About Lesson
Lesson 1 : Natural Law – இயற்கைச் சட்டம்
by Azaam Ameer (Last Updated : 20 Jul 2022)
- அறிமுகம்
- சட்டவியல் என்றால் சட்டம் பற்றிய அறிவு, Science Behinds Law, Logic Behinds Law என பலவாறு குறிப்பிடலாம்.
- வெவ்வேறான அறிஞர்களால், அவர்கள் வாழ்ந்த காலம், இடம், கலாசாரம் என்பவற்றைப் பொறுத்து, சட்டவியலை அவர்கள் வரையறை செய்த பரப்பு, நோக்கம், நியாயப்படுத்துகை என்பன வேறுபட்டுக் காணப்பட்டன. அவை சிந்தனைப் பள்ளி – Schools of Thoughts எனப்படும்.
- அக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் முக்கிய கருத்தினை தன்னகத்தே கொண்டிருகின்றன. இயற்கைச் சட்டம் என்றால்
- Stoics -> கடவுளின் கட்டளைகள் என்றும்
- Aristotile -> எழுதப்படாத சட்டம் என்றும்
- Cicero -> பகுதறிவின் சட்டம் என்றும்
- Modern Jurist -> ஒழுக்க விழுமியக் கோட்பாடுகள் என்றும் கூறுகின்றனர்.
- எனவே, வெவ்வேறான சிந்தனைப் பள்ளிகள் ஒவ்வொன்றையும் பற்றி ஆராய்வதானது, அவற்றுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமை மற்றும் தொடர்பை ஒப்பீடு செய்து, அவை காலவோட்டத்தில் எவ்வாறு வளாச்;சிபெற்று வந்தன என்பதை உய்த்தறிய உதவும். இது சட்டவியல் பறிய பரந்த அறிவைப் பெற உதவும்.
- இயற்கைச் சட்டம்
- இது சுமார் 2000 வருடங்களாக இருந்து வரும் மிகப் பழமையான சிந்தனைப் பள்ளியாகும்
- இது மானுட ஒழுக்கம் (moral), விழுமியம் (ethical) சார் அனுபவங்களில் இருந்து தோற்றம் பெற்றது. இதன் அடிப்படையாக பத்குதறிவு, சமயம் சார் நம்பிக்கை என்பன உள்ளன.
- மனிதன், வாழ்வின் நியமங்களுக்கு அமைவாக, சரி – பிழையைப் பகுத்தறியும், அவனோடு என்றும் இணைந்துள்ள, பிரிக்க முடியாத உள் உணர்வினைக் கொண்டுள்ளான்.
- இயற்கச் சட்ட சிந்தனைப் பள்ளியானது மேற்சொன்ன மானுட தன்மையில் இருந்து தோற்றம் பெறுவதே சட்டம் என்கிறது. எனவே இங்கு சட்டமானது ஒத்திசைவான விடயங்களுக்குள் மட்டுப்படுத்தப் படுகின்றது. இது சட்டம் நியாயமானதாகவும் நீதியயை நோக்காகவும் கொண்டிருத்தல் வெண்டும் என்கிறது (Just and Fairness)
- எவை நீதியானதும் நியாயமானதும் என்பதை பகுதறிவின் (Human Reasoning) மூலம் அறிந்துகொள்ளலாம்.
- அவ்வாறு பகுத்தறிவால் எழும் விடயம் |இயற்கை| எனலாம்.
- நீதியானதும் சரியானதும் எவை என்பது மனிதன் வாழும் காலத்திற்கு ஏற்பவும், இடத்திற்கேற்ப்பவும் மாறுபடும். இருந்தாலும் சில விடயங்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். உதாரணம் : களவு, கொலை என்பன பிழை என்பது எப்போதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும்.
- எனவே அவ்வாறு இயற்கையாய் தோன்றும் சட்டம் இயற்கைச் சட்டம் எனலாம்.
- சட்டம் மனிதனால் இயற்றபடுவதால், அவை நீதியை முழுமையாக நிலை நிறுத்துவதில்லை, எப்போதும் ஒரு இடைவெளி காணபட்டுக் கொண்டே இருக்கும்.
