Jurisprudence
About Lesson

Lesson 4 : Historical School
by Azaam Ameer (Last Updated : 13 Sep 2022)

  1. அறிமுகம்

   1. டயசின் கருத்துப் படி இச் சிந்தனைப் பள்ளி இயற்கைச் சட்ட கோட்பாட்டில் காணப்பட்ட தெளிவற்ற தன்மையின் எதிரொலியாகத் தோன்றியது.

   2. சட்ட முறைமைக்கு தெளிவான வரையறை காணப்பட வேண்டும்.

   3. சட்டத்தின் தன்மை அது வளர்சியடைந்த வரலாற்று கலாசார பின்னனிகளுடன் தொடர்புற்றது.

   4. சட்டம் மக்களின் பொதுவான உள் உணர்வினால் (General Consciousness) உருவானது

   5. அவ் உள் உணர்வு சமூகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தோற்றம் பெற்றது.

   6. சட்டம் என்பது, சமூக வழக்காறு, பொருளாதார தேவைகள், மதசார் கோட்பாடுகள், மக்களுக்கும் சமூகத்திற்க்குமான தொடர்புகளில் இருந்து தோற்றம் பெற்றது.

   7. சட்டம் இயற்றப்படுவது அல்ல, அவை காணப்படுகிறது.

   8. இச் சிந்தனைப் பள்ளியின் பிரதான மூலகமாக மக்களின் தேவைக்கேற்ப்ப தோற்றம் பெற்று மாறும் வழக்காறு காணப்படுகிறது.

   9. சட்டம் இயற்கையாக வளர்ந்துவரும் ஒன்றாகும்.

   10. சட்டம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் ஒன்றல்ல; வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறான சட்ட அமைப்புக்களே பொருந்தும்.

 1. Montesquieu – (As per the society needs)
  1. சட்டம் சமூதாயத்தின் நடைமுறைகளில் இருந்து தோற்றம் பெறுவதால், அதனை நல்லதா கெட்டதா என ஆராய்வது தேவையற்றது.
  2. சட்டம் குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியல் முறை, நிலைமைகளுக்கு ஏற்ப தோற்றம் பெற்றுகிறது.
   உ. அதனால் சட்டமும் மக்கள் தேவைக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது.
  3. அதாவது சட்டம் குறிப்பிட்ட மக்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு, அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றம் பெற வேண்டும்.
 2. Savigny – Concept of Volkgeist | Law is like language | Darvin
   1. மக்களின் உள்உணர்வின் வெளிப்பாடே சட்டமாகும்.
   2. இவர் மக்கள் ஆணைக்கு அல்லது விருப்புக்கு எதிரான சட்டங்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்.
   3. இவரின் வரலாற்று ஆய்வுகள் தொடர்பான அனுபவம், சட்டத்தின் பிரதான மூலகம் வழக்காறு என முதன்மைப்படுத்த வைத்தது.
   4. தேசியவாதம் (யெவழையெடளைஅ) வளர வளர சட்டமும் வளரும்.
   5. மொழியை போலவே சட்டமும் பிரதேசத்திற்க்கு பிரதேசம், காலத்திற்க்கு காலம் மாறுபடும்.
   6. சட்டம் காணப்படும் ஒன்றாகும், அது இயற்றப்படுவதொன்றல்ல.
   7. வழக்காறு மற்றைய அனைத்துச் சட்டங்களையும் மேலோங்கும்.
   8. நீதிபதிகள் பிணக்கில் தொடர்புற்ற சமூகத்தின் பழக்கவழக்கங்களைக் கருத்தில் கொண்டே தீர்ப்பு வழங்க வேண்டும்.
   9. சமூக மாற்றத்தை டாவினின் கூர்ப்புக் கொள்கையுடன் ஒப்பிட்டு நோக்கினார்.
    த. விமர்சனம்
    1. கருத்தேற்பில் முறண்பாடு – சட்டம் காணப்படுவது என்று கூறும் அதே வேளை, ஜெர்மனியில் ரோம டச்சுச் சட்டத்தை எவ்வாறு உள்வாங்கலாம் எனவும் ஆராயந்தார்.
    2. volksgeist not a exclusive source of law – வேறுவகையான மூலகங்களும் உண்டு. (ஒப்புரவுக் கோட்பாடுகள்)
    3. வழக்காறுகள் எப்போதும் மக்களின் வரவேற்ப்பைப் பெற்ற உள்ளுணர்வுகளாக இருப்பதில்லை, அது வேறு சமூகங்களைப் பார்த்து பின்பற்றத் தொடங்கியதாகவும் இருக்கலாம்.
    4. Juristic Pessimism (pessimism = tendency to see the worse)  – மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதற்காக பிழையான ஒன்றை சட்டமாக கொள்ள முடியாது.
    5. பூகோளமயமாதல் Volkgeist கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது
 3. Henry Maine
  1. சட்டம் நான்கு படிமுறைகளில் வளச்சிபெற்றது
   1. முதலாம் நிலை – கடவுளின் அருள் பெற்று ஆட்சியாளர் இயற்றிய கட்டளைகள
   2. இரண்டாம் நிலை – அக் கட்டளைகள் வழக்காறாக மாற்றம் பெற்றது
   3. மூன்றாம் நிலை – உண்மை வழக்காறுச் சட்டத்தையும் அதன் நிருவாகத்தையும் அறிந்தவர்களின் கை ஓய்ந்து, அது சாதாரன மக்களின் கைகளுக்கு அல்லது சிறிய மக்கள் குழு ஒன்றின் கைகளுக்கு சென்றடைந்தது
   4. நான்காம் நிலை – சட்டம் தொகுக்கப்பட்டு பிரகடனபடுத்தபட்டது.
  2. சாவினி போல், வழக்காறே சட்டமானது என வெறுமனே கூறாமல் அது எவ்வாறு வளர்ச்சிபெற்றது என்பதையும் விளக்கினார்.
  3. சட்டவாக்கத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டது
 4. Georg Friedrich Puchta – Human will – Sate Will
  1. பொது அக்கறைக்கும் தனிநபர் அக்கறைக்கும் முறன்பாடு காணப்படும் போது அரசு அதனை நிவர்த்திசெய்யும்.
  2. மக்களோ அரசோ தனியாக சட்டத்தை இயற்ற முடியாது.
 5.  Malinowski
  1. ஆரம்பத்தில் சட்டத்திற்க்கும் வழக்காறிற்கும் ஆன வேறுபாடுகள் தெளிவாக காணப்படவில்லை.
  2. பின்னர் சட்டம் என்பது நடைமுறைப்படுத்தபட கூடிய ஒன்றாகவும், வழக்காறு சட்டமாகாத முறைசாரா விடயமாகும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.