Jurisprudence
About Lesson

Lesson 2 : Analytical Positivism – புலனறிவாதம்
by Azaam Ameer (Last Updated : 22 Jul 2022)

  1. அறிமுகம்
    1. புலனறிவாதமும் இயற்கை சட்டத்தைப் போல ஒரு பரந்த சிந்தனைப் பள்ளியாகும்.
    2. இயற்கைச் சட்டக் கோட்பாட்டில் காண்ப்பட்ட தெளிவற்ற தன்மை, மற்றும் விஞ்ஞான பூர்வமாக அதை விளங்கப்படுத்த முடியாத நிலை என்பவற்றின் எதிரொலியாகவே புலனறிவாதம் தோன்றியது.
    3. எனவே புலனறிவாதிகள் (Positivist) நிகழ்கால விஞ்ஞான முறைமையைத் தழுவி சட்டவியலை அனுகினர். புலனறிவாததின் சாரம் சட்டம் ஒழுக்க, சமூக, நெறிமுறை விழுமியங்களிலிருந்தும் வேறானவையாகும். முன்வறையற்ற செய்யபட்டதும் மனிதனால் உருவாக்கபடுவதும் ஆகும்
  2. ஜெரமி பெந்தம்
    1. பகுத்தறிவாதத்தின் முன்னோடியாக ஜெரமி பெந்தத்தைக் குறிப்பிடலாம். ஐரோப்பியக் கண்டத்தின் எழுதப்பட்ட சட்ட முறைமையால் செல்வாக்கால் கவரபட்ட இவர், இங்கிலாந்தின் வழக்காறாக வரும் எழுதப்படாத பொதுச் சட்ட அல்லது நீதிபதிகள் உருவாக்கும் (Judge Made Law) சட்ட முறைமையை மிக கடுமையாக விமர்சித்தார். இதை நாய்களின் சட்டம் (Dog’s Law) என அவர் வர்ணித்தார்.
    2. இவர் “Of Law in General, An Introduction to the Principles of Morals and Legislation” எனும் புத்தகங்களை எழுதியவராவார்.
    3. எழுதப்படாத பொதுச் சட்டத்தை நிராகரித்த இவர், சட்டம் என்பது இறைமை (Sovereign) விரும்புகின்ற தண்டனைகளாக (Sanction) அல்லது பரிசாக (Reward) இருக்க வேண்டும் என்றார்.(இறைமை பொருந்திய அரசு இயற்றும் சட்டம் )
      ழ ருவடைவையசயைnளைரஅ என்றால், ஒரு செயல் அல்லது முடிவு பெரிய மக்கள் குழுவிற்;கு நன்மை விளைவிக்கும் என்றிருந்தால், அது சரியான செயலே அல்லது முடிவே என்பதாகும்.
    4. இவருடைய சட்டத் தத்துவம் Utilitarian Individualism – தனி நபர் பயன்பாட்டுவாதமாகும். இது Laissez Faire எனும் கோட்பாட்டினால் உந்தபட்டதாகும்.
      ழ சட்டத்தின் இலக்கு தனி நபர்களை அடிமைத் தனத்தின் இருந்து விலக்கி சுதந்திரமானவனாக்கி, சம வாய்ப்புளை வழங்குவதன் மூலம் அவன் வளம் பெற்று மகிழ்சியடைவான். அவ்வாறான பல தனி நபர்களின் மகிழ்ச்சிகள் ஒன்று சேர அது அச் சமூகமே மகிழ்வடைந்ததாக அமையும் என்றார்.
    5. Utility = happiness = சந்தோசத்தை அடைய நான்கு இலக்குகளை அவர் கூறினார். அவை Subsistence – வாழ்வாதாரதை உறுதிசெய்தல், Abudiance – விளைவு அதிகமானோரைச் சென்றடைதல் Equality – சமத்துவம் Security – பாதுகாப்பு.
    6. பெந்தத்தின் கொள்கைக்கு எதிரான விமர்சனங்களாக தனி நபரிற்கானா தற்றுணிவின் தேவையைக் கருத்தில் கொள்ளாததும், சமூக நலன் – தனி நபர் நலனை சமனிலைப் படுத்த தவறியதும் காணப்படுகின்றன.
  3. ஜான் ஒஸ்டின்
    1. இவர் பெந்தமின் மாணவராவார்.
    2. இவர் எனும் Province of Jurisprudence Determined (1832) புத்தகத்தை எழுதியவர்.