- நீதிக்கும், சட்டத்திற்க்கும் தெளிவான வரைவிலக்கணங்கள் இல்லை. அவை வெவ்வேறானவை இலத்தின் மொழியில் சட்டம்-> lex என்றும் நீதி -> Justitia என்றும் குறிப்பிடப்படுகிறது.
- நீதியை நிலைநாட்டும் போதே மனிதன் இயற்றிய சட்டம் அதற்கான மதிப்பைப் பெறும்.
- இயற்கைச் சட்டச் சிந்தனைப் பள்ளி பின்வரும் தன்மைகளைக் கொண்டுள்ளன:
- நீதி-நியாயம் எவை என்பதே உயரிய சட்டம்.
- ஒவ்வொரு மனிதனிடத்திலும் சரி-பிழை, அல்லது நீதி-நியாயம் எவை என்பது பற்றிய அறிவு-சிந்தனை காணப்படும் என்கின்ற எடுகோள்
- உயரிய சட்டத்தைப் பகுதறிவின் மூலம் அடயாளம் காணலாம்.
- இயற்கைச் சட்டம் உயரிய சட்டம் என்பதால் அது Positive Law யை மேலோங்கும்.
- இயற்கைச் சட்டத்தை 4 காலங்களாக பிரித்து ஆராயலாம் :
- தொற்காலம்
- மத்திய காலம்
- மறுமலர்ச்சி காலம்
- நவீன காலம்.
- தொற்காலம்
- தொற்காலம் என்பது புராண கிரேக்க-ரோம காலத்தைக் குறிக்கும்.
- ஹெராகிலிடஸ் (கி.மு 535 – கி.மு 475) – பகுத்தறியும் திறனே, இயற்கைச் சட்டத்தின் சாரம், அடிப்படை என்றார்.
- சோக்கிரடீஸ் (கி.மு 470 – கி.மு 399)
- சோக்கிரடீஸ் வினாக்கள் தொடுப்பதன் மூலம் கருத்தாடல்களை உருவக்குவதில் நிபுணராகும். இது சோக்கிரடீஸ் முறைமை (Socretilc Method) என்று அறியப்படும்.
- இயற்கையாக பௌதீக (Physical Law) விதிகள் காணபடுவது போல், ஒழுக்க விழுமிய விதிகளும் (Moral Law) காணபடுகின்றன.
- இவர் ஒழுக்கக் கோட்பாடுகளை (Principles of morality) பகுத்தறிவு (reasoning) மற்றும் நுண்ணறிவுப் (insight) பிரயோகத்தின் மூலம் வெளிக்கொணரலாம் என்றார்.
- பிலேடோ எழுதிய “The Dialog” எனும் நூலில் இருந்து இவரின் கோட்பாடுகளை அறியக் கூடியதாக உள்ளது.
- பிலேட்டோ (கி.மு 428 – கி.மு 348)
- இவர் சோக்கிரடீஸின் மாணவனாவார்.
- இவர் எழுதிய “The Republic” எனும் நூலிலை நீதி என்பதன் கருத்து என்ன என்ற வினாவுடனேயே ஆரம்பிக்கிக்கிறார்.
- இறைவன் எல்லா மனிதகளுக்கும், நீதி(Justice), நெறிமுறை(Ethical) எது என்பதை உணரும் திறனைக் கொடுத்துள்ளான்.
- முடிவான அல்லது முழுமையான நீதியை பகுத்தறிவின் மூலம் வெளிக்கொணரலாம் என இவர் நம்பினார்.
- அதனாலேயே, அரசியல்வாதிகளுக்கான கல்லூரியை ஆரம்பித்த இவர் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள், அரசர்கள் தத்துவஞானிகளாக இருக்க வேண்டும்; என்றார். ஏன் எனில் அவ்வாறு இருந்தால்தான் அவர்கள் நீதியை நிலைநாட்டக்கூடிய சட்டதிட்டங்களை பகுதறிவின் மூலம் வெளிக்கொணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என கருதினார்.
