Course Content
Low of Tort (Delict) – Tamil Youtube Video Series of Dr. A. C. Nakshathra
This topic contains the full lecture series of Tamil Youtube Video of Dr. A. C. Nakshathra on Law of Tort. These can be freely accessible in youtube. We added here for the purpose of easy reference and value additions.
0/44
Law of Delict (Tort)
About Lesson

Lesson 13 : Strict Liability – Private Nuisance
by Azaam Ameer (Last Updated : 5 Jan 2023)


    1. Nuisance என்றால் ஒரு நபரின் ஆதானத்தை பயன்படுத்துவதற்கும் பலனை அனுபவிப்பதற்கும் (Use and Enjoyment) காணப்படும் இடையூறு எனலாம்.
      .
    2. ஒரு நபர் ஆதனத்தை பயன்படுத்துவதற்கும் பலனை அனுபவிப்பதற்கும் (Use and Enjoyment) உரிமை காணப்படும் அதேவேளை, அது இன்னொரு நபரின் Use and Enjoyment  யைப் பாதிப்பதாக அமையக் கூடாது. அதாவது பயன்பாடு நியாயமானதாக அமைய வேண்டும். எது நியாயமான பயன்பாடு என்பதை தீர்மானிக்க நீதிமன்றங்கள், இரு தரப்பினரது உரிமைகளில் ஒரு சமநிலையைப் பேண முயலும்.
      .
    3. தொல்லை மனித நடவடிக்கை மூலம் (அதீத ஒலி எழுப்புதல்) அல்லது ஒரு இடத்தில் காணப்படும் பௌதீக நிலைமையால் (துர்நாற்றமான குப்பை மேடு) ஏற்படலாம்.
      .
    4. தொல்லை தீங்கியல் பொறுப்புடமையைச் சுமத்தும்.
      .
    5. தொல்லை இரு வகைப்படும். பொதுத் தொல்லை ( Public Nuisance) – அரச உரிமைகளில், பொது மக்களின் உரிமைகளில் மீறலை ஏற்படுத்துவதாகும்.  இதன் போது தனி நபர்களின் ஆதனப் பயன்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்ற அவசியம் தேவையில்லை. இது குற்றவியல் கடப்ப்பாட்டைத் தோற்றுவிக்கும். ஆதலால் அதற்;கு எதிரான நடவடிக்கையினை அரசே (பொலிஸ்) எடுக்கும். ஆனாலும், ஒரு பொதுத் தொல்லையின் போது, (அந் நபரின் ஆதனப் பயன்பாடில் இடையூறு காணப்படாத நிலையிலும்), ஒரு நபர் பொது மக்களை விடவும் அதிகமாக பாதிப்புற்றார் என்றால் அவர் அதற்கு இழப்பீடு கோரி சிவில் வழக்குத் தொடுக்கலாம்.
      .
    6. மாறாக, தனித் தொல்லை ( Private  Nuisance ) எனும் போது அது தனி நபர்களின் ஆதனப் பயன்பாட்டில் இடையூறு ஏற்படும் போது தோன்றும். இது குடியியல் கடப்ப்பாட்டைத் தேற்றுவிக்கும். அதற்கு இழப்பீடு கோரி சிவில் வழக்குத் தொடுக்கலாம்.
      .
    7. தொல்லை ஆதனத்துக்குள் உள்நுழையும் நபரால் ஏற்படுமானால், அது அத்து மீறி நுழைதல் (trespass) எனும் குற்றவியல் கடப்பாட்டைத் தோற்றுவிக்கும். மாறாக தொல்லை ஆதனத்திற்கு வெளியே இருந்து உருவாகுமானால் அது தனித்தொல்லையாகும்.
      .
    8. தனித் தொல்லையை நிறுவ, 1. நியாயமற்ற தலையீடு (Unreasonable Interference) 2. கணிசமான தலையீடு (Substantial interference) என்ற இரு விடயங்கள் தேவைப்படுத்தபடும்.
