Jurisprudence
About Lesson

Lesson 3 : Sociological School
by Azaam Ameer (Last Updated : 13 Sep 2022)

  1. அறிமுகம்
    1. சமூகவியலின் மையப்புள்ளி சமூகமாகும்
    2. சமூகவியல் கற்கையானது சமூகம், மனித நடவடிக்கை, சமூக மாற்றம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
    3. சமூகவியல் சிந்தனைப் பள்ளியானது சட்டமும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்றும்
    4. சட்டம் என்பது சமூகத்தின் நடத்தை கோலம் என்றும் கூறுகிறது.
    5. இச்சிந்தனைப்பள்ளி சமூக நடத்தை கோலங்களில் இருந்தே சட்டத்தை விளங்கிக் கொள்ள முயல்கிறது
    6. சமூக அமைப்பை அதன் நிலையை பேண சட்டம் உதவுகிறது என்பதும்,
    7. மனித தேவைகளுக்காக எவ்வாறு வெவ்வேறு பொருட்க்களை கண்டுபிடிக்கபடுகின்றதோ, அதே போல் சமூக தேவைக்காக சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
    8. இச்சிந்தனைப்பள்ளி புலனறிவாதம், வரலாற்றுச் சிந்தனைப் பள்ளிகளை முற்றாக மறுதலிக்கிறது.
    9. இங்கு சட்டத்தின் உள்ளார்ந்த தன்மையில் கவனம் செலுத்தாமல் அது சமூகத்தில் எவ்வாறு செயற்படுகிறது (Functionality) என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படும்.
    10. இச் சித்தார்ந்தம், Laissez-Faire எனும் தனிநபர் நலணோங்கும் கோட்பாட்டின் எதிரொலியாக தோன்றியது எனலாம்.
    11. இது அரசின் சமூக நல வேலைத்திட்டங்களுக்கும் தனிநபர் அக்கறைகளுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க எத்தனிக்கிறது.
  2. Auguste Comtet  (Scientific Approach)
    1. சமூகவியல் விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
    2. இவரது சமூகவியலுக்கான விஞ்ஞான அனுகுமுறைமை, விஞ்ஞான புலனறிவாதம் என அழைக்கபடுகிறது.
    3. அவதானம், அனுபவங்கள் போன்ற விஞ்ஞானக் கோட்பாடுகளால் சமூகம் வழிநடாத்தப் படுகையில் அச் சமூகம் முன்னேற்றமடையும் என்றார்.
  3. Herbert Spencer – (Organic Theory of Society)
    1. சமூகத்தின் பரிணாம வளர்ச்சி சமூகவியலிலும் காணப்படும்.
    2. சமூகத்தின் பல்வேறு அங்கங்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருப்பதும், ஒன்றுடன் ஒன்று தங்கியிருப்பதும், சட்டமுறைமை வெறுமனே இறைமை இடும் கட்டளை மற்றும் அதை பின்பற்றுபவர்கள் எனும் (புலனறிவாத) கோட்பாட்டை விடவும் மிக விரிவானதாகும்.
    3. அதாவது சமூகத்திக்கும் அதன் நடத்தைக் கோலத்திற்குமான தொடர்பு சுட்டிக் காட்டப்படுகிறது.
  4. Jhering – (Jurisprudence of Interest is society | Social Utilitarianism)
    1. author of “Sprite of Law”  – நவீன சமூகவியல் பள்ளியின் தந்தை.
    2. Laissez-Faire  எனும் தனிநபர் நலனோங்கும் கோட்பாட்க்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தார்.
    3. சமூக வேட்கையின் (Struggle – போராட்டத்தின் ) வெளிப்பாடே சட்டமாகும் அது தனிநபர் நலன் மற்றும் சமூக நலன்களில் ஒத்திசைவை உண்டுபண்ணுகிறது.
    4. சமூகத் தேவையை நிறைவேற்றவே சட்டம் காணப்படுகிறது. சமூக நலனை மேன்படுத்தல் அரசின் கடமையாகும் என்பதுடன், சட்டம் என்பது அக் கடமையில் செயல் வடிவமாகும்.
    5. சமூகத்தைக் கட்டுப்படுத்தும் விடயங்கள் பல உள்ளன, அவற்றில் ஒன்றே சட்டமாகும், பெந்தமின் தனிநபர் இன்ப வலிக் கோட்பாடு சமூகதிற்கானது என்றார். அதனல் இவரது இக் கோட்பாடு Social Utilitarianism என்று அழைகபடுகிறது.