    3. Utilitarianisum கொள்கையுடைய இவர், சட்டம் மக்களின் அதிகம் பேரை மகிழ்ச்சிப் படுத்துவதாக அமைய வேண்டும் என்றார்.
      ழ மக்களின் பெரும்பகுதியின் மகிழ்வை அல்லது வலியை,  Pleasure Pain Principle – இன்பம்-வலி கோட்பாட்டால் உய்த்தறியலாம் என்றார். (பெந்தமும் இக் கருத்தக் கொண்டவர்).இதுவே விஞ்ஞான முறைமை என கருதினார்.
    4. பொதுச் சட்டத்தின் பலவீனத்தை ஈடு செய்ய, அது இன்பம்-வலி கோட்பாட்டால் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கூறினார்.
    5. இவர் சட்டத்தை முறைசாரா விதத்தில் (Improperly) பின்வருமாறு பிரிக்கலாம் என்று கூறினார்.
      1. Law by Analogy  (identifying two things as similar) / Law by Fashion -> Positive morality
      2. Law by metaphor (a comparison where there may not be one) / Law of Science -> Positive Law
    6. இவர் சட்டத்தை முறைசாரா விதத்தில் (Properly) பின்வருமாறு பிரிக்கலாம் என்று கூறினார்.
      1. Gods Law -> Positive morality
      2. Man Made Low
        1. Enacted by Sovereign / Competent Authority – Positive Law (Act of parliament) 
        2. Enacted by others, not political superiors -> Positive Morality
    7. ஒஸ்டின் அரசியல் உயர் அதிகாரம் பெற்ற இறைமையால், அதன் கீழ் வரும் மக்களுக்கு இயற்றப்படும் கட்டளை (Command) பகுதறிவாதம் என்று வரையரை செய்தார். அச் சட்டங்ளில் தண்டனைகளால் பிணிக்கபட்டிருக்கும் (Backed by sanction) என்றும் அவர் கூறினார்.
    8. அவர் கட்டளைகளின் பின்வரும் தன்மைகளையுடையது என்றார்
      1. ஒன்றைச் செய்ய அல்லது செய்யத் தடுக்கும் அரசியல் உயர் அதிகாரத்தின் (Political Superior / Sovereign   ) விருப்பம்
      2. அவ்வாறு நடந்தொழுகாவிட்டால் தண்டனை கிடைக்கும்
      3. அரசியல் உயர் அதிகாரத்தின் விருப்பம் எழுதபட்டதாக அல்லது வேறுவிதமாக இருக்கலாம்.
    9. இவர் இறைமைக்கு (Sovereign) இரண்டு தன்மைகள் காணப்படும் என்றார்
      1. இறைமை பெருவாரியாக மக்கள் கூட்டத்தால் கீழ்படியப்படும் வழமையைக் கொண்டிருக்கும்
      2. இறைமை வேறெந்த நபருக்கோ, அமைப்புக்கோ கீழ்படியாத வழமையைக் கொண்டிருக்கும்
    10. ஒஸ்டினின் மூலக் கருதுக்களும் அவற்றிற்கான எதிர் எதிர்க்கருத்தும்
      1. கருத்து : கட்டளைகளை யாவும் பின்பற்ற வேண்டியவை. தவறுகையில் தண்டனை கிடைக்கும்.
        எதிர்க்கருத்து : கடமைகளைச் சுமத்தும் சட்டங்களும், அதிகாரங்களைக் கொடுக்கும் சட்டங்களும் காணப்படுகின்றன. நடவடி முறை (Procedural) சட்டங்கள் காணபடுகின்றன அரசியலமைப்பில் பிணிக்கும் தன்மையற்ற சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. (உ.ம் – வழிகாட்டும் தத்துவம்). (ஒஸ்டின் அரசியலமைப்பை Positive Morality என்றார்.)
        மேலும் விதிவிலக்குகள் அல்லது சலுகைகளை காணப்படும் போது, சட்டத்தைத் பின்பற்றத் தவறும் போது தண்டனை கிடைக்காது. (உ.ம் – விடுபாட்டு உரிமை, பொதுமன்னிப்பு அளிக்கும் உரிமை)
      2. கருத்து : கட்டளைகள் தண்டனைகளுடன் சேர்ந்தே இருக்கும், தண்டனைகளே மக்களை அதற்கு அடிபணிய வைக்கும்.
        எதிர்க்கருத்து : சட்டத்தை மக்கள் தண்டனைக்கு பயந்து மாத்திரம் பின்பற்றுவதில்லை, அவற்றை மக்கள் சிறந்த சமூக நியமங்களாக கருதியும், சமூக நலனுக்காக விருப்பத்துடனும் பின்பற்றுவர்.