      .
    9. நியாயமற்ற தலையீட்டை எண்பிக்க, அங்கு நியாயமான ஆதனப் பயன்பாடு காணப்பட்டதா என ஆராயப்படும். நியாயமான ஆதனப் பயன்பாடு, சூழ்நிலைகளை வைத்தும் மாறுபடும் அக்கறைகளுக்கிடையில் ஒரு ஒப்புரவான சமநிலையப் பேணுவதன் மூலமும் தீர்மானிக்கபடும்.
      1. ஆதனத்தின் இயற்கையானதும், சாதாரனமானதும் (Ordinary and Natural) ஆன பயன்பாடு நியாயமான பயன்பாடாக கொள்ளப்படும்.
        இருப்பினும் Watt v. Jamieson வழக்கில் தீவிரமான அல்லது கணிசமான தொல்லை இயற்கையானதும், சதாரனமானதுமான பயன்பாட்டின் போதே தோன்றியது என்று எதிர்வாதம் செய்ய முடியாது.
      2. தொல்லையை ஏற்படுத்தும் விடயப் பொருள், பொது மக்களுக்கு நன்மை பயர்பனவாக இருப்பின் (திருத்த வேலைக்காக வீதியை முடிவிடல்) அல்லது தற்காலிகமானதும் தவிர்க்க முடியாததுமாக இருந்தால் ( கட்டிடம் கட்டும் போது ஏற்படும் சத்தம் தூசி) அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கபடும்.
        ஆயினும் இச் சலுகை வறையறைகுட்பட்டதாகும். தாங்க முடியாத கடுமையான இழப்பின் போது பொறுத்துக் கொள்ள நிர்ப்பந்திப்பது ஒப்புரவாகாது. அதன் அடிப்படையில் Boomer v. Atlantic Cement co வழக்கில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் எனில் அதில் வரும் இழப்பையும் பொதுமக்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும், Kennaway v. Thompson எனும் வழக்கில் பாதிப்புறுபவர் தடையாணையோ இழப்பீடோ பெறலாம் என தீர்க்கபட்டது.
      3. குறித்த பிரதேசத்தில் காணப்படும் வழமையான நடவடிக்கையை நியாயமற்ற பயன்பாடாக கொள்ளப்படமாட்டாது. உதாரணமாக கைத்தொழில் பிரதேசத்தில் தொழிற்சாலையினால் தொல்லை ஏற்படுகிறது என கூற முடியது.
        இருப்பினும், சாதாரன அசௌகரீகம் ஏற்படுவதற்க்கும் மேலாக பௌதீக சேதம் அல்லது வீட்டினுள் வசிப்பதற்க்கு, தொழிலுக்கு இடையூறு ஏற்படுமானால் அவ்வறான தொல்லைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். (Helen’s Smelthing Co. V. Tipping)
      4. நியாயமற்ற பயன்பாட்டைத் தீர்மானிக்க, எதிராளி தொல்லையைத் தவிர்ப்பற்கு எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாரா என்ற விடயம் கருத்தில் கொள்ளப்படும். அதிக செலவில்லாமலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் குறித்த தொல்லை தவிர்க்கபட்டிருக்க முடியுமாக இருந்தால் அதை எதிராளி எடுத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கபடும். இருப்பினும் சில சந்தர்பங்களில் அவ்வாறு எடுத்திருந்தாலும், குறித்த பயன்பாடு நியாயமற்ற பயன்பாடு என கருதப்பட வாய்ப்புகள் உள்ளன.
        .
    10. தனித் தொல்லையை நிறுவ, தேவைப்படுத்தப்படும் இரண்டாவது விடயம், குறித்த தொல்லை கணிசமானதாக (Substantial) இருத்தல் வேண்டும். ஆதனத்தில் பௌதீகரீதியான சேதத்தை ஏற்படுத்துமானால் அது கணிசமான தொல்லையாக கொள்ளப்படும். (தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் வீட்டில் கடுமையான தூசுப்படிவு ஏற்பட்டு சுவாச நோயை ஏற்படுத்தல்)
      .