- ஆட்சியாளர்கள் விவேகமற்றவர்களாக இருந்தால், அந் நாடு ஊழல் நிறைந்ததாகவும் தோல்வியடைந்ததாகவும் மாறும் என்றார்.
- அரிஸ்டோடில் (கி.மு 384 – கி.மு 322)
- இவர் பிலேட்டோவின் மாணவனாவார், பிரபல்யமான ஆட்சியாளர்கள் கற்ற லைசியம் எனும் கல்லூரியைத் தோற்றுவித்தவர்
- இவர் Nicomachean Ethics எனும் புத்தகத்தை எழுதியவராவார்.
- பௌதீக மற்றும், ஒழுக்க விழுமியங்களின் மேம்பாட்டை நோக்காக கொண்ட அபிவிருத்தியை, கடவுளின் படைப்பான “இயற்;கை” இயல்பிலேயே தன்னகத்தே உள்ளார்ந்தமாகக் கொண்டுள்ளது என்றார்.
- மனிதன் இயற்கையின் ஒரு அங்கம்.
- பகுதறிவுள்ள மனிதனுக்கு உள்ள உண்மையை அறியும் வேட்கை, அவன் உண்மைகளை அல்லது யதார்த்தங்களைப் புரியவும், அவனது அனுபவங்களை, உணர்வுகளை விளங்கவும் துணைசெய்கிறது. அதாவது மனிதன் நீதி எது என ஊய்தறியவும், அவற்றை விளங்கவும் ஆற்றல் பெற்றவன்.
- சோக்கிரடீஸ், பிலேடோ, அரிஸ்டோடில் மூவரும் எப்போதும் மாறாத, எல்லோருக்கும் பொதுவான நியமங்கள் காணப்படுகின்றன என்றும், அவற்றைப் பகுத்தறிவின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும், மனிதன் இயற்றும் சட்டங்கள் அவற்றுக்கு இயைவாக இருக்கவெண்டும் எனவும் நம்பினார்கள்.
- சிசேரோ (கி.மு 106 – கி.மு 43) – உண்மையான சட்டம் இயற்கையுடன் ஒத்திசைந்து போகும். அவை பிரபஞ்சங்களுக்கு பொதுவாக பிரயோகிக்கலாம், அழிவில்லாதது, மாறாதது, எல்லாக் காலத்திற்கும் பொதுவானது.
- மத்திய காலம் (5ம் நூற்றாண்டு – 15ம் நூற்றாண்டு)
- இது மேற்கு ஐரோப்பா, ரோமப் பேரரசின் கீழும், சமய விடயங்கள் போப்பாண்டவர் கீழும் காணப்பட்ட காலப் பகுதியாகும்.
- அப்போது கிரேக்க ரோம அறிவியலுக்கான கற்;கைகள் மழுங்கி, சமய சார் நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
- புனித அகஸ்டீன், புனித தோமஸ் அக்கியுனாஸ் போன்றோர் இக் காலத்தில் தோன்றிய பிரபல்யமான தத்துவ ஞானிகளாகும்.
- புனித அகஸ்டீன் (கி.பி 354 – கி.பி 430)
- 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோம கத்தோலிக்க பேரரசு விசிகொத்களின் கரங்களில் வீழ்ந்த பின்னர், மக்கள் கத்தோலிக்க மதத்திற்க்காக உரோம மரபைக் கைவிட்டதன் தண்டனையே இது என விமர்சனம் செய்ய தொடங்கினர்.
- அதற்கு பதில் கூறும் வகையில், இவர் எழுதிய De Civitas Dei (City of God) எனும் நூலில்,
- மனிதர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று அன்பினால் ஆளப்படும் இரட்சிக்கப்பட்ட கடவுளின் தேசத்தவர்கள். மற்றயது இச்சையினால் ஆளப்படும் சபிக்கப்பட்ட மனித தேசத்தவர்கள்.
- நல்ல மனிதர்கள் எண்ணிக்கையில் சிறியவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆதாலால் பாவம் செய்யும் மனிதர்களைத் தண்டனை எனும் பயத்தால் கட்டுபடுத்த வேண்டும், இதை அரசு செய்ய வேண்டும்.
