About Lesson
Lesson 8: The Economic Approach to Law (Marxism) – பொருளாதார நோக்கில் சட்டம் (மாக்ஸிஸம்)
by Azaam Ameer (Last Updated : 15 Dec 2022)
-
- கால்மாக்ஸ் இனாலும் ஏங்கிள் என்பவராலும் எடுத்தியம்பப்பட்ட இக் கொள்கையனது அடிப்படையில் ஒரு பொருளாதார அரசியல் கொள்கையாகும்.
- இக் கொள்கையின் அடிப்படையில் புரட்சிகள் மூலம் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் புதிய அரசுகள் தோற்றம் பெற்றன. இருப்பினும் வெவ்வேறு நாடுகளில் இக் கொள்கைக்கு வேறுபட்ட வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.
- உலகம் பெருள்சார் விடயத்தில் (Material world) பிணிக்கபட்ட ஒன்று என்றும் இயற்கையில் பொருளாதாரம் முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி நகர்ந்து ஒன்று சேரும் என்பதும் இக் கொள்கை அடிப்படை நம்பிக்கையாகும்.
- முதலாளித்துவ வாதிகள் எனும் ஒரு வர்க்கமும் (Thesis / Bourgeois ), தொழிலாளர் என்ற வர்க்கமும் (Synthesis / Proletarian) சமூகத்தில் காணப்படும். இவர்களுக்குகிடையில் பொருளாதாரத்திற்கான போராட்டம் நிகழ்ளும். இது Antithesis / Dialectical Materialism என்று அழைக்கபடும்.
- இப் போராட்டத்திற்கான வரலாற்றுப் படிமுறை பின்வருமாறு அமையும்
- முதலாளித்துவத்திற்கு முன்னரான காலம் – பொருட்கள் மக்களிடையே சமமாக பகிரப்பட்டு வந்தது. இனத்துவ, ஒழுக்கவியல், சமூக அழுத்தங்கள் காரணமாக சமூகக் கட்டுப்பாடு நிலவி வந்தது. காலம் செல்லச் செல்ல பொருளாதாரம் நகர்ந்து முதலாளி தொழிலாளி வார்க்கம் தோன்றின.
- முதலாலித்துவ காலம் – சிறிய தொகையினைக் கொண்ட முதலாளி வர்க்கம் பெரிய தொகையினைக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆளுகை செலுத்தியது.
- சோசியலிச காலம் – தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்து தொழிலாளர் சர்வதிகார (Proletarian Dictatorship) ஆட்சியை நிறுவினர். “from each according to his ability to each according to his need” என்ற மூதுரைக்கு அமைவாக வளங்கள் பகிரப்படும். இதை ஜனநாயகத்தின் அதி உச்ச நிலை (Highest Democracy) என்று அழைத்தனர். நாளடைவில் இது சமூக ஏற்றத் தாழ்வை இல்லாதாகும், அதனால் தொழிலாளர்களின் சர்வதிகார ஆட்சி இல்லது போகும். வர்க்க வேறுபாடு இல்லாதொழியும். சட்டதிற்கும் அரசிற்குமான தேவைப்பாடு இல்லாதொழியும்.
- இக் கொள்கையில் சட்டம் என்பது முதலாளி வர்க்கம் தொழிலாளில் மீதி ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தும் கருவியாகும் என கொள்ளப்படுகிறது. ஆதலால் வர்க்க வேறுபாடு ஒழியும் போது சட்டமும் இல்லாதொழிந்துவிடும்.
- விளைவுகளின் (Production) உரிமையினை தனி நபர் உரிமையில் இருந்து கூட்டு உரிமைக்கு மாற்றும் போது அச் சமூகக் கட்டமைப்பு முதலாளிதுவத்தில் இருந்து சோஸியலிசத்திற்கு மாற்றம் பெறும்.
- முதலாளித்துவ அமைப்பில் சட்டம் ஆளும் வர்க்கத்தை அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை பாதுக்கப்பதற்க்கும் அதன் நலனை மேலோங்குவதற்க்குமே பயன்படும். மாறாக சோசியலிச அமைப்பில் சட்டம் வர்க்க வேறுபாட்டை நீக்கும் கருவியாக தொழிற்படும். மேலும் வர்க்க வேறுபாடு ஒழியும் போது சட்டமும் இல்லாதொழிந்துவிடும்.