    11. அவ்வறு இல்லாத விடத்து, சூழ்நிலைகளையும் பிற விடயங்களையும் வைத்து அது கணிசமான தொல்லையா என நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். பிளமிங்கின் கருத்துப்படி, ஒரு தொல்லை மனித இருப்பிற்கே (வாழ்க்கையில்) இடையூறை ஏற்படுத்துமானால அதைக் கணிசமான தொல்லையாக கொள்ளப்படும். (வசிக்க முடியாத அளவிற்கு சத்தம் அயல் வீட்டில் இருந்து வருதல்)
      1. உதாரணமாக Lakshman de Silva vs Vivekanandan  என்ற வழக்கில் வீட்டின் நுளைவாயில், தரித்து வைக்கபட்ட வாகனங்களினால் (parked vehicle) தடைப்பட்டது. இது கணிசமான தொல்லையாக கொள்ளப்பட்டது.
      2. Matania vs  National Provincila Bank Ltd என்ற வழக்கில் கட்டிட நிறுமானத்தின் போது ஏற்ட்ட தற்காலிக சத்தம், தூசு என்பன (வழக்கின் சூழ்நிலையையும், நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு) கணிசமான தொல்லையாக கொள்ளபட்டது.
      3. வழக்காளிக்கு அசாதாரன உணர்திறன் காணப்படுமாயின் (Abnormal Sensitivity) அதனால் ஏற்படும் பாதிப்புக்கு தொல்லை என நிவாரணம் கோரலாகாது. (உதாரணம் Hyperacusis எனும் மருத்துவக் குறைபாடுள்ள நபர்கள் சத்தத்திற்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக காணப்படுவாரகள். இவர்கள் சாதாரன சத்தமும் தமக்கு தொல்லை தரும் என இழப்பீடு கோர முடியாது)
        .
    12. தொல்லையை நிறுவ, தொல்லை தருவதற்கான எண்ணம் காணப்பட்டது என்பதை எண்பிக்க அவசியம் காணப்படாது (Strict Liability). தொல்லையை ஏற்படுத்திய செயல் எண்ணத்துடன் அல்லது கருத்துடன் செய்யப்பட்டது என்பனை எண்பிப்பது அவசியமாகும். (உதாரணமாக அதிக சத்தில் பாடலை ஒலிக்கச் செய்து தொல்லையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் காணப்பட்டது என நிறுவ வேண்டிய அவசியம் காணப்படாது. மாறாக அதிக சத்தில் பாடலை ஒலிக்கச் செய்யும் எண்ணம் காணப்பட்டது என்று எண்பிப்பதே போதுமானதாகும்)
      1. Christie v. Davey  என்ற வழக்கில் எதிராளி தொல்லை தரும் நோக்கத்தில் சுவரின் மறுபக்கத்தில் தட்டி சத்தத்தை எழுப்பியது தொல்லையாக கொள்ளபட்டது.
      2. Gunananathan v Premawardana  வழக்கின் தீர்ப்பில், பொதுவாக ஒரு விடயத்தில் குற்றவாளி என எண்பிக்க செயலுக்கான எண்ணம் காணப்பட வேண்டும். ஆனால், தொல்லை எனும் விடயத்தில் குற்றவாளி என கூறுவதற்;கு அச் செயலின் போது தொல்லை தரும் எண்ணம் காணப்பட்டது என எண்பிப்பது அவசியமற்றது என விளம்பப்பட்டது.
        .
    13. மேலும் குறித்த தொல்லை நிகழும் என்ற முன் அனுமானம் (foreseeability) காணப்பட வேண்டும் என்பது இன்னொரு தேவைப்பாடாகும் என Cambridge Water Co v. Eastern Countires Leather plc  என்ற வழக்கிலே தெரிவிக்கப்பட்டது. தொல்லையைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தொல்லைக்கான பொறுப்புடமையில் இருந்து நபரை விடுவிக்காது என தீர்பிடப்பட்டது.