- ஆட்சி அதிகாரம், கடவுளின் புறத்தில் இருந்து வருவதாகும். அரச கட்டளைகள் அவை நல்லாட்சியில் இருந்து வந்தாலும், மறுதலையாக வந்தாலும் மக்கள் அதைப் பின்பற்ற வேண்டும். ஏன் எனில், ஒன்றில் அவை இறை அருளாக அல்லது தண்டனையாக இருக்கும் என்றார்.
- சட்டங்கள் கடவுளின் புறத்தில் இருந்து வெளிப்படுவது என்று அவர் கருதினார்.
- புனித தோமஸ் அக்கியுனாஸ் (கி.பி 1255 – கி.பி 1274)
- இவர் அரிஸ்டோடில் போன்றோரின் கிரேக்கத் தத்துவத்திற்கும் கத்தோலிக்கச் திருச்சபை நம்பிக்கைகளுக்குமிடையே ஒத்திசைவை உருவாக்க முயன்றார். அவர் புனித அகஸ்டீன் இன் கருத்துக்கு மாற்றமான கொள்கையினைக் கொண்டிருந்தார்.
- இவர் எழுதிய Summa Theologica எனும் நூலில்,
- இயல்பிலே மனிதன் ஒரு அரசியல் மிருகம்
- இவ்வுலக வாழ்வு அர்த்தமுள்ளது எனவே மனித செயற்பாடுகள் அதை அபிவிருத்தி செய்வதாக அமையவெண்டும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்.
- இயற்கை நீதி அதற்கான வழிகாட்டலைக் கற்றுத்தரும்
- அரசு மறுமைக்கான வாழ்விற்காக மட்டும் இன்றி இவ்வுலகின் நலன்களையும் மேலொங்கும் வகையில் வளம்பெற வைக்க வேண்டும்.
- சட்டங்களை 4 வகையாக பிரிக்கலாம்
- Eternal Law (lex eternal) உள்ளார்ந்த சட்டம் – மனிதன் பூரணமாக அறிய முடியாத இறை சட்டம்
- Divine Law (lex diviona) தெய்வீகச் சட்டம் – உள்ளார்ந்த சட்டத்தின் ஒரு பகுதி. கடவுள் வேதங்களால் மனிதனுக்கு அறிவித்த சட்டம்
- Natural law (lex natura) இயற்கைச் சட்டம் – தெய்வீகச் சட்டத்தின் ஒரு பகுதி. மனிதன் தனது பகுத்தறிவால் புரிந்துகொள்ளக் கூடிய சட்டம்.
- Human Law (lex humana) மனித சட்டம் – மனிதன் இயற்றிய சட்டம்.
- இயற்கைச் சட்டத்தை வேதங்களைக் கற்பதன் மூலமும், பகுதறிவைப் பிரயோகிப்பதன் மூலமும் வெளிக்கொணரலாம்.
- மனித சட்டங்கள் இயற்கைச் சட்டத்திற்கு ஒத்தியைவாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் மனிதன் அவ் மனித சட்டங்களைப் பின்பற்றத் தேவை இல்லை என்றார்.
- இவரின் இயற்கை நீதிக் கோட்பாடுகள் அமெரிக்க, பிரான்ஸ் அரசியலமைப்பில் காணப்படுவதால் அதன் பிரதிபலிப்பு நவீன அரசியலபிமானியத்தில் கண்டுகொள்ளலாம்.
- மறுமலர்ச்சி காலம்.
- இக் காலப் பகுதியில் ரோமப் பேரரசு பிரான்ஸ், ஸ்பெயின், போத்துகல் போன்ற நாடுகளாக பிரிவடைந்தது.
- மார்டின் லூதர், கெல்வின் போன்ற மறுசீரமைப்பாளர்களாலும், புரட்டஸ்த்தாந்து கொள்கையின் தோற்றத்தாலும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.
- இயற்கை நீதிக் கோட்பாட்டை வேதங்களில் மாத்திரம் தங்கியிராது, புராதன கிரேக்க ரோம தத்துவங்களை புதிய நோக்கில் ஆராயத் தொடங்கினார்கள். சில முக்கிய அறிஞர்களின் கருத்துக்கள் :
- Hugo Grotius – இயற்கைச் சட்டமே தாய்ச் சட்டமாகும். அதனிலிருந்து உருவாவதே Positive, சர்வதேச சட்டங்கள் போன்றன.