- முதலாளித்துவ அமைப்போ சோசியலிச அமைப்போ இரு படிநிலைகளில் காணப்படும் :
- அடிப்படை (Base) – பொருளாதாரத்தை நோக்காக கொண்ட உட்கட்டமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்ப்பம், உற்பத்தியின் உரிமைகள், மக்களுக்கான கட்டுப்பாடுகள் போன்ற அடிப்படை அமைப்புகள் காணப்படும்.
- மேன்நிலை (Superstructure) – அடிப்படை அமைப்புக்கு ஏதுவான அல்லது உதவக கூடிய உயர்மட்ட அமைப்புகள். இதில் சட்டம், அரசியல், சமயம் உள்ளடங்கி இருக்கும்.
- மாக்சிஸமானது, சட்ட ஆட்சி (rule of law), சட்டதின் நடுநிலை (neutral body), அடிப்படை உரிமைகள் (Rights) என்பவற்றை நிராகரிகின்றது. இவை அனைத்தும் முதலாளித்துவத்தின் அடக்குமுறைக்கான கருவிகள் என கருதுகிறது. மேலும் வர்க்க வேறுபாடற்ற சமூக அமைப்பில் உரிமைகளுக்கான தேவைப்பாடு இருக்காது என கூறுகிறது.
- மாக்ஸியத்தின் சட்டத் தத்துவம் 4 கோட்பாடுகளைக் கொண்டது.
- Doctrine of the economic determination of Law – சட்டம் பொருளாதாரத்தை கையாளும் மேன்நிலை அமைப்பின் முக்கிய பாகமாகும்
- Doctrine of the class character on of Law – சட்டமானது ஆளும் வர்க்கத்தினால் விடயங்களைக் (தொழிலாளர் வர்க்கத்தை) கட்டுப்படுத்த பயன்படுத்தும் கருவியாகும்.
- Doctrine of the identity of Law and State – பொருட்களின் சமனற்ற பங்கீடு வரும் காணப்படும் போதே அங்கு அரசு மற்றும் சட்டத்திற்கான தேவை உருவாகிறது. ஆளும் வர்க்கம் தங்களது சொத்துக்களைப் பாதுக்காக்க அரசையும், சட்டத்தையும் பயன்படுத்துவார்கள்
- Doctrine of withering away of the Law and state – வர்க்க வேறுபாடு அகலும் போது அரசு மற்றும் சட்டத்திற்கான தேவைப்பாடு இல்லாததாகிவிடும்.
- சோவியத் சட்டவியலளர்கள் மாக்ஸிய தத்துவத்திற்க்கு அமைவான சட்டக் கொள்கைகளை வகுத்தனர். அதில் சட்டம் தனி நபர் தொடர்பானதாகவும் பொருட்களை தனி நபர்களுக்கிடையில் பண்டமாற்றீடு செய்வது தொடர்பாகவும் அமைய வேண்டும் என்று கூறினர். எவ்வாறெனினும் சட்டம் முதலாளி வர்க்கத்தின் ஒரு கருவி என்றே கருதப்பட்டது
- இருப்பின் பின்னரான காலத்தில் இக் கொள்கை விஷிஸ்கி என்பவரால் மாற்றியமைக்கப்பட்டது. இங்கு சட்டதின் மூலம் மாக்ஸ்சிசத்தை அல்லது வர்க்க வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என அவர் வாதிட்டார்.
- விமர்சனம்
- மாக்ஸிசம் மனிதனது உண்மைத் தன்மையை புரியத் தவறியது – வழங்கள் சமமாக பகிரப்படல் என்பது மாத்திரமா மனிதனது தேவை?
- தொழிளாலர் வர்க்கமும் ஆட்சிக்கு வருகையில் ஊழல் மோசடி உள்ளதாக மாறலாம்
- சட்டம் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கியாளும் கருவி மட்டுமே என்பது தவறாகும்
- சட்டம் தொழிலாளர் வர்க்கத்தை பாதுக்கக்கவும் பயன்படுகிறது
- சட்டம் தனியார் சட்டம், தீங்கியல், குற்றவியல் போன்ற வேறு விடயங்களையும் கையாளுகிறது
- கொமினிச அரசின் பின் அரசும் சட்டமும் இல்லது போகும் என்பது தவறாகும். அந் நாடுகளில் சந்தைப் பொருளாதாரம் உருவாகியுள்ளது.
- 20ஆம் நூற்றாண்டின் நவீன மாற்றங்களை அனுமானிக்கத் தவறியுள்ளது. – வேலையற்றோர் பிரச்சினை, நடுத்தர வர்க்க மக்கள்
Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.