      .
    14. தொல்லைக்கான நிவாரணமாக இழப்பீடு அல்லது தடையாணை அல்லது அவை இரண்டையும் பெறலாம். தொல்லை எற்படுவதற்கு முன்னரான நிலமைக்கும் அதன் பின்னரான நிலைமைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசத்தை இழப்பீடாக பெறலாம்.
      .
    15. தொல்லைக்கான நிவாரணத்தை பெற தொல்லைக்கும் சேதத்திற்கும் அண்மையத் தொடர்பு காணப்பட வேண்டும். Andreae v. Selfriedge Co. Ltd என்ற வழக்கில் கட்டிட நிறுமானத்தின் காரணமாக தமக்கு வாடிக்கையாளர் குறைந்துவிட்டதாக இழப்பீடு கோரிய போது, அது மறுக்கப்பட்டு, குறித்த தொல்லை நியாயமானது என தீர்க்கபட்டது. (அண்மைய தொடர்பு காணப்படவில்லை)
      .
    16. குறித்த விடயத்தில் தொடர்ச்சியாக தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றால், வழக்கின் தீர்ப்பு வரும் வரை குறித்த விடயத்தை நிறுத்தி வைக்க தடையாணை கோரலாம். தடையாணை விண்ணப்பத்ததை நீதிமன்றம் 1. (தடையாணை வழங்கபடின் தரபினர்களுக்கிடையில் எற்படும் அ)சௌகரியங்களின் சமநிலை கருத்தில் கொள்வதன் மூலமும், 2. குறித்த விடயத்தை தொடந்தும் அனுமதிப்பதால் ஏற்படும் இழப்பை (வழக்கு முடிவில் குறித்த விடயம் தொல்லை என தீர்க்கபடுமானால்) இழப்பீடு கொடுப்பதன் மூலம் ஈடு செய்ய முடியுமா என்பதை கருத்திக் கொள்வதன் மூலமும் 3. ஒப்புரவின் மூலமும் கருத்தில் கொண்டு தீர்மானிக்கும்.
      1. Boomer v. Atlantic Cement Co வழக்கில் குறித்த சீமந்துச் தொழிற்சாலையின் செயற்பாட்டிற்கு தடையாணை வழங்குவது பெரிய பொதுமக்கள் கூட்டத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் தடையாணைக் கோரிக்கை நிராகரிக்கபட்டது.
        .
    17. ஆதனச் சொந்தக்காரர் அல்லது ஆதனத்தின் உடமையில் இருப்பவர், ஆதனத்தை அனுபவிக்க உரித்துடையவர்கள் வழக்கிடலாம்.
      .
    18. தொல்லையை ஏற்படுத்துபவர்கள், அதில் பங்குபற்றுபவர்கள், அதை அனுமதிப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம்.
      .
    19. அதே நேரம் ஆதனத்துள் அத்துமீறி நுழைபவரால் ஏற்பட்ட தொல்லைக்கும், இயற்கையினால் ஏற்பட்ட தொல்லைக்கும் ஆதனச் செந்தக்காரர் பொறுப்புடமையாகமாட்டார். இருப்பினும் அவ்வாறான தொல்லைகளைத் தடுக்க அவர் இயலுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பது அவசியமாகும்.
      .
    20. ஆதனத்தில் வசிக்காத உரிமையாளர், தொல்லைக்கு பொறுப்புடமையாகமாட்டார், இருப்பினும், ஆதனத்தில் இருந்து எழும் தொல்லையை அவர் அனுமதித்து இருந்தால் பொறுப்புடமையாகப்படும். மேலும் தொல்லை இருப்பது தெரிந்து இருந்து அல்லது தொல்லை இருப்பதாக நியாயமாக ஊகிக்க கூடியதாக இருந்து, அவ் ஆதனத்தை அவர் வாடகைக்கு விட்டிருந்தால் பொறுப்புடமையாக்கப்படும். மேலும் தொல்லையை தடுக்க செய்யப்பட வேண்டிய திருத்த வேலையைச் செய்யும் கடப்பாடோ அல்லது அதற்கு அனுமதி கொடுக்கும் கடப்பாடோ ஆதனச் சொந்தக்காரனுக்கு காணப்படுமானால்; பொறுப்புடமையாக்கப்படும்.