      3. கருத்து : சட்டம் எழுதப்பட்டது மற்றும் வரையறை செய்யபட்டதுமாகும்.
        எதிர்க்கருத்து : வழக்காற்றுச் சட்டம், பொதுச் சட்டம், நீதிபதிகள் இயற்றும் சட்டம் போன்ற எழுதபடாத சட்டங்கள் காணப்படுகின்றன. (இவை மறைமுகமான, அமைதியான கட்டளைகள் (Tacit Commands) என ஒஸ்டின் கூறினார்). சட்டத்தில் சில கோட்பாடுகளின் பிரயோகம் (principle of equity) சட்ட விதிகளை சுதந்திரமாக பொருள்கோடல் செய்ய உதவுகிறது.
      4. கருத்து : சட்டத்திற்கும், ஒழுக்க விழுமியதிற்கும் தொடர்பில்லை.
        எதிர்க்கருத்து : சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் அதிகமான சமூக விழுமியங்கள் சட்டமாக பரிண்மிக்கின்றன. ஒப்புரவின் பிரயோகம் அடிப்படை ஒரு சமூக விழுமியத்தின் உந்துதலே.
      5. கருத்து : இறைமை அறுதியானாது (Absolute) வேறெந்த நபருக்கோ, அமைப்புக்கோ, சட்டங்களுக்கோ கட்டுப்படாதவை
        எதிர்க்கருத்து : நடைமுறையில் அவ்வாறு இல்லை. நாடுகள் சர்வதேச சட்டங்களுக்கு, பொருத்தனைகளுக்கு, சர்வதேச நிறுவனங்களுக்கு (UN / UN Security Council, IMF)இ கட்டுப்படுபவையாக இருக்கும்.
      6. கருத்து : இறைமை வரையறைகள் அற்றது (illimitable)
        எதிர்க்கருத்து : நடைமுறையிலுள்ள அரசியலமைப்புச் சட்டங்களில் அவ்வாறு இல்லை, சில வகைச் சட்டங்கள் இயற்றவும், மாற்றவும் கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணம் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டம்.
        சில இறைமைகள், வழக்காற்றுச் சட்டத்திற்க்கு உட்பட்டே சட்டமியற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டதாகும்.
      7. கருத்து : இறைமை வகுபட முடியாதது (Indivisible)
        எதிர்க்கருத்து : நடைமுறையிலுள்ள அரசியலமைப்புச் சட்டங்களில் அவ்வாறு இல்லை, மானில அரசியலமைப்பு முறை அதிகாரத்தைப் பகிர்வதாய் உள்ளது.
      8. கருத்து : சட்டம் இறைமையின் விருப்பம் (இறைமையால் இயற்றபடுவது)
        எதிர்க்கருத்து : சர்வதேசச் சட்டங்கள் அவ்வாறு இயற்றப்படுவது அல்ல. ஒஸ்டின் இதை Positive Morality என்றார்.
    11. ஒஸ்டினின் கருத்தில் பல குறைபாடுகளுடன் தற்காலத்திற்கு பொருத்தமற்றதாக காணப்படுகிறது. இருந்தாலும் கலக்கமான, தெளிவற்ற இயற்கைச் சட்டத்தை விடவும் சட்டவியலாளர்கள் Positive Law இல் கவனம் எடுக்கவேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
    12. இலங்கையில் அதிகாரப் பகிர்வு இறைமைக்குப் பங்கத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கருதுவது ஒஸ்டினின் கருத்தை பிரதிபலிப்பனவாக இருக்கின்றது.
  4. எச் எல் ஏ ஹார்ட்
    1. இவர் Province of Jurisprudence Determined (1832) எனும் புத்தகத்தை எழுதியவராவார்.
    2. அதில் அவர் சட்ட முறைமை என்பது ஒரு சமூக விதிகளின் (Social Rules) முறைமை என்றார்.
    3. அவ் விதிகள் (Rules) சில நடத்தைகளைக் கட்டாயமாக்கும்.
    4. அவ் விதிகள் ஒஸ்டின் கூறும் கட்டளைகளுக்கு (Commands) மாற்றமானதாகும்
    5. அவ் விதிகள் மக்களால் எற்றுக்கொள்ளப்பட்ட நியமமான நடத்தைக் கோலங்களகும்.
    6. அவ் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற சமூக அழுத்தமும் காணப்படும்.
