாதார இழப்பு)
- கோரப்படும் இழப்பு நட்டத்தை ஈடுசெய்வதாக அமைய வேண்டும்.
.
- பொருள் சேதத்துடன் நேரடி தொடர்பற்ற தூ பொ இ இற்க்கு நிவாரணம் பெற முடியாது. எடுத்துகாட்டாக Sparten Steel and Alloys Ltd v Martin & Co. Contractors Ltd வழக்கில், எதிராளி கவனயீனமாக வழக்காளியின் தொழிற்சாலை மின்சாரத்தைத் தூண்டித்த போது, மூலப் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.
.
இங்கு சேதமான மூலப் பொருட்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டது. ஆனால் இலாப இழப்பிற்கு நட்ட ஈடு மறுக்கப்பட்டது. ஏன் எனில் அது பொருள் சேதத்துடன் நேரடி தொடர்பற்றது என்பதால்.
.
.
- ஆரம்பத்தில், தென் ஆபிரிக்காவில், ஆங்கிலச் சட்டம் போலவே ஒப்பந்த உறவு, அல்லது நம்பிக்கை உறவு காணப்படாதவிடத்து இழப்பீடு பெற முடியாத நிலமை காணப்பட்டது.
- இலங்கையில் தூய பொருளாதார இழப்பு
.
- இலங்கையில் இவ் விடயம் Chissel v. Chapman என்ற வழக்கில் ஆராயப்பட்டது. தொழிலினை நிதந்தரமாக்க அந் நிறுவனத்தின் வைத்தியரின் மருத்துவ தகுதி அறிக்கை அவசியம் எனற நிலையில் மருத்துவர் சாதகமற்ற தகுதி அறிக்கையினை வழங்கியதன் காரணமாக தொழிலாளி வேலையை இழந்தார். கவனயீனமாகமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் வழக்காளிக்கு சார்பாக தீர்ப்பளித்தாலும் முறையீட்டில் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது. (இவ் வழக்கு 1954 ஆண்டு தீர்பிடப்பட்டது என்பதும் ஹேட்லி பேர்ன் விதி 1963 ஆண்டு வெளிவந்த தீர்ப்பின் மூலம் பெறப்பட்டது என்பதையும் கவனிக்குக)
.
இலங்கையில் தூ பொ இ தொடர்பாக போதிய வழக்கு காணப்படவிலை, தென் ஆபிரக்க முறைமையிலேயே இங்கு விடயங்கள் அணுகப்படும்.
. - சுருக்கமாக ஆங்கிலச் சட்டத்திற்க்கும் தென்னாபிரிக்க சட்டதிற்கும் இடையேயான வித்தியாசத்தினை நோக்கினால்
- ஆங்கிலச் சட்டத்தில் Hedley Byrne கோட்பாட்டின் அடிப்படையில்“Special Relationship” மேலும், “Assumption of Responsibility” பார்க்கப்படும்.
- தென் ஆபிரிக்க சட்டத்தில் Aquilian Action – அடிப்படையில் -> Wrongfulness கருத்தில் கொள்ளப்படும்.
- இலங்கையில் போதியளவு வழக்குகள் இல்லை எனிலும் Aquilian Action அடிப்படையில் தீர்க்கப்படும்.
- இலங்கையில் இவ் விடயம் Chissel v. Chapman என்ற வழக்கில் ஆராயப்பட்டது. தொழிலினை நிதந்தரமாக்க அந் நிறுவனத்தின் வைத்தியரின் மருத்துவ தகுதி அறிக்கை அவசியம் எனற நிலையில் மருத்துவர் சாதகமற்ற தகுதி அறிக்கையினை வழங்கியதன் காரணமாக தொழிலாளி வேலையை இழந்தார். கவனயீனமாகமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் வழக்காளிக்கு சார்பாக தீர்ப்பளித்தாலும் முறையீட்டில் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது. (இவ் வழக்கு 1954 ஆண்டு தீர்பிடப்பட்டது என்பதும் ஹேட்லி பேர்ன் விதி 1963 ஆண்டு வெளிவந்த தீர்ப்பின் மூலம் பெறப்பட்டது என்பதையும் கவனிக்குக)
Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.