      .
    21. இலங்கையில் 7 ஆம் இலக்க 1972 ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் பிரிவு 22 (1) (d) – அருகில் வசிப்போருக்கு தொல்லை தருபவர் என நீதிமன்றம் தீர்மானிக்கும் வாடகைக்காரரை வெளியகற்ற உத்தரவிடலாம். சட்டத்தில் தொல்லைகான வரைவிக்கணம் தரப்படவில்லை எனினும் தீங்கியலில் காணப்படும் தொல்லை என்ற விடயதிற்க்கும் இச் சட்டத்தில் காணப்படும் தொல்லை என்ற பதத்திற்க்கும் வித்தியாசம் இல்லை என Lakshman de Silva v Vivekanandan   என்ற வழக்கில் கூறப்பட்டது.
      1. Mallika Pillai vs. Ahamadu Marikkar என்ற வழக்கில் 19 நபர்களை களிப்பறையை உபயோகிக்க அனுமதி அளித்தது ஆதனச் செந்தக்காறருக்கு தொல்லை என தீர்க்கப்பட்டது.
      2. Perera and sons Ltd vs Pate   என்ற வழக்கில வேலையாட்கள் வடிகான்களில் சிறுநீர் கழித்து அசுத்தபடுத்தியது தொல்லை என தீர்த்து, வாடகை ஆதனத்தில் இருந்து வெளியகற்ற உத்தரவிடப்பட்டது.
      3. Lakshman de Silva v Vivekanandan   என்ற வழக்கில் தரித்து வைக்கப்பட்ட வாகனங்களால்  வீட்டின் நுளைவாயில் தடைப்பட்டது தொல்லை என தீர்த்து வாடகை ஆதனத்தில் இருந்து வெளியகற்ற உத்தரவிடப்பட்டது.
        .
    22. சட்டத்தினால் தாபிக்கபட்ட கருமம் ஒன்றை ஆற்றுகையில் ஏற்படும் தொல்லை அனுமதிக்கபட்டதாகும். இருப்பினும் அச் செயலை தொல்லை தராமல் செய்யகூடிய வாய்ப்பு காணப்படுமானால் அவ்வழியில் செய்யபட வேண்டும்.
      .
    23. இருபது வருடங்காளாக தொடரும் தொல்லையானால் அதற்கு எதிராகவும் வழக்கிட முடியாது.
      .
    24. ஏலவே தொல்லை காணப்படும் இடத்துள் புதிதாக (இடம்கொள்ள) வருபவர், தொல்லை தொடர்பில் வழக்கிடும் போது, வழக்காளி தொல்லை இருப்பது தெரிந்தே வந்திருந்தார் என்ற எதிர்வாதம் Contributory negligence  ஆக தோன்றினாலும் அவற்றை எதிர்வாதமாக கொள்வதில் நீதிமன்றங்கள் கவனமான போக்கைக் கைப்பிடிகின்றன. அச் சந்தர்பங்களில் நிகழ்வுகளின் சமநிலையக் கருத்தில் கொண்டும் ஒப்புரவின் அடிப்படையிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. புதிதாக வருபவர் வெறுமெனே ஏலவே இருக்கும் தொல்லை தொடர்பில் புகாரளிக்க கூடாது எனும் அதே வேளை புதிய ஆதனச் செந்தக்காரருக்கு உடமையை நியாயமாக அனுபவிக்கும் உரிமை காணப்பட வேண்டும் என்ற விடயமும் கருதில் கொள்ளப்படும். (Industries Inc v. Dell E. Webb Development Co )

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.