    7. இவற்றை அவர் சட்டத்தில் “உள்ளார்ந்த அமிசம்” (Internal Aspects) என்கிறார்.
    8. சட்டத்தின் வெளிவாரியான அம்சம் (External Aspects), அதை மூன்றாம் நபர் எவ்வாறு நோக்குகிறார் என்பதாகும். சட்டத்தை மக்கள் உள்ளார்ந்த அம்சத்தை நோக்கியே மக்கள் பின்பற்றுகின்றனர் என்று அவர் கருதினார். இவரின் இக் கருத்து நாகரீகமடைந்த சமூகத்திற்கே பொருத்தமானதாக இருக்கும்.
    9. H L A Hard தனது Concept of Law புத்தகத்தில் புலனறிவாதம் பற்றிக் பின்வரும் கருத்தேற்ப்புக்களைக் குறிப்பிடுகிறார்
      1. சட்டம் மனிதர்களின் கட்டளைகள் ஆகும்.
      2. சட்டத்திற்க்கும் ஒழுக்க விழுமியம் மற்றும் நியமமான சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் (ought to be) என்பதற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
      3. சட்டவியல் தொடர்பான கற்கை அல்லது ஆய்வை,
        1. சட்டத்தின் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் இருந்தும்,
        2. சட்டத்தை ஒழுக்க விழுமியத்துடன், சமூக நோக்கங்களுடன் தொடர்புறுத்தி செய்யப்படும் ஆய்வுகளில் இருந்தும் வேறுபடுத்தி நோக்க வேண்டும்.
      4. சட்ட அமைப்பானது (Legal System) வரையறை செய்யப்பட்ட தர்க்கரீதியான அமைப்பாகும். முறையாக சட்ட விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சரியான முடிவினைப் பெற்றுக் கொள்ளலாம்.
      5. ஒழுக்க விழுமியம் சார்ந்த தீர்ப்புக்களை, உண்மை நிகழ்வுகள் மூலமாகவோ, பகுத்தறிவு வாதத்தின் மூலமோ, ஆதாரங்கள் மூலமோ நிறுவ முடியாது.
    10. பெந்தமும் ஒஸ்டீனும் ஹார்ட்டின் 1,2,3ம் கருத்துக்களுடனும், கெல்சன் 2,3,5ம் கருத்துக்களுடனும் உடன்படுகின்றனர்.
    11. மேலும் வளர்ச்சியடைந்த சமூகத்தின் சட்ட முறைமையில் காணப்படும் விதிகளை இரு வகையாக பிரிக்கலாம் என்றார்
      1. அடிப்படை விதிகள் (Primary)
      2. துணை நிலை விதிகள் (Secondary)
        1. Rules of adjudication  – விசாரணை முறைமை தொடர்பான விதிகள்
        2. Rules of changes –  விதிகளை மாற்றம் செய்வதற்கான விதிகள்
        3. Rules of Recognition –  விதிகளை அடையாளம் காண்பதற்கான விதிகள்
    12. ஹார்ட் ஒரு புலனறிவாதியாக (Positivist) இருந்த போதும், சட்டத்திற்க்கும் ஒழுக்க விழுமியத்துக்கும் சிறியளவான பொதுமைப்பாடு உள்ளது என அவர் ஏற்றுக் கொண்டார்.
    13. சட்ட முறைமையில், அடிப்படை (Core) சட்டவிதிகள், தெளிவானதும் வரையறை செய்யப்பட்டதுமாகும். அவற்றை விளங்கிக் கொள்ள வழிகாட்டல்கள் (Guidance) தேவைப்படாது.
    14. அதே வேளை, சில துணைநிலை விடயங்களில் நீதிபதிகள் தாங்களது தற்றுணிவைப் பயன்படுத்தி பொருள்கோடல் செய்கின்றனர். அவற்றை இவர் Penumbra என்று அழைத்தார்.
    15. இவ்வாறு இவரது கருத்துக்கள் ஒஸ்டினின் கருத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்தி செய்யும் வகையில் அமைந்தன.
    16. இறைமை (sovereign) பற்றி ஹார்ட் பெரிதாக கருத்துவெளியிடவில்லை.
    17. ஹாண்ஸ் கெல்சன்-> ஹார்ட் இன் ஒஸ்டினின் கருத்திற்கு எதிரான சட்டம் என்பது வெறுமனே கட்டளைகள் அல்ல என்றும், அதற்கு ஒரு படி நிலை (Hierarchy) உண்டு என்றும் கூறினார்.