- Thomos Hobbes – இயற்கை நீதியே, இறையான்மையின் அறுதியான அதிகாரத்தின் ஆதாரமாக இருக்கிறது.
- John Locke – சமூக ஒப்பந்தக் கொள்கை (Social Contract Theory) ஒன்று உள்ளது, ஆட்சியாளர்கள் சொத்துக்களை அனுபவிக்கையில், மக்கள் நலனை உறுதி செய்து ஒரு சமனிலையைப் பேண வேண்டும். (தவறும் போது புரட்சிகள் உருவாகும்)
- John Rousseau – அனைத்து ஆணும் பெண்ணும் சுதந்திரமானவர்களும், சமனானவர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிரிக்க முடியாத உரிமைகளுக்கு உரித்தானவர்களாவார்கள். இயற்கை சட்டத்தில் இருந்து இவ் இயற்கை உரிமை (Natural Rights) உருவாகிறது. இக் கருத்தேற்ப்பே, தற்கால மனித உரிமைகள் (Human Rights) தோற்றம் பெற ஏதுவாக அமைந்தது. அதாலால் மனிதன் பேச்சுச் சுதந்திரம், வாழும் சுதந்திரம் போன்ற பிரிக்க முடியாத உரிமைகளுக்கு உரித்தானவனாவான்.
- நவீன காலம்.
- பின்வரும் காரணங்களால் இயற்கை நீதிக் கோட்பாடு மருவத் தொடங்கியது.
- விஞ்ஞான அறிவின் வளர்ச்சி – விஞ்ஞானம் தகவல்களை அவதானிப்பதன் மூலம் அல்லது பரீட்சிப்பதில் தங்கியிருக்கும். இயற்கைச் சட்டம் இந்த முறைமைக்குப் பொருந்தாது.
- இயற்கைச் சட்டத்தை தோதுக்கு ஏற்றால் போல் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்து பிரயோகிக்கப்பட்டது. உதாரணமாக கிறிஸ்தவ அறி;ஞர்கள் இயற்கைச் சட்டத்தை திருச்சபைகளின் கொள்கைகளை நியாயப்படுத்த பயன்படுத்தினார்கள்.
- சட்டத்தை அது எவ்வாறு உள்ளதோ அதைப் போல் ஆராய்ந்து பிரயோகிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய Positivist தோற்றம் பெறத் தொங்கினார்கள்.
- இருப்பினும் இண்டாம் உலக யுத்தத்தில் நாஸிக்களால் புரியப்பட்ட குற்றச் செயல் தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாங்கள் செய்தவைகள் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலேயே என்ற வாதம் இயற்கைச் சட்டக் கோட்பாடு மீண்டும் அங்கீகாரம் பெற வழிகோரியது.
- நவீன காலத்தில் தோன்றிய பின்வரும் சட்ட அறிஞர்களின் கூற்றுக்கள் இயற்கைச் சட்டத்தின் கருத்தேற்புகளைச் சுட்டி நிற்கின்றன –
- Rudolf Stammler – சட்டம் எல்லாம் இயற்கைச் சட்டமே, அதில் பல பரிமாணங்கள் உண்டு.
- Prof. Rawis – சட்டம் சமத்துவத்தையும், சுதந்திரத்தையும், சம வாய்ப்புகளையும் வழங்குவதாய் இருக்க வேண்டும். அது சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமனிலைப் படுத்த வேண்டும்.
- Francois Geny – இயற்கைச் சட்டம், சமூகங்களும் சூழலும் நிலைத்திருப்பதன் அடிப்படையாகும்.
- Kohler – Jural postulates கடமைகளையும், உரிமைகளையும் உருவாக்கி நிற்பதே சட்டத்தின் மிக முக்கிய அடைவு.