  5. Ehrlich – Living Law
    1. Founder of Sociology of Law
    2. சமூகம் என்பது மனிதர்களின் கூட்டமைப்பு, அதுவே சட்டத்தின் பிரதான மூலகம்.
    3. Law is found to be in social fact – சட்ட அபிவிருத்தியின் மையப் புள்ளி, சட்டவாக்கமோ, நீதித் தீர்ப்புக்களோ அல்ல, அது சமூகமே ஆகும்.
    4. Living Law – சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளான திருமணம், ஒப்பந்தம், குடும்ப வாழ்க்கை என்பவற்றில் இருந்தே தோற்றம் பெறுகிறது. சமூக வாழ்வியல் நடைமுறைகள் வாழும் சட்டங்களால் நெறிமுறைப்படுத்தபடுகிறது. (எனவே உண்மையான சட்டம் நியதிச் சட்டமோ, தீர்ப்புச் சட்டமோ அல்ல, அது சமூக நடவடிக்கைகளாகும்). உதாரணமாக இந்தியாவில் சீதனம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், மக்கள் அதை கருத்தில் கொள்ளாமல், அதனைக் பின்பற்றுவதைக் கூறலாம்.
    5. விமர்சனம் : சட்டத்திக்கும் ஏனய சமூக நடைமுறைகளுக்கும் தெளிவான வித்தியாசம் காணப்படாமை.
  6. Roscoe Pound  (Functional Aspect of Law |  Social Engineering)
    1. சட்டத்தை அறிய, இயற்றப்பட்ட சட்டத்தில் எவ்வாறு உள்ளது என ஆராயாமல், அது எவ்வாறு தொழிற்படுகிறது என ஆராய வேண்டும்.
    2. இவர் ளுழஉயைட Social Engineering கொள்கையை வகுத்தவர் ஆவார்.
    3. சட்டம் என்பது விதிகள், கோட்பாடுகள், கருத்தேற்ப்புகள், நியமங்கள் காணப்படும் ஒரு சமூகப் பொறியியல் முறைமையாகும்.
    4. Social Engineering – பொறியியலாளர்கள் எவ்வாறு மக்களுக்கு தேவையான உற்பத்திகளை மேற்கொள்கிறார்களோ, அதே போல் சமூகப் பொறியியலாளர்களும் , சமூகத்தின் அதி உச்ச மகிழ்ச்சியை வழங்கும் வகையில் கட்டமைப்பு முறைமைகளை உருவாக்க வேண்டும்.Social Engineering  என்றால் சமூகத்தின் போட்டியிடும் அக்கறைகளுகிடையில் ; (Public, Private and Social Interests) சமனிலையைப் பேணுவதாகும். (உதாரணமாக அடிப்படை உரிமைகளான பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன வழங்கப்பட்டு இருப்பதும், தேசிய பாதுகாப்பு, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவை மட்டுப்படுத்தபடாலாம் என்பதும் போட்டியிடும் அக்கறைகளுக்கான சமனிலையாக காணலாம்)
    5. Public interest -> Enviornment, public properties, public employment, trust
    6. Private interest -> Protected by crime, torts, contract law
    7. Social Interests – > General peace, health, politics, religion, economic
    8. எல்லா சமூகதிலும் அதன் இருப்பை தக்கவைக்கும் அடிப்படை அம்சங்களுக்கான எடுகோள்கள் காணப்படும். உதாரணமாக, குற்றத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் அக்கறை, சொத்துக்கள், ஒப்பந்தம், தீங்கியல், கடும் பொறுப்புடமை தொடர்பான அக்கறைகள்.
  7. Conclusion
    1. சட்டம் சமூகம் தொடர்பாகவே அனுகப்பட வேண்டும்.
    2. சட்டத்தின் மையபுள்ளி ஏலவேயுள்ள அதன் நடத்தைக் கோலங்கள்
    3. சட்டம் சமூதய இருப்பை அல்லது அமைப்பைப் பாதுகாக்க, மாறுபட்ட அக்கறைகளுக்கிடையில் சமநிலையை உருவாக்கி, அதனை வளப்படுத்தும் ஒரு கருவியாகும்.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.