    18. றொனால்ட் டுவொகின் இன் ஹார்ட்க்கு கருதுக்கு எதிரான கருத்துகள்
      1. இவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் சட்டவியல் பேராசிரியரான இவர், Taking Rights Seriously எனும் புத்தகத்தை எழுதி ஹாட்டின் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தினார்.
      2. ஒஸ்டின் கூறுவது போல் எது சட்டம் எது சட்டம் அல்ல என்று என்பதை ஊய்த்தறியும் செய்யும் அளவுகோல் ஒன்றை வரையறை செய்ய முடியாது என்றார்.
      3. சட்டமுறைமையில் விதிகள் மட்டும் இன்றி கோட்பாடுகளும் (Principles) இருக்கின்றன, அவை நேர்மையான நீதியின் நியமங்கள் (justice of fairness) அல்லது ஒழுக்கவிழுமியத்தின் (Morality) ஒரு வெளிப்பாடு என்றார். அக் கோட்பாடுகளே உரிமைகளை வரையறை செய்ய உதவி செய்து, வழக்குகளின் தீர்ப்பிற்கான காரணங்களை வழங்குகிறது என்றார் (Reason for the decissions of judgmenment).
      4. இக் கோட்பாடுகள் (Principles) சட்டத்தின் அளவிற்;கு தரம் உயர்ந்ததாக இல்லாவிட்டாலும் இது முக்கியமாக கவனம் எடுக்கப்பட வேண்டிய விடயம் என்றார்.
      5. கோட்பாடுகளின் முக்கியதுவத்தை பிரயோத்தை விளக்கும் வழக்குகள்
        1. Riggse V. Palmer  – ஆதனச் சொந்தகாரரைக் கொன்ற வழியுரித்தாளர், ஆதனத்தைப் பொதுச் சட்ட கோட்பாடுகளின் படி பெறமாடார்.
        2. Hennigsen V Bloomfield Motors Inc –  வாகனத்தில் உள்ள உற்பத்தி பிழைகளால் வரும் சேததிற்கு அதன் உற்பத்தியாளர் பொறுப்பாகமாடார் எனும் ஒப்பந்தத்தின்படி வாங்கிய வாகானம், உற்பத்தி பிழைகளால் விபத்துக்குள்ளாகியது. நட்ட ஈடு கோர சட்ட ரீதியா முடியாது என்றாலும், பொருளாதாரத் தேவை நிமிர்த்தம் நேர்மையற்ற அனுகூலம் அடையமுடியாது எனும் கோட்பாட்டின் அடிப்படையில் நட்ட ஈடு வழ்ங்கப்பட்டது.
        3. Suntheralingam V. AG – 1946 ஆண்டின் அரசியலமைப்பை மாற்றும் செயல் சிறுபான்மைக் காப்பீட்டு ஏற்பாட்டை இல்லாமால் செய்யும் என்பதால் அதை தடுக்கும் ஆணையைக் கோரி வழக்கிடப்பட்டது. இங்கு இயற்றப்படாத சட்டம் தொடர்பில் உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் புதிய அரசியலமைப்பு வந்தால், இவ் வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதிமன்றத்திற்க்கு இராது என்றும், இவ் வழக்கை புலனறிவாதம் அடிப்படையில் பார்க்காமல் ஒப்புரவு கோட்பாட்டின் அடிப்படையில் நோக்குமாறு வாதிடபட்டது. (இது கருத்தில் கொள்ளப்படவில்லை)
    19. ஹார்ட் (புலனறிவாதம்) Vs புல்லர் (இயற்கைச் சட்டம்) விவாதம்
      1. ஹார்ட் – ஒழுக்க விழுமியமும் சட்டமும் வேறு வேறானவை.
        புல்லர் : ஒழுக்க விழுமியம் பிணிக்கும் தன்மையுள்ள சட்டத்திம் மூலகமாகும்.
      2. ஹார்ட் – ஒழுக்க விழுமியத்திற்கும், சட்ட முறைமைக்கும் தொடர்பு அவசியமில்லை உ.ம் நாசிக்களின் சட்டமும் ஒரு சட்ட முறைமையாக இருந்தது.
        புல்லர் : இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், நாசிக்களின் சட்டம் சட்டம் அல்ல என தீர்பளிக்கபட்டுள்ளது
      3. ஹார்ட் – எது சட்டம் என்ற விடயம், எது ஒழுக்க விழுமியம் என்ற விடயதில் இருந்து வேறானவை.
        புல்லர் : சட்டமும் ஒழுக்க விழுமியமும் முறையாக பிரிக்க முடியாதவை.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.