- Fuller – Morality of Law தான் சட்டம் என கூறிய இவர் பின்வரும் விடயங்களைக் கூறினார்
- சட்டம் இல்லாத போது அங்கு நிச்சயமற்ற நிலை தோன்றும் என்பதால், சட்டம் வரையறை செய்யப்பட்டு காணப்பட வேண்டும்.
- மக்கள் கடைபிடித்து ஒழுக, சட்டம் பகிரங்கமாக்கபட வேண்டும்.
- பின்னோக்கி ஆளும் சட்டம் முறையற்றது. அதை துஷ்பிரயோகம் செய்ய கூடாது.
- சட்டம் முழமையானதாகவும் இலகுவாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
- சட்டங்கள் ஒன்றோடொன்று முரண்படாதாகவோ, மற்றய சட்டங்களுடன் இயைவற்றதாகவோ காணப்படலாகாது.
- சட்டம் பின்பற்ற முடியாத, நடைமுறைச் சாத்தியமானதாக இருத்தல் கூடாது.
- சட்டத்தை அடிக்கடி மாற்றுவதால் தெளிவற்ற தன்மையை உருவாக்க கூடாது.
- சட்டதிற்கும், அது தொடர்புற்றிருக்கும் நிருவாகச் செயற்பாட்டிற்க்கும் தொடர்பு அல்லது ஒத்திசைவு இருக்க வேண்டும்.
- John Finnis – ஒழுக்க, நெறிமுறையை உள்ளடங்கிய பாரம்பரிய இயற்கைச் சட்டமானது, (அடிப்படை) உரிமைகள் என்ற பதத்தில் நவீன சட்ட முறைமையின் அடிப்படையாக காணப்படுகின்றன.
- இலங்கை வழக்கான Wijessuriya and Another V. State NLR 25 (அழகு ராணி வழக்கு) இல்
- இராணுவச் சிப்பாய் உயர் அதிகாரியின் உத்தரவின் பெயரில் ஒரு பெண்ணைச் சுட்டுக் கொன்றது, சட்டத்துள் அமைந்ததாகும் என பிரதிவாதி வாதிட்டார்.
- இராணுவச் சட்டம் பிரிவு 100 உத்தரவை மீறுவது குற்றம் என குறிப்பிடுவதும், குற்றவியல் கோவை பிரிவு 69 இல் சட்டத்தின் படியே நடப்பதாக எண்ணி, அந் நல்லெண்ணத்தில் செய்யும் குற்றம் குற்றமாகாது என்பதும் எதிர் வாதமாக கூறப்பட்டது.
- தீர்ப்பில் மிகச் சாதாரணமாகவும் வெளிப்படையாகவும் ( ) சட்டவிரோதம் என தெரியும் செயலை அது உயர் அதிகாரியின் உத்தரவாயின் செய்வது குற்றம் என தீர்க்கப்பட்டது.
- இத் தீர்ப்பில் இயற்கை சட்டம் கோட்பாடு தொடர்பில் வெளிப்படையாக தெரிவிக்கப்படாவிட்டாலும், தீர்ப்பு நியாயம் அதையே சுட்டி நிற்கின்றது.
- இயற்கை சட்டக் கோட்பாட்டின் பிரயோகம்
- சர்வதேச சட்டங்களில் – உ.ம் – ஒரு நாடு இன்னொரு நாட்டின் விடயத்தில் தலையிடக் கூடாது, நாடுகள் ஒப்பந்தங்களை கடைப்பித்து நடக்க வேண்டும் போன்ற கோட்பாடுகளின் பிரயோகம்.
- நாடுகளின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்வாங்கப்பட்டுள்ளமை
- சர்வதேச பொருத்தனைகளில் – ஐ நா மனித உரிமைப் பட்டயம், ஐஊஊPசு
- ஒப்புரவுக் கோட்பாடுகளில்
- நிருவாகச் சட்டத்தில் இயற்கை நீதிக் கோட்பாட்டின் பிர்யோகம் – உ.ம் இரு பக்கத்தையும் விசாரிக்க வேண்டும், தன் வழக்கிற்கு தான் நீதிபதியாக முடியாது
- பின்வரும் காரணங்களால் இயற்கை நீதிக் கோட்பாடு மருவத் தொடங்கியது.
Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.